என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paurnami"

    • மாதா மாதம் பவுர்ணமி ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்திலேயே வரும்.
    • அந்த வகையில் புரட்டாசி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில் பவுர்ணமி வருகிறது.

    அறிவியல் ரீதியாக மட்டுமல்லாமல் ஆன்மிக ரீதியாகவும் பவுர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்த முக்கிய நாளாகக் கருதப்படுகிறது.

    இதனால்தான் மாதாமாதம் ஒவ்வொரு பவுர்ணமியையும் ஒரு பண்டிகையாகக் கொண்டாடும்படி நம் முன்னோர்கள் வரையறுத்து வைத்துள்ளார்கள்.

    மாதா மாதம் பவுர்ணமி ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்திலேயே வரும்.

    அந்த நாட்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் பெரும்பாலும் அந்த நட்சத்திரத்தின் பெயரிலேயே வருவதைக் காணலாம்.

    மேலும், தட்சனது சாபத்தால் சிவபெருமானிடம் அடைக்கலம் வேண்டினார் சந்திரன்.

    அவருக்கு அடைக்கலம் அளித்த சிவபெருமான் அதை தன் தலையில் சூடிக்கொண்டு சந்திரசேகரர் ஆனார்.

    ஆதலால் பன்னிரண்டு பவுர்ணமிகளுமே சிவபெருமானுக்குரிய விசேஷ நாட்களாகும்.

    அந்த வகையில் புரட்டாசி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில் பவுர்ணமி வருகிறது.

    அன்றைய தினம் சிவன் கோயில்களில் சிவனுக்கு கோதுமையும் வெல்லமும் கலந்த வெல்ல அப்பத்தால் அபிஷேகம் செய்வார்கள்.

    அன்று தான் உமா மகேஸ்வர விரதமும் கடைபிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பஞ்ச பருவ பூஜைகளில் பவுர்ணமி தினத்தில் நடக்கும் பூஜை மிகவும் விசேஷமானது.
    • அங்கு அவருக்கு தீபாராதனை உள்ளிட்ட உபசாரங்கள் நடத்தப்படும்.

    பஞ்ச பருவ பூஜைகளில் பவுர்ணமி தினத்தில் நடக்கும் பூஜை மிகவும் விசேஷமானது.

    அன்றைய தினம் கிரிவலத்திற்காக லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலையில் திரள்வது உண்டு.

    ஆனால் பெரும்பாலானவர்கள் ஆலயத்தில் நடக்கும் சிறப்பு பூஜையில் பங்கேற்பதில்லை.

    அன்றைய தினம் மாலை உற்சவ மூர்த்தியான சந்திரசேகருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வார்கள்.

    பிறகு அவர் அலங்காரம் செய்யப்பட்டு புறப்பாடு ஆகி மூன்றாம் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருள்வார்.

    அங்கு அவருக்கு தீபாராதனை உள்ளிட்ட உபசாரங்கள் நடத்தப்படும்.

    இதை நேரில் கண்டுகளிப்பது மிகுந்த பலன் தருவதாக கருதப்படுகிறது.

    • இமயமலைக்கு முன்பே தோன்றிய மலை இது. இதனால் பழைய மலை என்ற சொல் மருவி பழமலை எனப்பட்டது.
    • அதே தூசி வேறொரு மனிதர் மேல் பட்டால் அவர் மீண்டும் பிறவா வரத்தை அடைவார்.

    பழமலை நாதர் எழுந்தருளியுள்ள விருத்த கிரீஸ்வரரைப் பவுர்ணமி நாளில் வலம் வந்தால் மீண்டும் பிறவா நிலையை அடையலாம்.

    இமயமலைக்கு முன்பே தோன்றிய மலை இது. இதனால் பழைய மலை என்ற சொல் மருவி பழமலை எனப்பட்டது.

    இங்கிருந்த மலை மறைந்தாலும் இப்புண்ணிய தலத்தைப் பழமலை என்றும் விருத்த கிரீஸ்வரர் என்ற திருநாமத்துடன் திகழ்கிறது.

    தற்காலத்தில் இந்தத் தலத்தில் உள்ளவர்களும் சுற்றுப்புறங்களில் உள்ளவர்களும் முழுமதி நாளில் பழமலை திருக்கோவிலை மூன்று முறை வலம் வருகிறார்கள்.

    பவுர்ணமி நாளில் கிரிவலம் செய்தால் நாம் செய்த பாவங்கள் எல்லாம் விலகி புண்ணியம் கிட்டும்.

