என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Payasam"

    • பாயாசத்தில் பல்வேறு வகைகள் உள்ளன.
    • பாயாசத்தில் பழங்களை சேர்த்து செய்தால் சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருள்கள்:

    அன்னாசிப்பழத் துண்டுகள்- 1 கப்

    காய்ச்சிய பால் - 1 லிட்டர்

    கன்டென்ஸ்டு மில்க் - 1 கப்

    ஜவ்வரிசி - 1/2 கப்

    பைனாப்பிள் எசன்ஸ் - 1 ஸ்பூன்

    நெய் - தேவையான அளவு

    முந்திரி - தேவையான அளவு

    கிஸ்மிஸ் - தேவையான அளவு

    செய்முறை:

    * அன்னாசி பழத்தினை தோல் சீவி ஒரே அளவிலான சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

    * ஜவ்வரிசியை அலசி சிறிது தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும்.

    * அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து அதில் பால் ஊற்றி மிதமான தீயில் வைத்து பாலை காய்ச்சிக் கொள்ள வேண்டும்.

    * மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரம் 1.5 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் ஊற வைத்த ஜவ்வரிசியை போட்டு 5 நிமிடங்கள் வரை கொதித்த பின் அந்த தண்ணீரை வடிகட்டி ஜவ்வரிசியை தண்ணீரில் குளிர்ந்த நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * பால் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் பாதியளவு அன்னாசி பழத்தை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

    * அடுத்து அதில் அலசி வைத்துள்ள ஜவ்வரிசியைச் சேர்த்து 3 நிமிடங்கள் வரை வேக விட வேண்டும்.

    * பிறகு அதில் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். கன்டென்ஸ்டு மில்க் சேர்ப்பதால் அதில் இருக்கும் சர்க்கரை சுவையே போதுமானது. பாயாசம் நன்றாக கெட்டியான பின் அடுப்பினை அணைத்துவிட்டு பாயாசத்தை இறக்கி வைக்கவும்.

    * இப்போது இதில் ஒரு துளி பைனாப்பிள் எசன்ஸ் மற்றும் வெட்டி வைத்துள்ள பைனாப்பிள் துண்டுகளை சேர்க்க வேண்டும்.

    * அடுப்பில் ஒரு சிறிய பான் வைத்து அதில் நெய் ஊற்றி முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து வறுத்து பாயாசத்தில் ஊற்றி அலங்கரித்தால் தித்திப்பான அன்னாசி பழ பாயாசம் ரெடி!

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கோதுமை ரவை சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
    • கோதுமை ரவையில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    கோதுமை ரவை - 1/4 கப்

    வெல்லம் - 1/2 கப்

    பால் - 1 கப்

    உப்பு - 1 சிட்டிகை

    நெய் - 1 தேக்கரண்டி

    முந்திரிப்பருப்பு - தேவையான அளவு

    ஏலக்காய் - 1

    செய்முறை

    குக்கரில் நெய் சேர்த்து, முந்திரிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

    அதே குக்கரில் கோதுமை ரவையை சேர்த்து அடுப்பை குறைந்த தீயில் வைத்து வாசனை வரும் வரை வறுக்கவும்.

    அடுத்து அதில் கப் - 1 1/4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து 3-4 விசில் மிதமான தீயில் வேக வைக்கவும்.

    கோதுமை ரவை மிருதுவாக வெந்தவுடன், வெல்லத்தை 1/4 கப் தண்ணீர் சேர்த்து சூடு செய்து கரைக்கவும். வெல்லம் நன்றாக கரைந்ததும் வெந்த கோதுமை ரவையுடன் வடிகட்டி சேர்த்து கலக்கவும். 1/2 கப் மேலும் தண்ணீர் சேர்க்கவும்.

    குறைந்த தீயில் 5 நிமிடம் பாகு சுண்டும் வரை கொதிக்க விடவும்.

    பாலை, மெதுவாக சேர்த்து கலக்கவும்.

    ஏலக்காய், வறுத்த முந்திரி சேர்த்து 2 நிமிடம் சூடு செய்யவும்.

    அடிபிடிக்காமல் கலந்து கொண்டே இருக்கவும். ஆரிய பிறகு கெட்டியாகும் அதனால் அதற்கு தகுந்தவாறு அடுப்பை அணைக்கவும்.

