என் மலர்
நீங்கள் தேடியது "Parihara temples"
- சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட திருத்தலங்கள் ‘அட்டவீரட்ட தலங்கள்’ என்று போற்றப்படுகின்றன.
- இந்த ஆலயங்களுக்கு உங்கள் ராசிக்கு யோக பலம் பெற்ற நாளில் சென்று வழிபட வேண்டும்.
சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட 8 திருத்தலங்கள் 'அட்டவீரட்ட தலங்கள்' என்று போற்றப்படுகின்றன. அந்த ஆலயங்களுக்கு உங்கள் ராசிக்கு யோக பலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். தலங்கள் உள்ள ஊர் மற்றும் அதன் சிறப்புகள் வருமாறு:-
1. திருக்கடையூர் - எமதர்மனை காலால் உதைத்தது
2. திருக்கண்டியூர் - பிரம்மனின் தலையைக் கொய்தது
3. திருவதிகை - திரிபுரத்தை எரித்தது
4. திருவழுவூர் - யானையின் தோலை உரித்தது
5. திருப்பறியலுார் - தட்சனை சம்ஹாரம் செய்தது
6. திருக்கோவிலுார் - அந்தகாசுரனை வதம் செய்தது
7. திருக்குறுக்கை - மன்மதனை எரித்தது
8. திருவிற்குடி - ஜலந்தராசுரனை வதம் செய்தது
- கும்பகோணத்தில் நவக்கிரக தோஷம் நீங்க, திருமணத் தடை அகல என்று பலவிதமான பிரச்சினைகளுக்கும் ஆலயங்கள் இருக்கின்றன.
- கும்பகோணத்தில் எந்த பிரச்சனை தீர எந்த கோவிலை வழிபட வேண்டும் என்று பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் ஆலயங்கள் கொண்ட நகரங்கள் பல இருக்கின்றன. அவற்றில் காஞ்சிபுரமும், கும்பகோணமும் முக்கியமானவை. இந்த இரண்டு நகரங்களிலும் உள்ள கோவில்களின் எண்ணிக்கை ஏராளம். அவற்றிலும் கும்பகோணம் தோஷங்களைப் போக்கும் ஆலயங்களை அதிகமாகக் கொண்டிருக்கிறது. இங்கு நவக்கிரக தோஷம் நீங்க, திருமணத் தடை அகல என்று பலவிதமான பிரச்சினைகளுக்கும் ஆலயங்கள் இருக்கின்றன. குழந்தைப் பிறப்பு முதல் சதாபிஷேகம் வரை பலனடைய கும்பகோணத்தில் கோவில்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
கரு உருவாக (புத்திரபாக்கியம்) - கருவளர்ச்சேரி
கரு பாதுகாத்து சுகப்பிரசவம் பெற - திருக்கருக்காவூர்
நோயற்ற வாழ்வு பெறுவதற்கு - வைத்தீஸ்வரன் கோவில்
ஞானம் பெற - சுவாமிமலை
கல்வி மற்றும் கலைகள் வளர்ச்சிக்கு - கூத்தனூர்
எடுத்த காரியம் வெற்றி பெற - பட்டீஸ்வரம்
உயர் பதவியை அடைய - கும்பகோணம் பிரம்மன் கோவில்
செல்வம் பெறுவதற்கு - உப்பிலியப்பன் கோவில்
கடன் நிவர்த்தி பெற - திருச்சேறை சரபரமேஸ்வரர்
இழந்த செல்வத்தை மீண்டும் பெற - திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி
பெண்களுக்கு ருது பிரச்சினை தீர - கும்பகோணம் காசி விஸ்வநாதர் (நவ கன்னிகை)
திருமணத்தடைகள் நீங்க - திருமணஞ்சேரி
நல்ல கணவனை அடைய - கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் உடனாய மங்களாம்பிகை
மனைவி, கணவன் ஒற்றுமை பெற - திருச்சத்திமுற்றம்
பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர - திருவலஞ்சுழி
பில்லி சூனியம் செய்வினை நீக்க - அய்யாவாடி ஸ்ரீ பிரத்தியங்கிர தேவி
கோர்ட்டு வழக்குகளில் நியாயம் வெற்றியடைய - திருபுவனம் சரபேஸ்வரர்
பாவங்கள் அகல - கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் நீராடல்
எம பயம் நீங்க - ஸ்ரீ வாஞ்சியம்
நீண்ட ஆயுள் பெற - திருக்கடையூர்
- கர்நாடக மாநிலம் பெனர்கட்டா என்ற ஊரில் உள்ளது இந்த கோவில்.