    கிரிப்பிரதட்சனம் செய்பவர்களின் காலில் பட்ட தூசி பறந்து சென்று விழும் இடம் கைலாசமாக மாறி விடும்.

    அதே தூசி வேறொரு மனிதர் மேல் பட்டால் அவர் மீண்டும் பிறவா வரத்தை அடைவார்.அதே தூசி வேறொரு மனிதர் மேல் பட்டால் அவர் மீண்டும் பிறவா வரத்தை அடைவார்.

    பவுர்ணமி ஞாயிறன்று கிரிவலம் செய்தால் சிவபதம் அடையலாம்.

    திங்கள்கிழமையும் பவுர்ணமியும் கூடிய நாளில் கிரிவலம் வந்தால் ஏழு உலகங்களுக்கும் அதிபதியாகலாம்.

    செவ்வாய் பவுர்ணமியில் கிரிப்பிரதட்சணம் செய்தால் பிறவித் துன்பத்திலிருந்து விடுதலை பெறலாம்.

    முழு நிலவு பிரகாசிக்கும் புதன் அன்று சிவன் குடிகொண்டிருக்கும் மலையை வலம் வந்தால் தேவர்களாகலாம்.

    பவுர்ணமி வியாழக்கிழமையில் கிரி பிரதட்சனம் செய்தால் முனிவர்களுக்கும் மேலான பதவியை அடையலாம்.

    வெள்ளிக்கிழமைகளில் பவுர்ணமி வரும்போது மலைவலம் செய்தால் விஷ்ணுவின் அருளைப் பெறலாம்.

    முழுமதி சனியன்று கிரிவலம் வந்தால் நவக்கிரகங்களின் நற்பயனைப் பெறலாம்.

    • அவ்வாறு வழிபடும் போது தீராத நோய்கள் எல்லாம் தீரும். இப்படி பூசை செய்பவரை எந்த நோயும் அணுகாது.
    • திருமணத் தடைகள் நீங்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வர்.

    ஒவ்வொரு கிழமைநாட்களிலும் வரும் பவுர்ணமியில் அம்பிகையை எவ்வாறு வழிபட்டால் சிறப்பான பலன் கிட்டும் என்று சித்தர்கள் கூறியவற்றில் இருந்து சிலவற்றைக் கீழே தருகிறோம்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் பவுர்ணமியன்று அம்பிகைக்கு சிகப்பு ஆடை அணிவித்து, செந்தாமரை மலர்கள் சூட்டி, செந்தாமரை மலர்களால் அர்ச்னை செய்யவேண்டும்.

    செவ்வாழைப்பழம், சர்க்கரைப் பொங்கல் நிவேதனமாக படைத்து வழிபடவேண்டும்.

    அவ்வாறு வழிபடும் போது தீராத நோய்கள் எல்லாம் தீரும். இப்படி பூசை செய்பவரை எந்த நோயும் அணுகாது.

    திங்கட்கிழமைகளில் வரும் பவுர்ணமியன்று அம்பிகைக்கு ஆரஞ்சு நிற ஆடையணிவித்து, மந்தாரை, மல்லிகை மலர்கள் சாற்றி, இதே மலர்களினால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

    இவ்வாறு வழிபடும் போது சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். செய்யும் தொழிலில் உயர்வு, வேலை வாய்ப்பு கிட்டும்.

    செவ்வாய்க்கிழமைகளில் வரும் பவுர்ணமி நாட்களில் அம்பாளிற்கு வெண் பட்டாடை அணிவித்து, செவ்வரளி பூ, சிகப்பு நிற பூக்களினால் அர்ச்சனை செய்து, சித்திரான்னம், தேன், பழங்கள் நிவேதனமாக படைத்து வழிபட வேண்டும்.

    இதனால் வறுமை நீங்கும். கடன்கள் தீரும்.

    கிரக தோசங்கள், பில்லி, சூனியம் தீரும்.

    புதன்கிழமைகளில் வரும் பவுர்ணமி தினத்தில் பச்சை பட்டாடை அணிவித்து, முல்லை, நறுமணமுள்ள மலர்கள் அலங்கரித்து, அதே மலர்களால் அர்ச்சனையும் செய்து, பால்பாயாசம், பழரசங்கள், பஞ்சாமிர்தம் நிவேதனமாக படைத்து வழிபடவேண்டும்.