    இப்போது சூப்பரான கோதுமை ரவை பாயாசம் ரெடி.

    தேங்காய் பால் சேர்த்தும் செய்யலாம்.

    பாயசம் மிகவும் கெட்டியாகிவிட்டால், சிறிது காய்ச்சிய பால் சேர்த்து சரி செய்து கொள்ளவும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    https://www.maalaimalar.com/cinema

    • கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்கும் வெள்ளரிக்காய்.
    • இன்று வெள்ளரிக்காயில் பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    வெள்ளரிக்காய் - 1

    பால் - 250 மில்லி

    சர்க்கரை - தேவையான அளவு

    அரிசி மாவு - 3 தேக்கரண்டி

    பாதாம் மிக்ஸ் - 1 மேசைக்கரண்டி

    நெய் - 2 தேக்கரண்டி

    ஏலக்காய் - 2

    முந்திரி - தேவையான அளவு

    செய்முறை

    வெள்ளரிக்காயை தோல், விதையை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசி மாவுடன் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அதனுடன் பாதாம் மிக்ஸை கலந்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் முந்திரி பருப்பை போட்டு வறுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

    அதே பாத்திரத்தில் மீதமிருக்கும் நெய்யை சேர்த்து வெள்ளரிக்காயை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.

    பிறகு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளுங்கள்.

    நன்கு வெந்ததும் அரிசி மாவு கலவை சேர்த்து கிளறவும்.

    பின்னர் ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

    கடைசியாக காய்ச்சிய பால், முந்திரி பருப்பை சேர்த்து ருசித்தால் வெள்ளரிக்காய் பாயாசம் தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • வெண்ணெயும், சர்க்கரையும் கலந்த கலவையான நவநீதமும் படைப்பதுண்டு.
    • எல்லோரும் பக்தி பெருக்குடன், கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட வேண்டும்.

    வெங்கடா சலபதிக்கு நிவேதனம் செய்யும் பொருட்களில் சர்க்கரைப் பொங்கல் மற்றும் வடை இடம் பெறுவதுண்டு. சிலர் பாயாசமும் படைப்பர். வெண்ணெயும், சர்க்கரையும் கலந்த கலவையான நவநீதமும் படைப்பதுண்டு.

    அன்புடன் இலையை அர்ப்பணித்தாலும் ஏற்பேன் என்று கீதையில் கண்ணன் கூறியது இங்கே கருதத்தக்கது. பெருமாளுக்குப் படையலிட்டுப் பூஜை செய்யும்போது உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்து கலந்து கொள்ள செய்ய வேண்டும்.

    எல்லோரும் பக்தி பெருக்குடன், கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட வேண்டும். பூஜை முடிந்த பிறகு பக்திப் பாடல்களைப் பாடி வணங்கி, வழிபாடு செய்வர். பிறகு வீட்டிற்கு வந்துள்ள விருந்தினர்களுக்கு உணவளித்து, தாம்பூலம் கொடுப்பர். இப்படி அவரவர் இருப்பிடத்திலேயே கோவிந்தா என்ற திருநாமத்தைக் கூறியபடி இருந்தால் பெருமாளே அந்த இல்லத்துக்கு எழுந்தருள்வார்.

    • விசில் வந்த பிறகு உடனே குக்கரை திறக்காமல் 10 நிமிடம் கழித்து ஆறியதும் குக்கரை திறக்கவும்.
    • நன்கு கிளறி 5 நிமிடங்கள் வரை வேகவைத்து ஏலக்காய் பொடி சேர்த்து ஒருமுறை நன்கு கிளறிவிடுங்கள்.

    தேவையான பொருட்கள்:

    உடைத்த கோதுமை - 1 கப்

    பாதாம் பருப்பு, முந்திரி திராட்சை - தேவைக்கு ஏற்ப

    வெல்லம் - 1 கப்

    நெய் - 2 டேபிள் ஸ்பூன்

    தேங்காய் துருவல் - 1 கப்

    பால் - 1/2 கப்

    தண்ணீர் - 3 கப்

    கசகசா - 1 டேபிள் ஸ்பூன்

    ஏலக்காய் பொடி - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    • ஒரு பாத்திரத்தில் உடைத்த கோதுமையை போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் நன்கு ஊறவைக்கவும். பின்பு தண்ணீரை வடிகட்டி விடவும்.