- இந்த கோவிலில் செய்யும் பரிகாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ளது பெனர்கட்டா என்ற ஊர். இவ்வூர் பஸ்நிலையத்தின் அருகில் ஒரு மாரியம்மன் ஆலயம் உள்ளது. இதனை 'குன்றிமணி மாரியம்மன்' என்று அழைக்கிறார்கள்.
இந்த கோவிலில் அம்மன் சன்னிதிக்கு அருகில் ஒரு சிறிய அளவிலான அம்மன் சிலை உள்ளது. இதனை குன்றி மணி நிரம்பிய ஒரு தாம்பாளத்தில் வைத்துள்ளனர்.
அங்கு வரும் பக்தர்கள், தங்களின் பிரச்சினைகளை அம்மனிடம் சொல்லி, குன்றி மணிகளை இரு கை நிறைய அள்ளி எடுத்து, அம்மன் மீது அபிஷேகம் செய்வது போல மூன்று முறை போட்டு வழிபடுகிறார்கள். இப்படி செய்வதால் அவர்கள் நினைத்த காரியம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
இதையடுத்து குரு பகவானின் முன்பாக தோன்றிய சிவபெருமான், “நீ.. திருவலிதாயம் திருத்தலம் சென்று என்னை நினைத்து தவம் செய்து வா.. உனக்கான பலன் கிடைக்கும்” என்றார்.
அதன்படியே இத்திருத்தலம் வந்த குரு பகவான், இங்கேயே நெடுங்காலம் தங்கியிருந்து சிவனை நினைத்து தவம் செய்து, தன்னுடைய சாபம் நீங்கப்பெற்றார். குரு பகவான், சிவ பூஜை செய்து வழிபட்ட திருத்தலம் என்பதால், இது குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது.
இந்த ஆலயத்தில் குரு பகவானுக்கு மட்டும் தனிச் சன்னிதி அமைந்திருக்கிறது.
இங்குள்ள குரு பகவானுக்கு, மஞ்சள் வஸ்திரம் சாத்தி, முல்லைப் பூவைக் கொண்டு அர்ச்சனை செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தால் சகல விதமான தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இந்தத் திருத்தலத்தில் அருளும் குரு பகவானுக்கு, வியாழக்கிழமை அன்று காலை மற்றும் மாலை வேளைகளிலும், குருப்பெயர்ச்சி காலத்தின் போதும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படும். இதில் கலந்து கொண்டு குரு பகவானை வணங்கினால், தோஷங்கள் அனைத்தும் நீங்கி, நற்பலன்களை அடையலாம்.
திங்களூர் (சந்திரன்)
ஒன்பது நவக்கிரக ஆலயங்களில் முதலில் வழிபட வேண்டியது திங்களூர் தான். இது நவக்கிரகங்களில் சந்திரனுக்குரியது. கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5 மணிக்கெல்லாம் கும்பகோணத்தில் இருந்து புறப்பட வேண்டும். பின்னர் திங்களூர் கயிலாசநாதர் கோவிலில் சுவாமி தரிசனத்தை, ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு, காலை 7 மணிக்கு அடுத்த தலமான ஆலங்குடிக்கு புறப்படலாம்.
