search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Payasam Recipe"

    • ஷீர் குருமா ஒரு முகலாய டிஷ்
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த டெசட்

    தேவையான பொருட்கள்

    கொழுப்பு நிறைந்த பால் - 1 லிட்டர்

    சேமியா - முக்கால் கப்

    பேரீச்சைப் பழம் -10

    முந்திரி பருப்பு - கால் கப் (நறுக்கியது)

    பாதம் பருப்பு - கால் கப் மெல்லியதாக நறுக்கியது

    பிஸ்தா - 2 ஸ்பூன் நறுக்கியது

    சாரை பருப்பு - ஒரு ஸ்பூன்

    காய்ந்த திராட்சை - 15

    சர்க்கரை - கால் கப்

    ஏலக்காய் தூள் - சிறிதளவு

    ரோஸ் எசன்ஸ் - 2 சொட்டு

    நெய் - தேவையான அளவு

    செய்முறை

    அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து அதில் முக்கால் கப் சேமியாவை சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

    இப்போது அதே கடாயில் மீண்டும் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து அதில் 10 பேரீச்சை பழங்களை நீளவாக்கில் நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை 2 நிமிடங்களுக்கு நன்றாக வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    அதே கடாயில் மீண்டும் 1 ஸ்பூன் நெய் சேர்த்து இதில் பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா, ஆகியவற்றை சேர்த்து 3 நிமிடங்களுக்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மீண்டும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து இதில் 15 காய்ந்த திராட்சையை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்து அதில் 1 லிட்டர் முழு கொழுப்பு பாலை சேர்த்து காய்ச்ச வேண்டும். பால் ஒரு கொதி வந்ததும் அதில் வறுத்த சேமியாவை சேர்க்க வேண்டும். சேமியா வெந்ததும் இதனுடன் கால் கப் சர்க்கரை சேர்க்க வேண்டும்.

    பின்னர் இதில் கால் ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்க்க வேண்டும். இரண்டு சொட்டு ரோஸ் எசன்ஸ் சேர்த்து, பின்னர் வறுத்த பேரீச்சைப்பழம், திராட்சை, பருப்பு வகைகளை சேர்க்க வேண்டும். இரண்டு மூன்று நிமிடங்களுக்கு அடுப்பை சிம்மில் வைத்து சேமியாவை வேக வைத்து இறக்கி விடலாம். அவ்வளவுதான் சுவையான ஷீர் குருமா தயார்.

    இதை சூடாக சாப்பிடலாம். அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து குளிர வைத்தும் பறிமாறலாம். இதன் சுவை அபாரமாக இருக்கும்.

    • உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கக்கூடியது.
    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவர்.

    இது சுவையான பானம் மட்டுமல்ல. உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கக்கூடியதும் கூட. அவலில் கார்போஹைட்ரேட், இரும்புச் சத்து, நார்ச்சத்து, ஆக்சிஜனேற்றிகள் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் அடங்கியிருக்கின்றன. ருசிக்கும் ஆவலைத் தூண்டும் அவல் பால் கீர் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாமா?

    தேவையான பொருட்கள்:

    அவல்- ஒரு கப்

    பால்- 3 கப்

    வெல்லம்- 1/2 கப்

    நெய்- 1 ஸ்பூன்

    முந்திரி- 10

    உலர் திராட்சை- 2 ஸ்பூன்

    கன்டென்ஸ்டு மில்க்- 1/4 கப்

    ஏலக்காய் தூள்- கால் டீஸ்பூன்

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து, அதில் முந்திரி, உலர் திராட்சையை வறுத்து எடுத்து தனியே வைத்துக்கொள்ளவும். பின்னர் அதே நெய்யில் அவல் சேர்த்து மொறுமொறு என்று பொன்னிறமாக வறுத்துக்கொள்ள வேண்டும்.

    அடுத்து ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். அதில் வறுத்து வைத்துள்ள அவல் சேர்த்து வேகவைக்க வேண்டும்.