    • பிறகு குக்கரில் வடிகட்டி வைத்துள்ள கோதுமை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி பருப்பு வேகவைப்பது போல் 3 விசில் வரும் வரை வேகவைக்கவும்.

    • விசில் வந்த பிறகு உடனே குக்கரை திறக்காமல் 10 நிமிடம் கழித்து ஆறியதும் குக்கரை திறக்கவும்.

    • கடாயை வைத்து கசகசாவை லேசாக வறுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

    • அதே கடாயில், வெல்லத்தை சேர்த்து. அதனுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள் 10 நிமிடங்கள் வரை வெல்லம் முழுவதுமாக கரையும் வரை சூடுபடுத்தவும்.

    • வெல்லப்பாகு ரெடியாகிக் கொண்டிருக்கும்போதே ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் மற்றும் வறுத்த கசகசாவை சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும்.

    • அரைத்த விழுதை கொதித்துக் கொண்டிருக்கிற வெல்லப்பாகில் போட்டு, நன்றாகக் கலக்கவும்.

    • பின்பு அவற்றை மூடியை கொண்டு மூடி மிதமான தீயில் 2-3 நிமிடங்கள் அந்த கலவையை வேகவிடவும். அதன்பின், அந்த கலவையோடு வேகவைத்த உடைத்த கோதுமையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்கு கிளறி 5 நிமிடங்கள் வரை வேகவைத்து ஏலக்காய் பொடி சேர்த்து ஒருமுறை நன்கு கிளறிவிடுங்கள்.

    • அடுத்ததாக,நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றை சேர்க்கவும். அதோடு இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறிவிட்டு, பின் கடைசியாக அதில் பால் சேருங்கள். பாலை நன்கு கலந்துவிட்ட பின், 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து வேகவிட்டு இறக்குங்கள்.

    • தித்திக்கும் சுவையான கோதுமை பாயாசம் ரெடி பாயாசத்தை வேறு பாத்திரத்தில் மாற்றி பின் பரிமாறலாம்.

    இந்த சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து அருமையான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று மாம்பழ பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தித்திப்பான மாம்பழக் கூழ் - ஒரு கப்,
    சர்க்கரை - அரை கப்,
    பால் - ஒரு லிட்டர்,
    அரிசிக்குருணை - 2 டேபிள்ஸ்பூன்,
    கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை,
    நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    முந்திரி, திராட்சை - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
    கண்டென்ஸ்டு மில்க் - 2 டேபிள்ஸ்பூன்,
    மேங்கோ எசன்ஸ் (விரும்பினால்) - சில துளிகள்,
    ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

    செய்முறை:

    முந்திரி, திராட்சையை நெய்யில் சிவக்க வறுத்து எடுக்கவும்.

    மீதமுள்ள நெய்யை விட்டு அரிசிக் குருணையைப் போட்டு லேசாக வறுத்து, அதில் பாலை ஊற்றி காய்ச்சவும்.

    அரிசி நன்றாக வெந்து கண்ணாடி போல் ஆகி பால் சிறிது வற்றியதும், கண்டென்ஸ்டு மில்க், சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.

    பிறகு கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, மாம்பழக் கூழையும் சேர்க்கவும்.

    எல்லாம் சேர்ந்து கொதித்ததும் கீழே இறக்கி, முந்திரி - திராட்சை, மேங்கோ எஸன்ஸ் சேர்த்துப் பரிமாறவும்.

    இப்போது சூப்பரான மாம்பழ பாயாசம் ரெடி.
    ‘இயற்கை ஜெல்லி’ என்று அழைக்கப்படும் நுங்கு, உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்கு உதவும். நுங்கு வைத்து அருமையான பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையானப் பொருட்கள்:

    நுங்கு - 5
    பால் - ½ லிட்டர்
    சர்க்கரை - 75 கிராம்
    ஏலக்காய் - 3
    குங்குமப்பூ - 2 சிட்டிகை

    செய்முறை:

    நுங்கின் மேல் தோலை நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஊற வைத்துத் தோல் உரித்த பாதாம், ஏலக்காய் மற்றும் சிறிது பால் சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

    காய்ச்சிய பாலை அடுப்பில் வைத்து, அதில் சர்க்கரை மற்றும் பாதாம் கலவையைக் கலந்து சற்று கெட்டியாகும் வரை காய்ச்சி ஆற வைக்கவும்.