ஆலங்குடி (குரு)
திங்களூரில் இருந்து ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். இது நவக்கிரகங்களில் உயர்ந்த கிரகமான குரு பகவானுக்குரிய தலமாகும். அங்குள்ள ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் ஒரு மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு, 8.30 மணியளவில் கும்ப கோணம் வழியாக திருநாகேஸ்வரம் கிளம்பலாம். இதற்கிடையில் காலை 8.30 மணி முதல் 9 மணிக்குள் காலை உணவையும் முடித்துக் கொள்ளலாம்.
திருநாகேஸ்வரம் (ராகு)
கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது திருநாகேஸ்வரம். இது நிழல் கிரகங்களில் ஒன்றான ராகுவுக்குரிய தலம். கும்ப கோணத்தில் இருந்து 10 அல்லது 15 நிமிட பயணம் தான். நாம் ஆலங்குடியில் இருந்து செல்வதால், 40 நிமிடங்கள் தேவைப்படலாம். தோராயமாக காலை 10 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோவிலை அடைந்து விட முடியும். அங்குள்ள நாகநாதசுவாமி ஆலயம், மிகப் பெரிய கோவில் என்பதால், ஆலயத்தை தரி சனம் செய்து முடிக்க, எப்படியும் 1 மணி நேரம் ஆகும். அதன் பிறகு அங்கிருந்து கும்பகோணம் வழியாக அடுத்த தலமான சூரியனார் கோவிலுக்குச் செல்லலாம்.
சூரியனார் கோவில் (சூரியன்)
கும்பகோணம் வழியாக 21 கிலோமீட்டர் சென்றால் சூரியனார் கோவில் உள்ளது. இது சூரிய பகவானுக்குரிய ஆலயம். நீங்கள் 11.30 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரிய நாராயண கோவில், மற்ற நவக்கிரக கோவில்களை போல் அல்லாமல், சூரியனை முதன்மையாக கொண்டு, நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த ஆலயம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன், 12 மணி அளவில் கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.
கஞ்சனூர் (சுக்ரன்)

வைத்தீஸ்வரன் கோவில் (செவ்வாய்)
நவக்கிரக கோவில்கள் அனைத்துமே, பகல் 1.15 மணிக்கு நடை சாத்தப்படும். அதன்பிறகு மாலை 4 மணிக்குத் தான் கோவில் நடை திறக்கப்படும். எனவே நாம் 1.30 மணிக்கு கஞ்சனூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மயிலாடுதுறையை 2 மணி அளவில் அடைந்து விடலாம். அங்கு மதிய உணவை முடித்துக் கொண்டு, கொஞ்சம் ஓய்வு எடுத்து விட்டு, சுமார் 3 மணி அளவில் புறப்பட்டால், 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலை 3.30 மணியளவில் அடைந்து விட முடியும். இது செவ்வாய் கிரகத்திற்குரிய தலம். மாலை 4 மணிக்கு கோவில் நடை திறந்ததும், வைத்தீஸ்வரன் ஆலயத்தில் தரிசனம் செய்து விட்டு, அங்கிருந்து திருவெண்காட்டிற்கு 5 மணி அளவில் புறப்பட வேண்டும்.
திருவெண்காடு (புதன்)
வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக் கிறது திருவெண்காடு திருத்தலம். இது புதன் கிரகத்திற்குரிய தலமாகும். 16 கிலோமீட்டர் இடைவெளி தான் என்பதால், 5.15 மணிக்கெல்லாம் ஆலையத்தை அடைந்து விடலாம். அங்குள்ள வேதாரண் யேஸ்வரர் ஆலயத்தில் சிவபெருமானையும், புதன் பகவானையும் தரிசித்து விட்டு, மாலை 6 மணிக்குள் கீழ்பெரும்பள்ளம் புறப்பட வேண்டும்.