    அறிவு வளரும், கல்வியில் அளப்பரிய முன்னேற்றம் கிட்டும்.

    ஞாபக சக்தி அதிகரிக்கும். சந்தான விருத்தி கிட்டும்.

    வியாழக்கிழமைகளில் வரும் பவுர்ணமி தினத்தில் அம்பிகைக்கு மஞ்சள் நிற ஆடை அணிவித்து, மஞ்சள் நிற (பொன் நொச்சி, பொன்னரலி) நறுமணமுள்ள மலர்களால் அலங்கரித்து, அதே மலர்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும்.

    சுண்டல், தயிர்ச்சாதம், பழங்கள் நிவேதனமாக படைத்து வழிபட வேண் டும். வேலையில்லாதவர்களிற்கு வேலை கிடைக்கும்.

    வேலையில் உள்ளவர்களிற்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமணத் தடைகள் நீங்கும்.

    சகல விதமான தடைகளும் நீங்கும். தேர்வுகளில் வெற்றி கிட்டும்.

    வெள்ளிக்கிழமைகளில் வரும் பவுர்ணமி நாட்களில் அமபிகைக்கு பொன்னிற ஆடை அணிவித்து, மல்லிகை மலர்கள் சூட்டி, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து, முக்கனிகள், கல்கண்டு, பொங்கல் நிவேதனமாக வைத்து வழிபடவும்.

    திருமணத் தடைகள் நீங்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வர்.

    பணவரவு அதிகரிக்கும். வராக்கடன் வரும்.

    சனிக்கிழமைகளில் வரும் பவுர்ணமி தினத் தன்று அம்பாளிற்கு நீலநிற ஆடை அணிவித்து, மருக்கொழுந்து, நீலநிற காக்கணம் (சங்குப்பூ) சாற்றி, அதே மலர்களால் அர்சித்து, காய்கறிகள், எள் அன்னம், பால், தேன் தயிர், நெய், கற்கண்டு நிவேதனமாக படைத்து வழிபடவும்.

    நவக்கிரக தோசம் நீங்கும். கடன் தீரும்.

    நோயில்லா வாழ்வு கிட்டும். பவுர்ணமி தினத்தில் பூரண பக்தியுடன் முறைப்படி பூசை செய்து வழிபாடு செய்பவர்கள் கிரக தோசங்களில் இருந்து விடுபட்டு நிம்மதியான, ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்.

    • சிவபெருமான் சித்தநாதன் என்ற பெயருடன் காட்சி தரும் தலம் திருநரையூர்.
    • இம் மூன்றாலும் பெருமையுடைய இத்திருத்தலம் மகாலட்சுமி அவதாரம் நிகழ்ந்த சிறப்புடையது.

    சிவபெருமான் சித்தநாதன் என்ற பெயருடன் காட்சி தரும் தலம் திருநரையூர்.

    கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் 9 கி.மீ. தொலைவில் திருநரையூர் உள்ளது.

    மூர்த்தி, தலம், தீர்த்தம் இம் மூன்றாலும் பெருமையுடைய இத்திருத்தலம் மகாலட்சுமி அவதாரம் நிகழ்ந்த சிறப்புடையது.

    இங்குள்ள தலமூர்த்தி சித்தநாதரை நோக்கி பதினெண் சித்தர்களுள் ஒருவரான கோரக்கச் சித்தர் இத்தலத்திற்கு வந்து தவம் புரிந்தார்.

    அவர் முன்பு தோன்றி தரிசனம் கொடுத்ததால் பரமேஸ்வரருக்கு சித்தநாதர் என்ற பெயர் ஏற்பட்டது.

    இத்தல மூர்த்திக்கு சாதாரணமாக ஒரு குடம் நீரை அபிஷேகம் செய்வித்து அதனை பிரசாதமாக நாம் குடித்தால் நம் உடம்பில் உள்ள அனைத்துவிதப் பெரிய ரோகங்களும் தீரும் என்று சொல்கிறார்கள்.

    பாண்டிய நாட்டு மன்னர் சந்திரகுப்தன் குஷ்டரோகம் ஏற்பட்டு அதனால் வருந்தி பல தலங்களுக்கும் சென்றான்.

    அப்போது அவன் கனவிலே சித்தநாதர் தோன்றி நரையூருக்கு வா என்று அழைக்க அதன்படி இவ்வாலயத்திற்கு வந்த மன்னன் 1008 குடம் பால் அபிஷேகம் செய்விக்க அவனது குஷ்டரோகம் உடனே குணமானது.