    பின்பு அதில் நுங்குத் துண்டுகளைச் சேர்த்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிரச்செய்து, குங்குமப்பூவைத் தூவி சில்லெனப் பரிமாறவும்.

    இப்போது அருமையான நுங்கு பாயாசம் ரெடி.
    • பாயாசத்தில் பல்வேறு வெரைட்டிகள் உள்ளன.
    • இன்று நட்ஸ் பாயாசம் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா 20 கிராம்

    திராட்சை மற்றும் பேரீச்சை - 20 கிராம்

    பால் - 1/2 லிட்டர்

    சேமியா - 1/4 கப்

    ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை

    சர்க்கரை - 1/4 கப்

    நெய் - தேவையான அளவு

    செய்முறை :

    பாதாம், பிஸ்தா, முந்திரி, பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நட்ஸ் அனைத்தையும் தனித்தனியே நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

    அடுத்து சேமியாவையும் வறுத்துக்கொள்ள வேண்டும்.

    அடுப்பில் பால் வைத்து நன்கு கொதித்ததும் சேமியா சேர்த்து வேக விட வேண்டும்.

    சேமியாக வெந்ததும் சர்க்கரை தேவைக்கு ஏற்ப சேர்த்து கலக்க வேண்டும்.

    பின் அதில் வறுத்த பருப்பு வகைகள், திராட்சை, பேரீச்சை சேர்த்து கலந்து பரிமாறவும்.

    அவ்வளவுதான் நட்ஸ் பாயாசம் தயார்.

    • கேரட்டில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • கேரட் கீர் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    கேரட் - 3

    பாதாம் பவுடர் - 1 1/2 மேசைக்கரண்டி

    பால் - அரை கப்

    பாதாம் பருப்பு - 8

    சீனி - கால் கப் + 2 மேசைக்கரண்டி

    உப்பு - ஒரு சிட்டிகை

    செய்முறை

    * கேரட்டை துருவி எடுத்துக் கொள்ளவும்.

    * பாதாம் பருப்பை பொடித்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் ஊற்றி துருவிய காரட்டை போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.

    * வெந்ததும் எடுத்து தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு ஒரு முறை அரைத்துக் கொள்ளவும்.

    * அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் சீனி, பாதாம் பவுடர், பாதாம் பருப்பு, உப்பு, பால் ஆகியவற்றை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

    * இதை அப்படியே குடித்தால் மேலே ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து குடிக்கவும், அல்லது ப்ரிட்ஜில் வைத்து நன்கு குளிர்ச்சியாக குடிப்பதாக இருந்தால் நெய் தேவையில்லை.

    * தனியாக துருவி வேக வைக்காமல் குக்கரிலேயே அப்படியே வேக வைத்து எடுத்து பிசைந்து விட்டுக் கொண்டு மற்ற பொருட்களையும் சேர்க்கலாம்.

    * சுவையான கேரட் கீர் தயார்.

    • ஓணத்தின் ஸ்பெஷலே அடை பிரதமன் தான் .
    • அதனை மிக எளிமையாக செய்வது எப்படி என பார்க்கலாம் வாங்க...

    தேவையான பொருட்கள்:

    அரிசி அடை - 100 கிராம்

    வெல்லம் - 200 கிராம்

    நீர்த்த தேங்காய் பால் - 200 மிலி

    கெட்டியான தேங்காய் பால் -200 மிலி

    தேங்காய் துண்டுகள்- தேவையான அளவு

    முந்திரி - தேவையான அளவு

    சுக்குத் தூள் - தேவையான அளவு

    ஏலக்காய் பொடி - தேவையான அளவு

    நெய் - தேவையான அளவு

    செய்முறை:

    அரிசியை ஊற வைத்து நைசாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை, வாழை இலையில் நெய் தடவி, மெலிதாக பரப்பி, மெதுவாக மடித்து, நூலால் கட்டி, இட்லி தட்டில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும். வெந்த மாவு ஆறியதும் இலையிலிருந்து உரித்து எடுத்து, மிகவும் சிறு துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.

