search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "passengers injured"

    • சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் பேருந்தில் சிக்கி இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர்.
    • விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    திருப்பூர்:

    கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து பல்லடம் வழியாக மதுரை நோக்கி ஆம்னி பஸ் ஒன்று இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. பஸ்ஸில் 46 பயணிகள் பயணம் செய்தனர்.

    பஸ்சை மதுரையைச் சேர்ந்த முருகானந்தம்(36) என்பவர் ஓட்டி வந்தார். பஸ் பல்லடத்தில் அண்ணா நகர் என்ற பகுதியில் திருச்சி- கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை ஓட்டுநர் கவனிக்காததால் அதில் மோதி பஸ் தாறுமாறாக சென்று தலைகீழாக கவிழ்ந்தது.

    விபத்தில் சிக்கிய பயணிகள் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் பல்லடம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் பேருந்தில் சிக்கி இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர். இதில் 10 பேருக்கு படுகாயம் ஏற்பட்டிருந்தது. அவர்களை உடனடியாக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் லேசான காயங்கள் ஏற்பட்ட 36 பயணிகளையும் பத்திரமாக மீட்டனர். அதிகாலையில் நடந்த இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அனைத்து பயணிகளும் உயிர் தப்பினர்.

    தொடர்ந்து திருச்சி- கோவை தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து கிடக்கும் பஸ்சை அப்புறப்படுத்தும் பணியில் பல்லடம் போக்குவரத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • பல்லடம் பஸ் நிலையம் வழியாக திருப்பூர், கோவை, மதுரை, உடுமலை உள்பட பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • பஸ் நிலையத்திற்குள் நுழையும் பஸ்கள் வேகமாக நுழைவதால் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வந்தது.

    பல்லடம்:

    பொள்ளாச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி இன்று காலை அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அதேப்போல் கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி மற்றொரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் வந்ததும் பஸ் நிலையத்திற்குள் பயணிகளை ஏற்றி இறக்குவதற்காக ஒரே நேரத்தில் 2 பஸ்களும் பேருந்து நிலையத்திற்குள் நுழைய முயன்றன.

    அப்போது எதிர்பாராதவிதமாக 2பஸ்களும் நேருக்கு நேர் மோதின. இதில் பஸ்களின் கண்ணாடிகள் சுக்குநூறாக நொறுங்கின. 2 பேருந்துகளிலும் பயணித்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர். மற்ற பயணிகள் லேசான காயமடைந்தனர்.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக பல்லடம் பஸ் நிலையம் முன்பு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரை மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.

    பல்லடம் பஸ் நிலையம் வழியாக திருப்பூர், கோவை, மதுரை , உடுமலை உள்பட பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்தநிலையில் பஸ் நிலையத்திற்குள் நுழையும் பஸ்கள் வேகமாக நுழைவதால் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வந்தது.

    சமீபத்தில் பஸ் நிலையத்திற்குள் நுழைய முயன்ற போது அரசு பஸ்சின் படிக்கட்டு அருகே நின்ற பயணி ஒருவர் வாசல் வழியாக கீழே விழுந்ததில் சக்கரத்தில் சிக்கி பலியானார். அதேபோல் பயணிகள் சிலர் பஸ் மோதி காயமடைந்துள்ளனர்.

    இந்தநிலையில் இன்று விபத்துக்குள்ளான பொள்ளாச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி இயக்கப்பட்ட அரசு பஸ், நேரம் காரணமாக அதிவிரைவாக இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பயணிகள் அச்சத்துடனேயே பஸ்சில் பயணித்துள்ளனர். இதன் காரணமாகவே விபத்து ஏற்பட்டதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். எனவே பல்லடம் பஸ் நிலையத்திற்குள் நுழையும் போது பஸ்களை மெதுவாக இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் பல்லடம் பஸ் நிலையத்திற்குள் சரக்கு வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் பஸ்கள் வந்து செல்லும்போது பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பல்லடம் பஸ் நிலையத்திற்கு தினமும் 500 க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்கள் அதிக அளவிலான பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்கிறது. மேலும் பல்லடம் வாரச்சந்தை திங்கட்கிழமை தோறும் நடைபெறுகிறது. அங்கு காய்கறிகள் மற்றும் சரக்கு கொண்டு வரும் வாகனங்கள் பஸ் நிலையத்திற்கு உள்ளே நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்களை நிறுத்து வதற்கு இடம் இல்லாமலும், பஸ்கள் செல்வதற்கு இடையூறாகவும் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் பஸ் நிலையத்திற்குள், திங்கட்கிழமைகளில் சரக்கு வாகனங்களை நிறுத்த அனுமதிக்கக்கூடாது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • சென்னை நோக்கி சென்ற ஆம்னி பஸ் ஒன்று பழுதாகி சாலையில் நின்றது.
    • பின்னால் வந்த அரசு விரைவு பஸ்சும், மற்றொரு ஆம்னி பஸ்சும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் வந்த 2 பயணிகள் காயம் அடைந்தனர்.