    இத்தலத்தில் சைவ வைணவ பேதம் எதுவும் கிடை யாது. மேதாவி மகரிஷி என்கிற ஒரு மகரிஷி கடுந்தவம் புரிந்து இந்த ஆலயத்திலே மகாலட்சுமியை மகளாக அடைந்தார்.

    நாச்சியார் கோவில் என்று அழைக்கப்படுகிற தலத்தில் ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கு லட்சுமியை கன்னிகாதானம் செய்து கொடுத்த அற்புத சக்தி வாய்ந்த தலமாகும் இது.

    பொதுவாக மகாலட்சுமியை தரிசிக்க வேண்டுமெனில் அவளை மகாவிஷ்ணுவுடன் மணக்கோலத்தில் தரிசிப்பது வழக்கம்.

    இவ்வாலயத்தில் மகாலட்சுமி மகரிஷியின் மகளாக தோன்றி வளர்ந்து கன்னியாக உலா வந்திருக்கிறாள்.

    அவளை ஸ்ரீபர மேஸ்வரனும், பார்வதியும் மகளாகப் பாவித்து மகாவிஷ்ணுவிற்கு மணம் செய்து கொடுத்திருக்கின்றனர்.

    இவ்வாலயத்தின் தனிச் சிறப்பு ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தில் மகா லட்சுமிக்கு 1008 தாமரை மலர்களினாலே குபேர மகாலட்சுமி ஹோமம் செய்து வருவதாகும்.

    இவ்வாலயத்திற்கு வருபவர் அனைவருக்கும் அவரவர் விருப்பத்திற்கேற்ப வெற்றியை தந்தருள்பவள் ஸ்ரீசவுந்தரநாயகி (அழகம்மை).

    இங்கு சுயவரதம், அட்சய மாலை, தாமரைப்பூ, இலைகளை நான்கு திருக்கைகளில் கொண்டு நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறாள் தேவி.

    இங்குள்ள சண்முகருக்கு பிரதி செவ்வாய்க்கிழமை சத்ரு சம்ஹார அர்ச்சனை நடைபெறுகிறது.

    ஆறுவித புஷ்பங்கள், நெய்வேத்தியங்கள், பலவகைப் பழங்கள், பழரசங்கள், இவைகளைக் கொண்டு பூஜை சிறப்பாக நடைபெறுகிறது.

    • தேவரப் பாடல்பெற்ற தலம் இது. 63 நாயன்மார்களில் ஒருவரான “அப்பூதி அடிகளார்” வாழ்ந்த தலம் இது.
    • இன்றளவும் இத் தலத்தில் பாம்பு தீண்டி உயிர் பிரிந்தவர்கள் இல்லை என்பது உண்மை.

    கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை, கபிஸ்தலம் வழியில் திருவையாற்றின் அருகில் உள்ளது சந்திரனுக்குரிய தலமான "திங்களூர்".

    தஞ்சாவூரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

    தேவரப் பாடல்பெற்ற தலம் இது. 63 நாயன்மார்களில் ஒருவரான "அப்பூதி அடிகளார்" வாழ்ந்த தலம் இது.

    திருநாவுக்கரசர் ஒரு சமயம் உழவாரப் பணி செய்ய திங்களூர் சென்றிருந்தார்.

    அச் சமயம் அங்கு அப்பூதி அடிகள் என்பவர், நாவுக் கரசர் பெயராலே பல தர்ம காரியங்களை செய்து வரு வதைக் கண்டு அவர் இல்லம் சென்றார்.

    நாவுக்கரசரை கண்ட அப்பூதி அடிகள் உள்ளம் மகிழ்ந்து விருந்தோம்பலுக்கு ஆயத்தமானார்.

    தனது மகனை வாழை இலை பறிக்க தோட்டத் திற்கு அனுப்ப, அங்கு அந்த சிறுவனை பாம்பு தீண்ட உயிரிழந்தான்.

    இந்த செய்தியை அறிந்தால் எங்கே நாவுக்கரசர் விருந்து உண்ண மாட்டாரோ என்றெண்ணிய அப்பூதி அடிகள் மகன் இறந்ததை மறைத்து நாவுக்கரசருக்கு அமுது படைத்தார்.

