என் மலர்
நீங்கள் தேடியது "PC"
- ஆப்பிள் M3 சீரிஸ் சிப்செட் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
- 24 இன்ச் ஐமேக் மாடலில் 4.5K ரெட்டினா டிஸ்ப்ளே உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் மேக்புக் ப்ரோ மாடல்களை M3 சிப்செட் மூலம் அப்டேட் செய்த கையோடு 24 இன்ச் ஐமேக் மாடலை முற்றிலும் புதிய M3 சிப் உடன் அறிமுகம் செய்து இருக்கிறது. 2021 மாடலில் M1 சிப் வழங்கப்பட்ட நிலையில், ஐமேக் மாடலுக்கு மிகப் பெரிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. M3 சிப்செட் கொண்ட புதிய ஐமேக் மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட இருமடங்கு வேகமானது ஆகும்.
புதிய மாடலிலும் 4.5K ரெட்டினா டிஸ்ப்ளே, அதிவேக வைபை 6E வயர்லெஸ் கனெக்டிவிட்டி, அதிகபட்சம் 24 ஜி.பி. யுனிஃபைடு மெமரி, அடுத்த தலைமுறை GPU வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஹார்டுவேர் அக்செல்லரேடெட் மெஷ் ஷேடிங் மற்றும் ரே டிரேசிங் போன்ற வசதிகளை வழங்குகிறது.

ஆப்பிள் ஐமேக் 24 இன்ச் 2023 அம்சங்கள்:
24 இன்ச் 4480x2520 பிக்சல் 4.5K ரெட்டினா XDR டிஸ்ப்ளே
ஆப்பிள் M3 சிப்
8 ஜி.பி. யுனிஃபைடு மெமரி
256 ஜி.பி. / 512 ஜி.பி. மெமரி
மேக் ஒ.எஸ். சொனோமா
பேக்லிட் மேஜிக் கீபோர்டு
மேஜிக் கீபோர்டு மற்றும் டச் ஐ.டி.
வை-பை 6E
ப்ளூடூத் 5.3
1080 பிக்சல் ஃபேஸ் டைம் ஹெச்.டி. கேமரா
ஸ்பேஷியல் ஆடியோ
டிஸ்ப்ளே போர்ட், தண்டர்போல்ட் 3
யு.எஸ்.பி. 4, யு.எஸ்.பி. 3.1 ஜென் 2
இந்திய சந்தையில் 24 இன்ச் ஐமேக் M3 (8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. யுனிஃபைடு மெமரி) மாடல் விலை ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 900 என்று துவங்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 74 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.