    விழுப்புரம்: 

    திண்டிவனம் பைபாஸ் சாலை, நத்தைமேடு என்ற இடத்தில் விழுப்புரதில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பஸ் ஒன்று பழுதாகி சாலையில் நின்றது. அப்போது அதன் பின்னால் வந்த அரசு விரைவு பஸ்சும், மற்றொரு ஆம்னி பஸ்சும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் வந்த 2 பயணிகள் காயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் போலீசார், காயமடைந்த பொள்ளாச்சியை சேர்ந்த கேமாவதி (வயது 30), சென்னையை சேர்ந்த ரேவதி (23) ஆகியோரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்தால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • செஞ்சியில் பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • தனியார் பஸ் கர்நாடகா பஸ் மீது மோதி இடது பக்கம் திரும்பி அருகில் உள்ள போர்வெல் கடை மீது மோதி நின்றது.

    விழுப்புரம்:

    புதுவையில் இருந்து பெங்களூருக்கு நேற்று இரவு கர்நாடகா அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அதேபோல் திருவண்ணாமலை யிலிருந்து சென்னைக்கு தனியார் சொகுசு பஸ் ஒன்று செஞ்சி வழியாக பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்த 2 பஸ்களும் செஞ்சிநகரம் திண்டிவனம் சாலையில் பி.எஸ்என்.எல்அலுவலகம் எதிரே வரும்போது ஒன்றுக்கு ஒன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் தனியார் பஸ் கர்நாடகா பஸ் மீது மோதி இடது பக்கம் திரும்பி அருகில் உள்ள போர்வெல் கடை மீது மோதி நின்றது. இதனால் கடையின் முன் பகுதி சேதம் அடைந்தது.

    இந்த விபத்தில் 2 பஸ்களில் பயணம் செய்த நரசிங்கராயன் பேட்டையை சேர்ந்த கலீல் அகமத் (வயது 25) பெங்களூர் கர்நாடகா பஸ் டிரைவர் ஓம் சரவணபவன் (51), திருவண்ணாமலையை சேர்ந்த சுரேஷ் (32) தேவனூரை சேர்ந்த கங்காதரன் (22), விஜி, அர்ஜுனன், ராஜேஷ் குமார், சசிகாந்தன் அயோத்தி உத்திரகுமார், கெங்கைஅம்மாள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக செஞ்சி , முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து செஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருத்துறைப்பூண்டி அருகே 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பயணிகள் 30 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியிலிருந்து செம்போடை நோக்கி ஒரு தனியார் பேருந்தும், இதேபோல வேதாரண்யத்தில் இருந்து திருத்துறைப்பூண்டியை நோக்கி தனியார் பேருந்தும் வந்து கொண்டிருந்தது. 2 பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. கட்டிமேடு அருகே உள்ள தேவர் பண்ணை என்ற இடத்தில் வந்த போது 2 பஸ்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் பஸ் டிரைவர் பாண்டியன்( வயது 42), காடுவாகுடியை சேர்ந்த பாலகவுரி(40), வாட்டாரை சேர்ந்த சத்யா(40), வெள்ளிகிடங்கு பகுதியை சேர்ந்த ருக்மணி(30) உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர் குணா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே 15 அடி பள்ளத்தில் ஆம்னி பஸ் கவிழ்ந்த விபத்தில் 20 பயணிகள் படுகாயமடைந்தனர்.
    உளுந்தூர்பேட்டை:

    மதுரையில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ் ஒன்று சென்றது. இதில் மொத்தம் 36 பயணிகள் இருந்தனர்.

    இந்த பஸ் நள்ளிரவு 1 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே புறவழிச்சாலை திருச்சி- சென்னை மேம்பாலத்தை கடந்து சென்றது. அப்போது திடீரென்று டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து பஸ் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் உள்ளே இருந்த பயணிகள் கூச்சல்போட்டு அலறினர். இந்த விபத்தில் பஸ்சில் இருந்த மதுரையை சேர்ந்த பிரபாகரன்(45), முத்துக்குமார்(50), சென்னையை சேர்ந்த கிருத்திகா(24), லட்சுமி பிரியா(23), பாலுசாமி(52), நெல்லையை சேர்ந்த கணேசமூர்த்தி(52) உள்பட 20 பேர் இடிபாடுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உளுந்தூர் பேட்டை போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×