    இதனை அறிந்த நாவுக்கரசர், இறந்த அப்பூதி அடிகளின் மகனை இத் திருத் தலத்திற்கு எடுத்து சென்று, "ஒன்று கொலாம் அவர் சிந்தை"எனத் தொடங்கும் பதிகம் பாடி இறந்த பிள்ளையை உயிர்ப்பித்தார். இத்தகைய பெரும் பேறு பெற்ற தலம் இது.

    இன்றளவும் இத் தலத்தில் பாம்பு தீண்டி உயிர் பிரிந்தவர்கள் இல்லை என்பது உண்மை.

    சந்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத் திருத் தலம் வந்து கைலாச நாதரையும், பெரியநாயகி அம்பாளையும், பின்னர் சந்திர பகவானையும் தரிசித்து தோஷ நிவர்த்தி பெறலாம்.

    • பஞ்ச கயிலாயத்தில் கடைசித் திருக்கோவில் இதுவாகும்.
    • பௌர்ணமியன்று இரவில் சப்தரிஷிகள் இன்றும் இங்கு பூஜை செய்வதாக ஐதீகம்.

    திருநெல்வேலிக்கு அருகே அமைந்துள்ள வடக்கு விஜயநாராயணம் புனிதமும் தொன்மையும் மிக்க தலமாகும்.

    இங்கு சிறப்பு வாய்ந்த மனோன்மணீசுவரர் ஆலயம் உள்ளது.

    பௌர்ணமி, சிவராத்திரி நாட்களில் இங்கு வந்து வணங்குகிறவர்களுக்கு கயிலையில் அருள் வதுபோல திருவருள் புரிகிறேன்' என்று சிவபெருமான் பார்வதி தேவியிடம் கூறினாராம்.

    பஞ்ச கயிலாயத்தில் கடைசித் திருக்கோவில் இதுவாகும். சிவராத்திரி அன்று வேடன் முக்தி பெற்ற திருத்தலமும் இதுவே ஆகும்.

    இங்கு அருள்புரியும் சிவபெருமானின் திரு நாமம் மனோன்மணீச்வரர் என்பதாகும். மனோன் மணி என்றால், "மனதில் நினைத்ததை அருள்கின்றவர்' என்று பொருள்.

    தேவலோகத்தில் உள்ள காமதேனு, சிந்தாமணி, கற்பக விருட்சம் போல, இங்கு வருகின்ற அனைத்து உலக மக்களுக்கும் நினைத்ததை அருளும் தலமாக இது விளங்குகின்றது.

    இப்படி இந்தியாவில் உள்ள ஒரே திருக் கோவில் இது மட்டும்தான் என்கிறார்கள்.

    சிவபெருமான் பௌர்ணமி அன்று இங்கு தோன் றியதால் பௌர்ணமி பூஜை, க்ஷேத்திரவலம் மிகவும் விசேஷமானதாகும்.

    பௌர்ணமியன்று இரவில் சப்தரிஷிகள் இன்றும் பூஜை செய்வதாக ஐதீகம்.

    21 சித்தர்கள் கோவிலைச் சுற்றித் தவமிருப்பதாகவும், பௌர்ணமி, சிவராத்திரி ஆகிய நாட்களில் இரவு முழுவதும் இக்கோவிலை வலம் வந்து வணங்குவதாகவும் தலபுராணம் கூறுகிறது.

    ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து வணங்குகின்றனர்.

    பௌர்ணமியன்று க்ஷேத்திர வலம் வந்து மனோன்மனீச்வரரை வணங்கி னால் நோய் நொடிகள், கிரக தோஷங்கள் நீங்கி, கல்வி, செல்வம், உயர்ந்த பதவி, புத்திர பாக்கியம் போன்றவற்றைப் பெறலாம். 

    • கார்த்திகை பவுர்ணமியில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
    • தாமரைப்பூவால் அர்ச்சனை செய்வதும், பருப்பு நெய் சேர்த்த சாதம் நைவேத்தியம் செய்தலும் சிறப்பானது.

    கார்த்திகை பவுர்ணமியில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    மார்கழி திருவாதிரை நாளில் அம்பிகைக்கு வெண்ணிற ஆடை உடுத்தி ஒற்றைப்படை எண்ணிக்கையில் நவரத்தினக்கல் பதித்த ஆபரணம் அணிவிக்க வேண்டும்.

    தாமரைப்பூவால் அர்ச்சித்தலும், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தலும் சிறப்பானவை.

    களி நைவேத்தியம் செய்ய வேண்டும். இப்பூஜை செய்வதன் மூலம் அம்பிகையின் பூரண அருளைப் பெறலாம்.

