search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Party Conflict"

    • போலீஸ் குவிப்பு-பதட்டம்
    • முதல் மரியாதை யார் செய்வது என்பதில் தகராறு

    ஆம்பூர்:

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பாலூர் கிராமத்தில் உள்ள கெங்கையம்மன் கோவில் திருவிழா ஆண்டு தோறும் வைகாசி மாதம் நடைபெறுவது வழக்கம்.

    இந்த கோவிலின் வரவு, செலவு கணக்குகளை, முன்னாள் ஊர் நாட்டாமை மற்றும் அவரது மகன் ஆகியோர் நிர்வகித்து வந்தனர். அவர்கள் கணக்கு வழக்குகளை ஊர் பொது மக்களுக்கு முறையாக வழங்கப்பட வில்லை என கூறப்படுகிறது.

    புதிய நாட்டாமைகளை தேர்வு செய்ய வேண்டும் என ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து கிராம மக்கள் இது குறித்து குடியாத்தம் சப்- கலெக்டரிடம் புகார் மனு அளித்திருந்தனர்.

    அப்போது இரு தரப்பினரையும் நேரில் அழைத்து குடியாத்தம் சப்-கலெக்டர் வெங்கடராமன் விசாரணை நடத்தினர்.

    பின்னர் குடியாத்தம் சப் -கலெக்டர் உத்தரவின்படி புதிய நாட்டாண்மையை கிராமமக்கள் தேர்வு செய்தனர்.

    இந்த நிலையில் பாலூர் கிராமத்தில் வைகாசி மாதம் நடத்த வேண்டிய கெங்கை யம்மன் கோவில் திருவிழா 3 மாதங்கள் கழித்து நேற்று புதியதாக தேர்வு செய்யப்பட்ட ஊர் நாட்டாண்மை தலைமையில் வெகு விமர்சையாக நடந்தது.

    தொடர்ந்து இரவு 11 மணி அளவில் அம்மன் சிரசு ஊர்வலம் மற்றும் பூங்கரக ஊர்வலம் நடந்தது.

    ஊர்வலத்தின்போது உருமி மேளம், பம்பை மற்றும் பேண்ட் வாத்தியங்கள், கரகாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.

    திருவிழாவின் போது முன்னாள் நாட்டாண்மை மற்றும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நாட்டாண்மை ஆகிய 2 தரப்பினரும் சீர்வரிசைகளுடன் கோவில் அருகே வந்தனர். அப்போது சாமிக்கு முதல் பூஜைகள் மற்றும் முதல் மரியாதை யார் செய்வது என்பது குறித்து இரு தரப்பி னருக்கிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இரு தரப்பினரையும் தனித்தனியாக அழைத்து சமரச பேச்சு வார்த்தை நடந்தது. அவர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாட்டால் சமரசம் ஏற்படவில்லை. இதனால் திருவிழா பாதியில் நிறுத்தப்பட்டது.

    ஆகம விதிப்படி நடைபெற இருந்த கெங்கை யம்மன் திருக்கல்யாணம் திருவிழா பாதியில் நின்று போனது. சீர்வரிசையுடன் ஆர்வமாக வந்த பொது மக்களும் சாமி தரிசனம் செய்யாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட எல்லைக்கு இடையே அமைந்துள்ளதால் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் 2 மாவட்ட போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டதால் பதட்டம் நிலவியது.

    • இரு தரப்பினருக்கும் இடையே பேனர்கள் வைப்பதில் மோதல் ஏற்பட்டது.
    • போலீசார் அடிதடி, கொலைமிரட்டல் உள்ளிட்ட வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி: 

    புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்த நாள் வருகிற 4-ந் தேதி கொண்டா டப்படுகிறது. இந்நிலையில், காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி மெயின் ரோட்டில், ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் சந்திர பிரி யங்கா மற்றும் எம்.எல்.ஏ. திருமுருகன் ஆதர வாளர்கள் பல்வேறு இடங் களில் டிஜிட்டல் பேனர் வைத்து வருகின்றனர்.