    அரை கப் தண்ணீரில் வெல்லத்தைக் கரைத்து, வடிகட்டி, அதிலுள்ள கசடுகளை நீக்கவும்.

    கடாயில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி மற்றும் தேங்காய் துண்டுகளை வறுக்கவும்.

    அதே பாத்திரத்தில், மேலும் சிறிது நெய்யை சூடாக்கி, அடையை மிதமான அல்லது குறைந்த தீயில் 4-&5 நிமிடங்கள் வறுக்கவும்.

    இப்போது, வெல்லம் கரைத்த நீரை அடையில் சேர்த்து, மிதமான சூட்டில் அது கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.

    கெட்டியானவுடன், அதில் நீர்த்த தேங்காய் பாலைச் சேர்க்கவும். அது மீண்டும் கெட்டியாகும் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு, கெட்டியான தேங்காய் பால், வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் பொடி மற்றும் தேங்காய் துண்டுகளைச் சேர்க்கவும்.

    நன்றாகக் கலக்கிவிட்டதை உறுதி செய்த பிறகு, அடுப்பை அணைத்து விடலாம்.

    இப்போது ருசியான அடை பிரதமன் ரெடி.

    • கேரளா மட்டை அரிசி உடலுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடியது.
    • இது குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்:

    கேரளா மட்டை அரிசி - 1 கப்

    பால் - 4 கப்

    சர்க்கரை - 1 கப்

    முந்திரி, திராட்சை, பாதாம் - விருப்பத்திற்கேற்ப

    நெய் - அரை டீஸ்பூன்

    ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்

    உப்பு - ஒரு சிட்டிகை

    செய்முறை:

    * பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து தனியாக வைக்கவும்.

    * கேரளா மட்டை அரிசியை நன்றாக கழுவி மிக்ஸர் ஜாரில் போட்டு கொரகொரவென்று அரைத்து கொள்ளுங்கள்.

    * ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும், தீயைக் குறைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

    * பிறகு அதில் கழுவி வைத்துள்ள மட்டை அரிசியைப் போட்டு நன்கு கிளறி, அரிசி நன்கு மென்மையாக வேகும் வரை வேக வைக்கவும். அடிக்கடி கிளறி விடவும். அல்லது அடிபிடித்து விடும்.

    * அரிசி வேக சிறிது நேரம் எடுக்கும் என்பதால், குறைவான தீயில் வேக வைக்கவும்.

    * அரிசி நன்கு மென்மையாக வெந்த பின்பு சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.

    * இறுதியில் உப்பு மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கவும்.

    * மேலே வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் சேர்த்து பரிமாறவும்.

    * இப்போது சுவையான கேரளா மட்டை அரிசி பால் பாயாசம் தயார்…

    குறிப்பு - சர்க்கரைக்கு பதில் வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்தும் இதை செய்யலாம்.

    • கேரட் கீர் செய்ய 15 நிமிடங்களே போதுமானது.
    • வீட்டிற்கு திடீரென விருந்தினர் வந்தால் இந்த கீர் செய்து அசத்தலாம்.

    தேவையான பொருட்கள்

    கேரட் - 3

    பாதாம் பவுடர் - 1 1/2 மேசைக்கரண்டி

    பால் - அரை கப்

    பாதாம் பருப்பு - 10

    சர்க்கரை - கால் கப் + 2 மேசைக்கரண்டி

    உப்பு - ஒரு சிட்டிகை

    செய்முறை

    கேரட்டை துருவி எடுத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் ஊற்றி துருவிய கேரட்டை போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.

    வெந்ததும் எடுத்து தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு ஒரு முறை அரைத்துக் கொள்ளவும்.

    அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு சர்க்கரை, பாதாம் பவுடர், பாதாம் பருப்பு, உப்பு, பால் ஆகியவற்றை சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் சிறிது நேரம் கொதிக்க விடவும்.

    கீர் திக்கான பதம் வந்தவுடன் அதை இறக்கி சூடாகவோ, பிரிட்ஜில் வைத்து நன்கு குளிர்ச்சியாகவோ குடிக்கலாம்.

    இப்போது சூப்பரான கேரட் கீர் ரெடி.

    ×