    கஷ்டங்கள் நீங்கும், நோய்கள் குணமாகும், எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும்.

    மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமியில் திருவாதிரை திருநாள் விரதத்துடன் அனுசரிக்கப்படுகிறது.

    தை மாத பவுர்ணமியன்று அம்மனுக்கு மஞ்சளும், சிவப்பும் கலந்த ஆடை அணிவித்தல் வேண்டும். தேன் அபிஷேகம் சிறப்பானது.

    வில்வம், வெள்ளை தாமரைப்பூ, நந்தியாவட்டை இவற்றால் அர்ச்சனை செய்தல் நற்பலனை தரும்.

    நைவேத்தியப் பொருள் பாயசம். ஆயுள் விருத்தியை தரும் இந்த பூஜை.

    தை மாதப் பவுர்ணமியில் தைப்பூசம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    மாசி மாத பவுர்ணமி தினத்தில் செய்யும் வழிபாடு சிவதீட்சை பெற்ற பலனை தரக் கூடியது.

    வெள்ளை நிறம் கலந்த 5 வண்ணங்கள் கொண்ட ஆடை சார்த்தி, ஸ்படிக மணியால் மாலை அலங்காரம் செய்ய வேண்டும்.

    சர்க்கரைப் பொங்கல் படையல் அம்பிகைக்கு ஏற்றது.

    பங்குனி மாதத்தில் பவுர்ணமி அன்று மஞ்சள் நிற வஸ்திரம் சார்த்தி, கோமேதகம் பதித்த ஆபரணம் அணிவிக்கலாம்.

    தயிர் அபிஷேகம் சிறப்பானது.

    தாமரைப்பூவால் அர்ச்சனை செய்வதும், பருப்பு நெய் சேர்த்த சாதம் நைவேத்தியம் செய்தலும் சிறப்பானது.

    இந்த பூஜையின் மூலம் புண்ணிய கதி அடையலாம்.

    ஒவ்வொரு மாத பவுர்ணமியையும் சிறப்பு பண்டிகைகளாகவே கொண்டாடுவது விசேஷமானதாக கருதப்படுகிறது.

    • திருச்சி மாநகருக்கு அருகில் உள்ள விராலி மலையில் வள்ளி தேவசேனை சமேதரராகக் காட்சி அளிக்கும்
    • பவுர்ணமி நாள்களில் இம்மலையில் உள்ள முருகனைத் தரிசனம் செய்தால், இறைவனின் அருளைப் பெறலாம்

    திருச்சி மாநகருக்கு அருகில் உள்ள விராலி மலையில் வள்ளி தேவசேனை சமேதரராகக் காட்சி அளிக்கும்

    சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் சித்திரா பவுர்ணமி அன்று சங்காபிஷேகமும், வைகாசி விசாக விழாவும்

    பங்குனி உத்திர திருவிழாவும் சிறப்பானது.

    பவுர்ணமி நாள்களில் இம்மலையில் உள்ள முருகனைத் தரிசனம் செய்தால், இறைவனின் அருளைப் பெறுவதுடன்

    இங்குள்ள மூலிகையான விராலிச் செடியின் மனத்தைச் சுவாசிக்கும் பொழுது உடலில் உள்ள நோய்கள் மறைந்து

    ஆரோக்கியமான வாழ்வும் கிட்டும். 

    • ஐப்பசி மாதம் பவுர்ணமியில் விளக்கேற்றினால் உணவு தான்யம் பெருகி பசிப்பிணிகள் நம்மை விட்டு அகலும்.
    • கார்த்திகை மாதப் பவுர்ணமியில் விளக்கேற்றினால் பேரும் புகழும் வளர்ந்து அது நிலைத்து நிற்கும்.

    சித்ரா பவுர்ணமியில் விளக்கேற்றினால் தான்யம் பெருமளவில் கிடைக்கும்.

    வைகாசி பவுர்ணமியில் விளகேற்றினால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல இடத்தில் வரன் பேசி முடிக்கப்பட்டு திருமணம் கைகூடும்.

    ஆனி மாதப் பவுர்ணமியில் விளக்கேற்றினால் குழந்தையில்லாத பெண்களுக்கு புத்திர பாக்கியம் ஏற்படும்.

    புரட்டாசி மாதப் பவுர்ணமியில் விளக்கேற்றினால் பசுக்கள் விருத்தியாகி பால் வியாபாரம் அதிகரிக்கும் லட்சுமி கடாட்சம் பெருகும்.