    இந்நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே பேனர்கள் வைப்பதில் மோதல் ஏற்பட்டு, பேனர் களை கிழித்தெறிந்தனர். தொடர்ந்து, சாலை மறி யலில் ஈடுபட்டனர். இத னால், அன்று இரவு சுமார் 2 மணி நேரம், காரைக்கால்- சென்னை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, அமைச்சரின் தனி அலுவலர் லக்ஷ்மணபதி, கோட்டு ச்சேரி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், திருமுருகன் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் ராஜ்கு மார், பாலாஜி, கணபதி, சிவராமன், வேல்பாண்டி, சுகுமாரன் ஆகிய 6 பேர் மீது போலீசார் அடிதடி, கொலைமிரட்டல் உள்ளிட்ட வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதேபோல், திருமுருகன் எம்.எல்.ஏ. ஆதரவாளர் பிரதீப் கொடுத்த புகாரின் பேரில், ஜெயக்குமார், புருணோ தேவா, தவசு முத்து, சரவணன், அய்யப்பன், கார்த்தி, நிதின், ஈஸ்வர் ஆகியோர் 8 மீது அடிதடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோடுச் சேரி பகுதியில் போட்டி பேனர் வைப்பது தொடர்வ தால், மோதல் ஏற்படாமல் இருக்க, கோடுச்சேரி போலீ சார், 24 மணி நேரமும் பாது காப்பு பணியில் ஈடு பட்டு வருகின்றனர். போலீ சார் பேனர்களுக்கு காவல் நிற்கும் படங்கள், சமூக வலைதளங்களில் வைர லாகி வருகிறது.

    • 4 பேர் பலத்த காயம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிந்து மாதவ பெருமாள் கோவில் உள்ளது. இந்தக் கோவில் திருவிழா நேற்று நடந்தது.

    இதனையொட்டி இன்று அதிகாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் சாமி ஊர்வலம் நடந்தது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இதில் 4 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்களை அந்த பகுதி மக்கள் மீட்டு, சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு மாணவியை 2 பேர் காதலித்ததால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது அந்தப் பள்ளியில் படிக்கும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை அதே பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர் ஒருவரும், பிளஸ்-1 மாணவர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர்.

    ஒரே மாணவியை 2 மாணவர்கள் காதலித்து வந்ததால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று மாணவர்க ளுக்கிடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து மாணவர்கள் இருவரும் தங்களுக்கு வேண்டி யவர்களை அழைத்து வந்ததால் மீண்டும் 2கோஷ்டிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

    இதில் 2 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் 2 கோஷ்டியினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்து படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே மாணவியை 2 மாணவர்கள் காதலித்ததால் 2 கோஷ்டிகளாக பிரிந்து மோதிக்கொண்ட சம்பவம் வாணியம்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பிளஸ்-2 படித்து வரும் மாணவர்கள் இரு கோஷ்டிகளாக பள்ளியில் படித்து வருகின்றனர்.
    • ஊர்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து பள்ளி மைதானத்தில் இன்று காலையில் மோதி கொண்டனர்.

    கடலூர்:

    புதுப்பேட்டை அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவர்கள் இரு கோஷ்டிகளாக பள்ளியில் படித்து வருகின்றனர். அவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. அந்த சமயத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்களை கண்டித்து அனுப்பி விடுவார். இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் மாணவர்களுக்குள் பள்ளி வளாகத்தில் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாணவர்கள் அவரவர்களின் ஊர்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து பள்ளி மைதானத்தில் இன்று காலையில் மோதி கொண்டனர்.

    இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியர் உடனடியாக புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்றனர். மோதலில் ஈடுபட்ட மாணவர்களை அழைத்து கண்டித்தனர். பள்ளி மாணவர்களுக்குள் கருத்து வேறுபாடு வரும் போது ஆசிரியர்களிடம் கூறி தீர்த்துக் கொள்ள வேண்டும். வெளியில் இருந்து ஆட்களை அழைத்து வந்து சண்டையிடக் கூடாது என்று அறிவுரை கூறினர். பின்னர் மாணவர்களை வகுப்பறைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் புதுப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தென்பெண்ணையாற்றில் நடந்த ஆற்றுத் திருவிழாவில் இவர்கள் தனித்தனியே ராட்டினம் அமைத்தனர். விழா முடிந்ததும் ராட்டினத்தை கழட்டும் பணியில் 2 தரப்பினரும் ஈடுபட்டனர்.,
    • வாக்குவாதம் வந்தது. இதில் இருவர் மற்ற இருவரை தடியால் அடித்த தாக்கினர்,