    பின்னர் அதில் முந்திரியை ஊறவைத்து அரைத்துச் சேர்த்து கொதிக்கவிடவும். தொடர்ந்து, அதில் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து கொதிக்கவிடுங்கள். இதனால் கீர் நன்கு கெட்டி யாகி வரும். கடைசியாக வெல்லத்தை பாகு காய்ச்சி சேர்த்து கொதிக்கவிடவும்.

    பின்னர் ஏலக்காய்தூள் சேர்த்து இறக்கினால், சூடான, சுவையான அவல் பால் கீர் ரெடி. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி அருந்துவார்கள்.

    • உடல் உஷ்ணத்தை போக்கும் மாமருந்தாக இளநீர் இருக்கிறது.
    • அனைவருமே இதை தவிர்க்காமல் உண்டு மகிழலாம்.

    உடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர் கொண்டு சர்பத் செய்தால், அதன் சுவை எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். உடல் உஷ்ணத்தை போக்கும் மாமருந்தாக இளநீர் இருக்கிறது. சுவை மற்றும் உடல் ஆரோக்கியம் என்ற இந்த இரண்டும் கலந்து இருக்கும்.

    குழந்தைகள் உள்பட அனைவரும் நிச்சயம் விரும்புவார்கள். உடல் புத்துணர்வுக்கான சத்துகள் இதில் இருப்பதால், அனைவருமே இதை தவிர்க்காமல் உண்டு மகிழலாம். மேலும், வெயிலுக்கு இதமான குளுகுளு இளநீர் சர்பத் எப்படி தாயார் செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    இளநீர்- 2

    கடல்பாசி (அகர் அகர்)- ஒரு கைபிடி

    சர்க்கரை- 200 கிராம்

    கண்டன்ஸ்டுமில்க்- 3 ஸ்பூன்

    பால்- அரை லிட்டர்

    சப்ஜா விதை- ஒரு ஸ்பூன்

    செய்முறை:

    முதலில் சப்ஜா விதைகளை நீரில் பொட்டு உறவைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் இளநீரினை ஊற்றி அதில் கடல்பாசி மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக கரைந்து போகிற அளவுக்கு கலந்துவிட வேண்டும். பின்னர் இதனை ஒரு பிளேட்டில் ஊற்றி ஃபிரிட்ஜில் ஒருமணிநேரம் வைக்க வேண்டும். ஒருமணிநேரம் கழித்து எடுத்து பார்த்தால் அது ஜெல்லி மாதிரி இருக்கும். இதனை சிறிது சிறிதாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இப்போது ஒரு பாத்திரத்தில் காய்ச்சிய பாலை ஊற்ற வேண்டும். இந்த பாலில் கண்டன்ஸ்டு மில்க், ஊறவைத்த சப்ஜா விதை, நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள இளநீர் ஜெல்லி, இளநீரில் உள்ள வழுக்கைகளை சிறிது சிறிதாக வெட்டி இதனுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த இளநீர் சர்பத்தினை ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறலாம்.

     இந்த கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள இந்த இளநீர் சர்பத் உங்களுக்கு உதவியாக இருக்கும். நீங்களும் உங்களது வீடுகளில் செய்துபாருங்கள்.

    • உடல் எடை குறைப்பதில் கோதுமைக்கு முக்கிய பங்கு உண்டு.
    • கோதுமையில் சுவையான பாயசம்.

    கோதுமை நமது உடல் எடையினைக் குறைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றது. இந்த கோதுமையில் சுவையான பாயசம் செய்வது பற்றி தெரிந்து கொள்வோம்.

    தேவையான பொருட்கள்:

    கோதுமை - 1 கப்

    பாதாம் பருப்பு -3

    முந்திரி பருப்பு -3

    உலர்ந்த திராட்சை -5

    வெல்லம் - 1 கப்

    நெய் - 2 ஸ்பூன்

    தேங்காய்த் துருவல் - 1 கப்

    பால் - 1/2 கப்

    ஏலக்காய்த் தூள் - 1 ஸ்பூன்

    செய்முறை:

    கோதுமையினை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு கோதுமையின் மீது உள்ள உமி போன்ற தோல் உரிந்து வரும் அளவிற்கு அரிசி களைவதுபோல் ஒன்றிரண்டு முறை நீரில் கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் வெள்ளை முத்துக்கள் போன்று கோதுமை கிடைக்கும். இதனை குக்கரில் போட்டு 3 விசில் வரை வேக விடவும்.