    ஐப்பசி மாதம் பவுர்ணமியில் விளக்கேற்றினால் உணவு தான்யம் பெருகி பசிப்பிணிகள் நம்மை விட்டு அகலும்.

    கார்த்திகை மாதப் பவுர்ணமியில் விளக்கேற்றினால் பேரும் புகழும் வளர்ந்து அது நிலைத்து நிற்கும்.

    மார்கழி மாதப் பவுர்ணமி யில் விளக்கேற்றினால் தேக ஆரோக்கியம் ஏற்பட்டு உடல் பலம் பெறும்.

    மாசி மாதப் பவுர்ணமி யில் விளக்கேற்றினால் துன்பம் விலகி இன்பமும் மகிழ்ச்சியும் பெருகும்.

    பங்குனி மாதப் பவுர்ணமி யில் விளக்கேற்றினால் தர்மமும், புண்ணியமும் செய்த பலன் கிட்டும்.

    பவுர்ணமி அன்று பூஜை அறையில் ஐஸ்வர்ய கோலத்தை போட்டு நமது பிரார்த்தனையை மனத்தில் நினைத்தோ அல்லது ஒரு தாளில் எழுதி ஐஸ்வர்ய கோலத்தில் வைத்து விளக்கேற்றி பூஜை செய்து வந்தால் நாம் நினைத்தது வெற்றி பெறும்.

    • இந்த பூஜையைத் தொடர்ந்து ஒவ்வொரு பௌர்ணமியன்றும் செய்யலாம்.
    • பவுர்ணமி அன்று காலையில் குளித்துவிட்டு எந்த ஆகாரமும் எடுத்துக்கொள்ளாமல் விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.

    சத்யநாராயண விரதம் நம் வேண்டுதல் நிறைவேறிய பிறகு அதற்காக நன்றி சொல்லும்விதமாக அமைந்த விரதமாகும்.

    இந்த விரதம் அனுஷ்டிக்கும் முறையை அறிந்து கொள்ளலாம்.

    பவுர்ணமி அன்று சத்ய நாராயண விரதம் கடை பிடிக்கப்படுகிறது.

    பொதுவாகவே விரதம் என்பது எதையாவது வேண்டிக்கொண்டு அது நடக்கவேண்டும் என்பதற்காக அனுசரிக்கப்படுவது.

    ஆனால், இந்த சத்யநாராயண விரதம் அப்படியல்ல, நம் வேண்டுதல் நிறை வேறிய பிறகு அதற்காக நன்றி சொல்லும் விதமாக அமைந்த விரதம்.

    இந்த சத்யநாராயண பூஜையை எப்படி அனுஷ்டிப்பது? பொதுவாகவே இந்த விரத பூஜையை எந்த மாதத்திலும் வரும் பவுர்ணமி அன்றைக்கு அனுசரிக்கலாம்.

    அன்றைக்கு பகல், இரவு பொழுதுகளைத் தவிர்த்து, பூர்ண சந்திரனின் உதய நேரத்தைப் பார்த்து அப்போது மேற்கொள்ளலாம்.

    இந்த பூஜையைத் தொடர்ந்து ஒவ்வொரு பௌர்ணமியன்றும் செய்யலாம்.

    பவுர்ணமி அன்று காலையில் குளித்துவிட்டு எந்த ஆகாரமும் எடுத்துக்கொள்ளாமல் விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.

    மஹாவிஷ்ணுவின் ஓர் அம்சம்தான் சத்யநாராயணர் என்பதால் அன்று மாலைப் பொழுதுவரை விஷ்ணு ஸ்லோகங்களை சொல்லிக்கொண்டிருக்கலாம்.

    திரும்பத் திரும்ப விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லலாம்.

    பூஜையறையிலேயே இந்த பூஜையை அனுசரித்தால் ரொம்பவும் விசேஷம்

    அல்லது பூஜை செய்வதற்காகத் தேர்ந்தெடுத்திருக்கும் இடத்தை பெருக்கி, நீரால் துடைத்து சுத்தம் செய்து, மாவுக்கோலம் போட்டுக்கொள்ளுங்கள்.

    இடவசதிக்கேற்ப சின்னதாக மண்டபம் போல அமைத்துக் கொள்ளலாம்

    அல்லது ஒரு மணை போட்டு அதிலே சத்யநாராயணர் விக்ரகத்தை வைத்தும் பூஜை செய்யலாம்.

