என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Patent Case"
- இசை அமைத்தற்கு இளையராஜாவிற்கு தயாரிப்பாளர் ஊதியம் கொடுத்து விட்டதால் அதன் உரிமை தயாரிப்பாளருக்கு சென்று விடும்
- வரிகள், பாடகர் அனைத்தும் சேர்ந்துதான் பாடல் உருவாகிறது; வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை
இசையமைப்பாளர் இளையராஜாவின் சுமார் 4 ஆயிரத்து 500 பாடல்களைப் பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல் தனது பாடல்களைப் பயன்படுத்துவதாகக் கூறி, இளையராஜா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தயாரிப்பாளர்களிடம் உரிமை பெற்று, இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது எனவும், இளையராஜாவுக்கும் இந்த பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருப்பதாகவும் கடந்த 2019ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா மேல்முறையீடு செய்திருந்தார், இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இளையராஜாவின் 4,500 பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இதனிடையே, படத்தின் காப்புரிமை தயாரிப்பாளரிடம் இருப்பதால், அவர்களிடம் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடல்களைப் பயன்படுத்த தங்களுக்கு அதிகாரம் உள்ளதென எக்கோ நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இசை நிறுவனங்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய்நாரயண், இந்தியத் திரைப்படத்துறையில் உள்ள இசையமைப்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட திரைப்படத்திற்காக ஒரு திரைப்பட தயாரிப்பாளரிடம் இருந்து ஊதியம் பெற்றவுடன், ராயல்டி பெறும் உரிமையைத் தவிர, அனைத்து உரிமைகளையும் இழந்து விட்டதாகத் தெரிவித்தார்.
எனவே, காப்புரிமை சட்டத்தின் கீழ் பாடல்களின் உரிமையாளராக இளையராஜா வருவாரா என்பதை இறுதி விசாரணையில் தான் முடிவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இளையராஜா ஒரு இசைஞானி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் 1970, 1980 மற்றும் 1990 ம் ஆண்டுகளில் அவரது பாடல்களுக்கு இருந்த ஈர்ப்பு தற்போது இல்லை என இசை நிறுவனங்கள் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
மேலும் ஸ்பாட்டிபை மூலம் இளையராஜா பெற்ற வருமானத்தைத் தனி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்சம் இந்த வருமானத்திற்கான கணக்குகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கு இளையராஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், இசையமைப்பாளருக்கு அவ்வாறு உத்தரவிட முடியாது என்று வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட இசை நிறுவனங்கள் தரப்பு வழக்கறிஞர், இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் என்று தன்னை நினைப்பதாகக் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சதீஷ் பராசரன், ஆமாம், நான் எல்லோருக்கும் மேலானவன் தான் எனவும் வீம்புக்காக இதனைச் சொல்வதாக நினைக்க வேண்டாம் எனவும் தெரிவித்தார். இதனையடுத்து, நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு நீதிபதிகள் ஆர் மகாதேவன், முகமது சபீக் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இசை நிறுவனங்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய்நாரயண், இசை அமைத்தற்கு இளையராஜாவிற்கு தயாரிப்பாளர் ஊதியம் கொடுத்து விட்டதால் அதன் உரிமை தயாரிப்பாளருக்கு சென்று விடும். நாங்கள் தயாரிப்பாளரிடம் இருந்து உரிமம் பெற்றுள்ளதால், பாடல்கள் எங்களுக்கே சொந்தம் என்று அவர் வாதிட்டார்.
இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சதீஷ் பராசரன், இசையமைப்பு என்பது படைப்பாற்றல் (creative) சார்ந்த பணி என்பதால் அதற்கு காப்புரிமை சட்டம் பொருந்தாது என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "வரிகள், பாடகர் அனைத்தும் சேர்ந்துதான் பாடல் உருவாகிறது; வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அந்த வகையில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?" என்று கேள்வி எழுப்பினர்.
இந்த பாடல்கள் விற்பனை மூலம் இளையராஜா பெற்ற தொகை யாருக்கு சொந்தம் என்பது இந்த வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு கட்டுப்பட்டது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இளையராஜா பாடல்கள் தொடர்பாக பாடலாசிரியர்கள் உரிமை கோர வாய்ப்புள்ளதா என்பதை பற்றி தங்களுடைய விளக்கம் என்ன என்று இளையராஜா தரப்பிடம் நீதிபதிகள் கேட்டுள்ளனர்.