    அடுத்து வாணலியில் வெல்லத்தை சேர்த்து தண்ணீர்விட்டு பாகுபோல் காய்ச்ச வேண்டும். பின்னர் வெல்லப்பாகினை வடிகட்டிவிட்டு மீண்டும் அதே கடாயில் சேர்த்து பின்னர் தேங்காய் துருவல் சேர்த்து கிளற வேண்டும். மற்றொரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை, பாதாம், ஏலக்காய்த்தூள் சேர்த்து வறுத்து அதனை வெல்லப்பாகுக் கலவையில் கொட்டிக் கிளற வேண்டும்.

    அடுத்து பால் மற்றும் வேகவிட்ட கோதுமையை சேர்த்து 5 நிமிடங்கள் கிளறிவிட்டு இறக்கினால் சுவையான கோதுமை பாயாசம் ரெடி. இதனுடன் சிறிதளவு சுக்கு பொடி சேர்த்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

    • உடல் வெப்பத்தை குறைக்க பயன்படுகிறது.
    • அசிடிட்டி போன்ற பிரச்சினைகளை போக்க உதவுகிறது.

    பாதாம் பிசின் ஒரு இயற்கையான குளுரூட்டியாக செயல்படுகிறது. இது உடல் வெப்பத்தை குறைக்க பயன்படுகிறது. சிலருக்கு எல்லாக் காலங்களிலும் உடம்பானது சூடாக இருக்கும். உடம்பு சூட்டின் காரணமாக அவர்கள் வயிற்று வலி, நீர் கடுப்பு போன்றவற்றை சந்திக்க நேரிடலாம். எனவே அதிகப்படியான உடம்பு சூட்டை தணித்து குளிர்ச்சியை கொடுக்க பாதாம் பிசின் உதவுகிறது.

    வயிற்றில் ஏற்படும் அசிடிட்டி போன்ற பிரச்சினைகளை போக்க உதவுகிறது. உடலுக்கு குளிர்ச்சி தரும் பாதாம் பிசின் வைத்து வித்தியாசமான சுவையில் ஒரு இனிப்பு ரெசிபி வாங்க எப்படி செய்யலாம் பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பால்- ஒரு லிட்டர்

    ஜவ்வரிசி- கால் கப்

    சேமியா- கால் கப்

    நாட்டு சர்க்கரை- ஒரு கப்

    பாதாம் பிசின்- ஒரு ஸ்பூன்

    ஏலக்காய்- ஒரு சிட்டிகை

    பாதாம்- 10

    நெய்- தேவையான அளவு

    முந்திரி- 10

    செய்முறை:

    பாதாம் பிசினை முன்தினம் இரவே தண்ணீரில் ஊறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் பாதாமையும் இரவே தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ள வேண்டும். இப்போது ஊறவைத்த பாதாமை தோலினை நீக்கிவிட்டு அதனை சிறிதளவு பால் ஊற்றி பேஸ்ட் மாதிரி அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு பாத்திரத்தில் நாட்டு சர்க்கரையை போட்டு அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி கரைந்ததும் அதனை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி ஜவ்வரிசி மற்றும் சேமியாவை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் முந்திரி சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்புறகு வாணலியில் பாலை ஊற்றி காய்ந்ததும் அதில் ஜவ்வரிசி, சேமியாவை வேகவைக்க வேண்டும். இப்போது நாட்டுசர்க்கரையை வடிகட்டி சேர்க்க வேண்டும்.

    அதன்பிறகு அதனுடன் ஊறவைத்த பாதாம் பிசின், ஊறவைத்து அரைத்து வைத்துள்ள பாதாம் பேஸ்ட், ஏலக்காய் தூள், நெய்யில் வறுத்த முந்திரி ஆகியவற்றை சேர்த்து கலந்து ஒரு கொதி வந்ததும் இறக்கினால் பாதாம் பிசின் பாயாசம் தயார்.

    ×