    அல்லது சத்யநாராயணர் படம் கிடைத்தாலும் உபயோகப் படுத்திக்கொள்ளலாம்.

    மண்டபத்துக்குச் சின்னதாக ஒரு மாவிலைத் தோரணம் கட்டிக்கொள்ளுங்கள்.

    மணை அல்லது மண்டபத்துக்குள் விக்ரகம் அல்லது படத்தை வைப்பதற்கு முன்னால் அதை நன்கு துடைத்து சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள்.

    இரண்டு வாழைக் கன்று வாங்கி இருபக்கமும் சாய்த்து வையுங்கள்.

    இந்த மண்டபம் மேற்கு பார்த்தபடி இருக்கலாம்.

    நீங்கள் ஒரு மணைமேல், கிழக்கு பார்த்தோ அல்லது வடக்கு பார்த்தோ உட்கார்ந்து பூஜையை ஆரம்பிக்கலாம்.

    உங்களுக்கு இடது பக்கத்தில் இரண்டு நுனி வாழை இலைகளை ஒன்றன்மேல் ஒன்றாகக் கொஞ்சம் இடைவெளி விட்டு சேர்த்துப் போட்டுக் கொள்ளுங்கள்.

    அதன்மேல் அரிசியைப் பரப்பி வைத்துக் கொள்ளுங்கள்.

    ஆறுமுனை உள்ள ஷட்கோணம் (நட்சத்திரம் போல) கோலத்தை அதன்மேல் விரலால் வரைந்து கொள்ளுங்கள்.

    சுத்தமான நீர் நிரப்பிய ஒரு சொம்பை கோலத்தில் வையுங்கள்.

    சொம்பில் கழுத்தைச் சுற்றி ஒரு பூச்சரத்தைக் கட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

    சொம்பிற்கு சந்தனம் குங்குமம் இடுங்கள்.

    கலசத்தின் வாயில் மாவிலைக் கொத்தை செருகி வையுங்கள்.

    அதன் நடுவே மஞ்சள் பூசிய தேங்காயை வையுங்கள்.

    பிறகு விநாயகரை மனதாற வணங்கி விட்டு பூஜையை ஆரம்பியுங்கள். விஷ்ணு ஸ்தோத்திரங்களைச் சொல்லுங்கள்.

    சத்யநாராயணர் அஷ்டோத்திரம் சொல்லிக் கொண்டே உதிரிப் பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள்.

    பூஜை முடிந்ததும் பாயசம், வடை என்று பிரசாதங்கள் நிவேதனம் செய்யுங்கள்.

    அடுத்து, கற்பூரம் காட்டி இந்த பூஜையை நிறைவு செய்யலாம்.

    பூஜை முடிந்ததும் வீட்டுக்கு வெளியே வந்து, வானில் பூரணமாக ஒளிரும் சந்திரனைப் பார்த்து தரிசனம் செய்துவிட்டு நிவேதனப் பொருட்களை உட்கொண்டு விரதத்தை முடிக்கலாம்.

    சத்யநாராயண பூஜை விரதமிருப்பதாக வேண்டிக்கொண்டு எந்த கோரிக்கை நிறைவேறவேண்டும் என்று நினைக்கிறோமோ, அந்த கோரிக்கை நிறைவேறியதும் மறந்துவிடாமல் கண்டிப்பாக சத்யநாராயண பூஜையை அனுசரித்துவிட வேண்டும்.

    • திருவாரூக்குத் தெற்கே சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றான திருக்காரவாசல் உள்ளது.
    • இங்குக் கண்ணாயிரம் என்ற திருநாமத்தோடு இறைவன் எழுந்தருளியுள்ளார்.

    திருவாரூக்குத் தெற்கே சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றான திருக்காரவாசல் உள்ளது.

    இங்குக் கண்ணாயிரம் என்ற திருநாமத்தோடு இறைவன் எழுந்தருளியுள்ளார்.

    இத்திருக்கோவிலில் உள்ள தீர்த்தக்குளத்திற்குப் பிரம்ம தீர்த்தம் என்று பெயர்.

    சந்திர கிரகணம் மற்றும் பவுர்ணமி அன்று இக்குளத்தில் நீராடுபவர்களின் பாவங்கள் நீங்கி

    இறைவனின் அருளைப் பெறுவார்கள் என்று இத்தல வரலாறு கூறுகிறது.

    ×