கீழ்பெரும்பள்ளம் (கேது)
திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, கேது பகவானுக்குரிய தலமான கீழ்பெரும்பள்ளம். இந்த ஆலயத்தை 15 நிமிடங்களில், அதாவது மாலை 6.15 மணி அளவில் அடைந்து விட முடியும். கேது தோஷம் இருப்பவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து பரிகாரம் செய்து கொள்வார்கள். அந்த ஆலயத்தில் தரிசனத்தை முடித்துக் கொண்டு, இரவு 7 மணிக்குள், கடைசி நவக்கிரக ஆலயமான திருநள்ளாறுக்கு புறப்பட வேண்டியது அவசியம்.
திருநள்ளாறு (சனி)
நவக்கிரக தல சுற்றுலாவில் இறுதியாக நாம் சென்றடையும் திருத்தலம் திருநள்ளாறு. இது சனி பகவானுக்குரிய சிறப்பு மிக்க தலமாக விளங்குகிறது. இந்த ஆலயம் கீழ் பெரும்பள்ளத்தில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. கீழ்பெரும்பள்ளத் திலிருந்து சரியாக இரவு 7 மணிக்கு புறப் பட்டால் தான், 8 மணிக்குள் திருநள்ளாறு திருத்தலத்தை அடைய முடியும். பின்னர் அங்குள்ள தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சிவபெருமானையும், சனி பகவானையும் தரிசித்து முடிக்கலாம்.
இப்படி ஒரே நாளில் ஒன்பது கிரகங்களின் ஆலயங்களையும் தரிசனம் செய்து, மன நிறை வையும், புண்ணியத்தையும் சேர்க்கலாம்.
ஸ்ரீநரசிம்ம அவதாரம் என்பது விஷ்ணுவின் மிக முக்கியமான அவதாரமாகும். தன்னுடைய மிகச் சிறந்த பக்தனான பிரகலாதனுக்காக, அசுரத்தன்மை உடைய தந்தையான இரண்யகசிபுவினிடமிருந்து அவனைக் காப்பாற்றுவதற்காக தோன்றிய அவதாரமாகும்.
ஸ்ரீ நரசிம்மரின் அவதாரம் மக்களுக்கு அவருடைய அவதார மகிமையின் மூலமாக, அவர்பால் ஈர்ப்பு தன்மையை ஏற்படுத்துகிறது. இதனால் தான் இன்றும் பல திருக்கோவில்களில் தம் வாழ்நாளில் கடுமையான பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டவர்களே ஸ்ரீநரசிம்ம பகவானுக்கு பூஜை செய்கின்றனர்.
ஆகையால் மக்கள் மிகுந்த நம்பிக்கையுடனும், பக்தியுடனும் அக்கோவில்களுக்கு சென்று, தங்கள் மனவிருப்பம் நிறைவேற்றுவதற்காக தங்களால் இயன்ற பூஜையை செய்கின்றனர்.
தமிழகத்தில் சோளிங்கர், நாமக்கல், பூவரசங்குப்பம், பரிக்கல், சிங்கிரிக்குடி, சிங்க பெருமாள்கோயில், அந்திலி, சிந்தலவாடி, ஆகிய 8 தலங்களும் அட்ட நரசிம்ம தலங்களாக உள்ளன. அவற்றில், ஒரே நாளில் தரிசிக்கக்கூடிய வகையில் மூன்று நரசிம்மர் ஆலயங்கள் அமைந்துள்ளன.
சிங்கிரிக்குடி, பூவரசங்குப்பம், பரிக்கல் ஆகிய மூன்று தலங்களே அவை. இந்த மூன்று தலங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் கடன், குடும்பப்பிரச்சினைகள் மற்றும் அனைத்து தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சிங்கிரிக்குடி
பூவரசன்குப்பத்தில் இருந்து சிங்கிரிக்குடி 26 கி.மீ. பெருமாளின் திருநாமம்: ஸ்ரீலட்சுமி நரசிம்மர் (உக்ர நரசிம்மர்). தாயாரின் திருநாமம்: ஸ்ரீகனகவல்லி தாயார். தரிசன நேரம்: காலை 7.00 மணி முதல் நண்பகல் 12 மணி வரை; மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை.

