என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » pazhanisami vathiyar
நீங்கள் தேடியது "pazhanisami vathiyar"
- இயக்குனர் செல்வ அன்பரசன் இயக்கத்தில் கவுண்டமணி நடிக்கும் திரைப்படம் ‘பழனிச்சாமி வாத்தியார்’.
- இந்த படத்தில் யோகி பாபு, கஞ்சா கருப்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 காலக்கட்டங்களில் தனக்கே உரிய நகைச்சுவை பாணியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் நடிகர் கவுண்டமணி. இவர் கடைசியாக கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது'படத்தில் நடித்திருந்தார்.
![](https://media.maalaimalar.com/h-upload/2023/01/20/1824260-2.webp)
பழனிச்சாமி வாத்தியார் பூஜை
இதைத்தொடர்ந்து 6 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் கவுண்டமணி நடிப்பில் இறங்கியுள்ளார். அறிமுக இயக்குனர் செல்வ அன்பரசன் இயக்கத்தில் கவுண்டமணி நடிக்கவுள்ள திரைப்படம் 'பழனிச்சாமி வாத்தியார்'. இந்த படத்தில் யோகி பாபு, கஞ்சா கருப்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
![](https://media.maalaimalar.com/h-upload/2023/01/20/1824261-1.webp)
பழனிச்சாமி வாத்தியார் பூஜை
வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
×
X