    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே ஆண்டிமடம் பூக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சரவணன் (வயது 26). இவரது சகோதரர் சத்தியமூர்த்தி (24). இவர்கள் திருவிழாக்களில் ராட்டினம் அமைத்து தொழில் செய்து வருகின்றனர். இதேபோல விருத்தாசலம் புதாமூர் கிராமத்தைச் சேர்ந்த சதிஷ் (30), இவரது சகோதரர் தினேஷ் (23). இவர்களும் அதே தொழில் செய்து வருகின்றனர்  திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள பேரங்கியூர் தென்பெண்ணையாற்றில் நடந்த ஆற்றுத் திருவிழாவில் இவர்கள் தனித்தனியே ராட்டினம் அமைத்தனர். ஆற்றுத் திருவிழா முடிந்து ராட்டினத்தை கழட்டும் பணியில் 2 தரப்பினரும் ஈடுபட்டனர். தொழில் போட்டி காரணமாக இவர்களிடையே வாக்குவாதம் வந்தது. இதில் சதிஷ், தினேஷ் ஆகியோர் சரவணன், சத்தியமூர்த்தி ஆகியோரை தடியால் தாக்கினர். இதில் காயமடைந்த சத்தியமூர்த்தி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்

    .  திருவெண்ணைநல்லூர் அருகே டி.கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 63). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மோகன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ஆற்றுத் திருவிழா முடிந்து சாமி விதியுலா நடந்தது. இதில் சுப்பிரமணியன் மகன் சந்தோஷ் சாமிக்கு தீபாராதனை காட்டினார். அப்போது அங்கு வந்த மோகன், மஞ்சு, மனோஜ், நாராயணன் ஆகியோர் சந்தோஷை ஆபாசமாக திட்டி கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த சந்தோஷ் திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்  இவ்விரு சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • போலீசார் எச்சரிக்கை
    • இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு

    வேலூர்:

    வேலூர் தெற்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஓல்டு டவுன் பகுதியில் கடந்த 23-ந் தேதி பிற்பகல் சுமார் 2 மணியளவில், ஊர் நாட்டாண்மை தேர்ந்தெடுத்தது தொடர்பாக ஏற்கனவே இருந்த பிரச்சினையில் இருதரப்பினருக்கு இடையே கோஷ்டி பூசல் ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி கற்கள் மற்றும் பாட்டில்கள் வீசி தாக்கிக்கொண்டனர்.

    இதில் அவர்களுக்கு லேசான காயங்கள் மட்டும் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் இருதரப்பினர் மீதும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், வழக்கில் தொடர்புடைய நபர்கள் குறித்து சம்பவ இடத்தில் பதிவாகியுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அவர்கள் அனைவரையும் கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து தகவல்கள் யாருக்கேனும் கிடைத்தால் வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கலாம். அப்பகுதியில் மேற்கொண்டு எவ்விதபிரச்சினை ஏற்படாமல் தவிர்க்க போலீசார் பணிய மர்த்தப்பட்டுள்ளனர்.

    இச்சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வீண் வதந்திகளை நம்பி மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என்று கேட்டு க்கொள்ளப்படுகின்றது.

    • கடலூர் அருகே 2 கோஷ்டியினர் மோதல்- 8 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    • தந்தை கார்த்தி , சிவமூர்த்தி என்பவரிடம் சென்று கேட்டபோது கார்த்தியையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே நெல்லிக்குப்பம் தமிழ் குச்சிபாளையம் சேர்ந்தவர் கார்த்தி. இவரது மகன் புகழேந்தி மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் இருசக்கர வாகனத்தில் வான் பக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மாட்டுவண்டி சென்று கொண்டிருந்தபோது அதிலிருந்து நபர் மாடுகளை குச்சியால் அடித்துக் கொண்டிருந்த போது புகழேந்தி மீது பட்டது. இதனைப் புகழேந்தி கேட்டபோது மாட்டு வண்டியில் சென்றவர் திடீரென்று தாக்கினார். இதனை அறிந்த தந்தை கார்த்தி , சிவமூர்த்தி என்பவரிடம் சென்று கேட்டபோது கார்த்தியையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    மேலும் இந்த தகராறில் சிவமூர்த்தியை, கார்த்தி தரப்பினர் தாக்கியதாக தெரிகிறது. இதில் கார்த்தி, புகழேந்தி மற்றும் சிவமூர்த்தி ஆகிய 3 பேர் காயம் அடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் கார்த்தி கொடுத்த புகாரின் பேரில் பெரிய சோழவள்ளியை சேர்ந்த சிவமூர்த்தி, சத்தியமூர்த்தி, பக்கிரி, ரவிவர்மா ஆகிய 4 பேர் மீதும், சிவமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் டி.குச்சிப்பாளையம் சேர்ந்த ஜீவா, வினோத், புகழ், கார்த்தி என 8 பேர் மீது போலீசார் தனித்தனி புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×