திருமணம் தடைப்படும் அன்பர்கள் இங்கு வந்து ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்து வழிபட திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிகை. இங்குள்ள உக்ர நரசிம்மரை வழிபட எதிரிகளின் தொல்லைகள் இருக்காது.
பூவரசன்குப்பம்
பரிக்கல்லில் இருந்து பூவரசன்குப்பம் 39 கி.மீ. பெருமாளின் திருநாமம்: ஸ்ரீலட்சுமி நரசிம்மர். தாயாரின் திருநாமம்: ஸ்ரீஅமிர்தவல்லி தாயார். தரிசன நேரம்: காலை 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரை; மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
பூவரசன்குப்பம் நரசிம்மரை வழிபட, உடற்பிணி மற்றும் சகலவிதமான தோஷங்களும் நீங்கும்.
பரிக்கல்
விழுப்புரத்திலிருந்து உளுந்தூர் பேட்டை செல்லும் வழியில், விழுப்புரத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது பரிக்கல். பெருமாளின் திருநாமம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்மர். தாயாரின் திருநாமம்: ஸ்ரீகனகவல்லி தாயார். திறந்திருக்கும் நேரம்: காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.
பதவி உயர்வு வேண்டுபவர்களும், பதவி இழந்தவர்களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால், அவர்களது வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் அமைந்துள்ள இந்த 3 லட்சுமி நரசிம்மர் கோவில்களும் மேற்கிலிருந்து கிழக்காக ஒரே நேர் கோட்டில் அமைந்துள்ளன. ஒரே நாளில் இந்த லட்சுமி நரசிம்மர் கோவில்களை தரிசிப்பது மிகவும் புனிதமாக கருதப்படுகிறது.
காலையில் சிங்கிரிகுடி, பகலில் பூவரசன்குப்பம், இறுதியில் பரிக்கல் என்ற வரிசைப்படி தரிசிக்க வேண்டும்.
பிரார்த்தனை தலங்கள்
சிங்கிரிக்குடி, பூவரசங்குப்பம், பரிக்கல் ஆகிய மூன்று தலங்களும் பிரார்த்தனைக்குரிய தலங்கள் ஆகும். எனவே இந்த மூன்று தலத்திலும் நரசிம்மரிடம் நாம் என்ன வேண்டுதல் வைத்தாலும் அவற்றை நரசிம்மர் நிறைவேற்றி தருவார் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது.
அந்த நம்பிக்கையை அதிகப்படுத்தும் விதமாகவே புராணங்களும் பல விஷயங்களைக் கூறுகின்றன. துன்பங்களைப் போக்கும் பரிகாரத் தலங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் எந்த ஆலயத்திற்குச் சென்றால், என்னென்ன பிரச்சினைகள் தீரும் என்பதை சிறிய அளவில் இங்கே பார்க்கலாம்.
ஆரோக்கியத்துடன் வாழ..
* தன்வந்திரி திருக்கோவில், ராமநாதபுரம், கோவை.
* ஔஷதீஸ்வரர் திருக்கோவில், திருத்துறைப்பூண்டி.
* பிரசன்னவெங்கடேச பெருமாள் திருக்கோவில், குணசீலம்.
* மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.
* மகா மாரியம்மன் திருக்கோவில், வலங்கைமான்.
* வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார்விளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர்.
* வைத்தியநாதசுவாமி திருக்கோவில், வைத்தீஸ்வரன்கோவில்.
பெண்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண..
* தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக்கோட்டை, திருச்சி.
* பாதாள பொன்னியம்மன் திருக்கோவில், கீழ்ப்பாக்கம், சென்னை.