அதன் பின்னர் வழக்கின் விசாரணையை ஜூன் 2 ஆம் வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 1970, 1980 மற்றும் 1990 ம் ஆண்டுகளில் இளையராஜாவின் பாடல்களுக்கு இருந்த ஈர்ப்பு தற்போது இல்லை
- ஸ்பாட்டிபை மூலம் இளையராஜா பெற்ற வருமானத்தைத் தனி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும்
1970, 1980 மற்றும் 1990 ம் ஆண்டுகளில் இளையராஜாவின் பாடல்களுக்கு இருந்த ஈர்ப்பு தற்போது இல்லை - இசை நிறுவனங்கள் தரப்பு வழக்கறிஞர்
இசையமைப்பாளர் இளையராஜாவின் சுமார் 4 ஆயிரத்து 500 பாடல்களைப் பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல் தனது பாடல்களைப் பயன்படுத்துவதாகக் கூறி, இளையராஜா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தயாரிப்பாளர்களிடம் உரிமை பெற்று, இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது எனவும், இளையராஜாவுக்கும் இந்த பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருப்பதாகவும் கடந்த 2019ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா மேல்முறையீடு செய்திருந்தார், இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இளையராஜாவின் 4,500 பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இதனிடையே, படத்தின் காப்புரிமை தயாரிப்பாளரிடம் இருப்பதால், அவர்களிடம் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடல்களைப் பயன்படுத்த தங்களுக்கு அதிகாரம் உள்ளதென எக்கோ நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இசை நிறுவனங்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய்நாரயண், இந்தியத் திரைப்படத்துறையில் உள்ள இசையமைப்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட திரைப்படத்திற்காக ஒரு திரைப்பட தயாரிப்பாளரிடம் இருந்து ஊதியம் பெற்றவுடன், ராயல்டி பெறும் உரிமையைத் தவிர, அனைத்து உரிமைகளையும் இழந்து விட்டதாகத் தெரிவித்தார்.
எனவே, காப்புரிமை சட்டத்தின் கீழ் பாடல்களின் உரிமையாளராக இளையராஜா வருவாரா என்பதை இறுதி விசாரணையில் தான் முடிவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இளையராஜா ஒரு இசைஞானி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் 1970, 1980 மற்றும் 1990 ம் ஆண்டுகளில் அவரது பாடல்களுக்கு இருந்த ஈர்ப்பு தற்போது இல்லை என இசை நிறுவனங்கள் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
மேலும் ஸ்பாட்டிபை மூலம் இளையராஜா பெற்ற வருமானத்தைத் தனி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்சம் இந்த வருமானத்திற்கான கணக்குகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கு இளையராஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், இசையமைப்பாளருக்கு அவ்வாறு உத்தரவிட முடியாது என்று வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட இசை நிறுவனங்கள் தரப்பு வழக்கறிஞர், இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் என்று தன்னை நினைப்பதாகக் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சதீஷ் பராசரன், ஆமாம், நான் எல்லோருக்கும் மேலானவன் தான் எனவும் வீம்புக்காக இதனைச் சொல்வதாக நினைக்க வேண்டாம் எனவும் தெரிவித்தார். இதனையடுத்து, நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இளையராஜா தனது பாடல்கள் அனைத்தையும் சி.டி.யாக வெளியிடும் உரிமையை எக்கோ ரிக்கார்டிங் நிறுவனத்துக்கு கொடுத்திருந்தார்
- கடந்த 20 வருடமாக பங்கு தொகை எதுவும் தராமல், தனது பாடல் மூலம் பல கோடி ரூபாய் சம்பாதித்து அந்நிறுவனம் மோசடி செய்துவிட்டது
எக்கோ ரிக்கார்டிங் நிறுவனத்திற்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரில், தனது பாடல்கள் அனைத்தையும் சி.டி.யாக வெளியிடும் உரிமையை எக்கோ ரிக்கார்டிங் நிறுவனத்துக்கு கொடுத்து, இது சம்பந்தமாக ஒப்பந்தம் போட்டிருந்தேன்.
இதற்காக குறிப்பிட்ட தொகையை பங்கு தொகையாக தர அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் ஒப்பந்தப்படி கடந்த 20 வருடமாக பங்கு தொகை எதுவும் தரப்படவில்லை என்றும் பாடல் மூலம் பல கோடி ரூபாய் சம்பாதித்து மோசடி செய்துவிட்டது என்று இளையராஜா தெரிவித்திருந்தார்.
இந்த புகார் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து எக்கோ நிறுவனத்திடமிருந்து 20 ஆயிரம் சிடிக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து, இளையராஜா அளித்த புகாரில் பதிவான வழக்குகளை ரத்து செய்யக்கோரி எக்கோ நிறுவனம் கடந்த 2010-ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை 2019 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த உத்தரவு எதிர்த்து, எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கில் இருந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்ரமணியம் இன்று விலகியுள்ளார்.
வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் தலைமை நீதிபதியின் ஒப்புதலை பெற பதிவாளருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.