* மகாதேவர் திருக்கோவில், செங்கனூர்.
செல்வ வளம் சேர...
* அனந்தபத்மநாபசுவாமி திருக்கோவில், அடையாறு.
* அஷ்டலட்சுமி திருக்கோவில், பெசன்ட்நகர், சென்னை.
* கயிலாசநாதர் திருக்கோவில், தாரமங்கலம்.
* பக்தவச்சலப்பெருமாள் திருக்கோவில், திருநின்றவூர்.
* மாதவப்பெருமாள் திருக்கோவில், மயிலாப்பூர்.
கல்வி வளம் பெருக...
* கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில், மாதவரம்.
* தேவநாதசுவாமி திருக்கோவில், திருவந்திபுரம், கடலூர்.
* மகாசரஸ்வதி அம்மன், கூத்தனூர், பூந்தோட்டம்.
* வரதராஜபெருமாள் திருக்கோவில், செட்டிபுண்ணியம்.
* அக்னீஸ்வரர் திருக்கோவில், திருப்புகலூர்.
* தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோவில், தீர்த்தமலை, அரூர்.
* பூவராகசுவாமி திருக்கோவில், ஸ்ரீமுஷ்ணம்.
* வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல், காஞ்சீபுரம்.
* ஏகம்பரநாதர் திருக்கோவில், காஞ்சீபுரம்.
* சங்கரராமேஸ்வரர் திருக்கோவில், தூத்துக்குடி.
* சிவசுப்பிரமணியசுவாமி திருக்கோவில், குமாரசாமிபேட்டை, தர்மபுரி.
* தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக்கோட்டை, திருச்சி.
* பாலசுப்ரமணியசுவாமி திருக்கோவில், ஆயக்குடி, தென்காசி.
* மயூரநாதசுவாமி திருக்கோவில், பெத்தவநல்லூர், ராஜபாளையம்.
* முல்லைவனநாதசுவாமி திருக்கோவில், திருக்கருகாவூர்.
* நச்சாடை தவிர்தருளியசுவாமி திருக்கோவில், தேவதானம், ராஜபாளையம்.
* விஜயராகவபெருமாள் திருக்கோவில், திருபுட்குழி.
அந்த நம்பிக்கையை அதிகப்படுத்தும் விதமாகவே புராணங்களும் பல விஷயங்களைக் கூறுகின்றன. துன்பங்களைப் போக்கும் பரிகாரத் தலங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் எந்த ஆலயத்திற்குச் சென்றால், என்னென்ன பிரச்சினைகள் தீரும் என்பதை சிறிய அளவில் இங்கே பார்க்கலாம்.
* அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில், திருக்கடையூர்.
* எமனேஸ்வரமுடையார் திருக்கோவில், எமனேஸ்வரம், பரமக்குடி.
* காலகாலேஸ்வரர் திருக்கோவில், கோவில்பாளையம்.
* சித்திரகுப்தசுவாமி திருக்கோவில், காஞ்சீபுரம்,
* தண்டீஸ்வரர் திருக்கோவில், வேளச்சேரி,
* ஞீலிவனேஸ்வரர் திருக்கோவில், திருப்பைஞ்ஞீலி.
* வாஞ்சிநாதசுவாமி திருக்கோவில், திருவாஞ்சியம்.
* இருதயாலீஸ்வரர் திருக்கோவில், திருநின்றவூர்.
* தோரணமலை முருகன் திருக்கோவில், தோரணமலை.
* பண்ணாரிமாரியம்மன் திருக்கோவில், பண்ணாரி.
* மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.
* வீரராகவர் திருக்கோவில், திருவள்ளூர்.
* வீழிநாதேஸ்வரர் திருக்கோவில், திருவீழிமிழலை.
* வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார் விளாகம், ஸ்ரீவில்லிப்புத்தூர்.