என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PCOS problem"

    • சரியான மாதவிடாய் சுழற்சி முறையாக கர்ப்பத்தை எளிதாக்கும்.
    • ஆண்கள் பருமனாக இருப்பதாலும் கருவுறுதல் பிரச்சினைகள் ஏற்படும்.

    ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் தாய்மை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆனால் பல நேரங்களில் இந்த மகிழ்ச்சி எல்லா பெண்களுக்கும் கிடைப்பதில்லை. சில காரணங்களால் கர்ப்பம் தரிப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.


    ஆரோக்கியமான உடல் எடை

    ஆரோக்கியமான உடல் எடை இல்லாமல் இருந்தால் அவை முட்டைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும். மேலும் கர்ப்பமடையும் சிக்கல்களை ஏற்படுத்தும். அதிக எடை கொண்ட பெண்கள் தான் குறிப்பாக கர்ப்பம் அடைய மிகவும் சிரமம் அடைகிறர்கள்.

    அதேபோல் ஆண்கள் பருமனாக இருப்பதாலும் கருவுறுதல் பிரச்சினைகள் ஏற்படும். ஆரோக்கியமான உணவுமுறையுடன் தொடர்ந்து உடல் எடையை பராமரிக்கலாம்.


    சரியான மாதவிடாய் சுழற்சி

    சரியான மாதவிடாய் சுழற்சி முறையாக கர்ப்பத்தை எளிதாக்கும். உங்களின் அதிகபட்ச மாதவிடாய் நாட்கள் 3 நாட்கள் ஆகும்.

    தைராய்டு பிரச்சனைகள்

    தைராய்டு ஹார்மோன்களில், T3 மற்றும் T4 ஆகியவையே இனபெருக்கத்துடன் தொடர்புடையவை. உணவு செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்ற விகிதம் ஆகியவற்றின் மீது இவை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

    தைராய்டு ஹார்மோன் சமநிலையற்று இருந்தால் கருத்தரிப்பதில் பிரச்சினைகள் ஏற்படலாம். கர்ப்பங்கள் மற்றும் கருச்சிதைவுகளுக்கு வழிவகுக்கும்.


    பி.சி.ஓ.ஸ் பரிசோதனை

    பி.சி.ஓ.எஸ் என்பது சினைப்பை நீர்க்கட்டி ஆகும். இதனால் ஹார்மோன் குறைபாடு, கருத்தரித்தலில் பிரச்சனை, மாதவிடாய் சுழற்சியில் சிக்கல் போன்ற பல பிரச்சனைகளை கொண்டு வரும்.

    பி.சி.ஒ.எஸ் இருந்தால் உங்கள் சினைப்பையில் சிறிது சிறிதாக நீர்கட்டிகள் உருவாகும். அப்படி நடந்தால் கருமுட்டை உருவாவதில் சிக்கல் ஏற்படும். இதனால் கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் ஏற்படும். சரியான சிகிச்சை எடுப்பதன் மூலம் இதனை கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம்.

    ஹார்மோன் குறைபாடு

    பெண்களின் ஹார்மோன் அளவுகளில் மிகக் குறைந்த அளவில் மாறுதல் ஏற்பட்டால் கூட எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்.

    விந்தணுக்கள் பரிசோதனை

    தம்பதிகள் கருத்தரிப்பதில் சிக்கல் இருக்கும்போது விந்து பகுப்பாய்வு பரிந்துரைக்கப்படுகிறது. இந்த பகுப்பாய்வு குறைந்த விந்தணு எண்ணிக்கை அல்லது விந்தணு செயலிழப்பு கருவுறாமைக்கு காரணமா என்பதை தீர்மானிக்க உதவுகிறது. மேலும் இந்த சோதனை செய்து கொள்வதன் மூலம் உங்கள் குறைகளை கண்டறிந்து அதனை சரிசெய்து விடலாம்.


    ஃபோலிக் அமிலம்

    கருவுற்ற முதலில் குழந்தையின் முதுகெலும்பு மூளை, மற்றும் நரம்புக் குழாய் போன்றவைகள் உருவாகும். அதற்கு இந்த ஃபோலிக் அமிலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நரம்புக் குழாய் குறைபாடுகளிலிருந்து குழந்தையின் அதிகபட்ச பாதுகாப்பிற்காக ஃபோலிக் அமிலம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    கர்ப்பப்பை வாய் ஸ்கிரீனிங் சோதனை

    நீங்கள் 35 முதல் 45 வயதிற்குட்பட்டவராக இருந்து கர்ப்பத்தை திட்டமிட்டால், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். கர்ப்பம் தரிப்பதற்கு முன் பரிசோதனையை மேற்கொள்வது நல்லது.


    உடற்பயிற்சி

    கர்ப்பம் தரிக்க செய்ய வேண்டியவை உடற்பயிற்சி செய்தல் தான். லேசானது முதல் மிதமான உடற்பயிற்சி மாதவிடாய் சுழற்சியை சரிசெய்து, ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களின் ஓட்டத்தை சீராக்கும்.

    சினைப்பை நீர்க்கட்டி ஒரு பெண்ணின் டீன்-ஏஜ் பருவத்திலேயே தொடங்கும் அபாயமும் அதிகரித்து வருகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    சினைப்பை நீர்க்கட்டிகள் உடைய பெண்களுக்கு, ஆண் ஹார்மோன்கள் சுரப்பு அதிகமாக இருக்கும். இதன் எதிரொலியாக முறையற்ற மாதவிடாய் சுழற்சி, தேவையற்ற இடங்களில் ரோம வளர்ச்சி மற்றும் முகப்பரு போன்றவை ஏற்படுகிறது. இந்த சினைப்பை நீர்க்கட்டி ஒரு பெண்ணின் டீன்-ஏஜ் பருவத்திலேயே தொடங்கும் அபாயமும் அதிகரித்து வருகிறது.

    PCOS சில அறிகுறிகள்:

    * முறையற்ற மாதவிடாய் சுழற்சி (45 நாட்கள் அல்லது அதற்கும் மேல் மாதவிடாய் இல்லாமல் இருப்பது அல்லது ஒரு வருடத்தில் 8 முறைக்கும் குறைவாக மாதவிடாய் சுழற்சி)

    * சினைப்பை சற்று பெரிதாக (தொகுதி பெரும்பாலும் (>10cc) காணப்படும் மற்றும் பல சிறிய கட்டிகள் இருக்கலாம். அல்ட்ரா சவுண்ட் மூலம் இதை அறியலாம்.

    * முகம் அல்லது உடலின் மற்ற பகுதிகளில் அதிக ரோம வளர்ச்சி

    * முகப்பரு

    * எடை அதிகரித்தல் (முக்கியமாக வயிற்றுப் பகுதியில்) மேலும் எடை குறைப்பதில் கடினம்.

    * கழுத்து மற்றும் பிற பகுதிகளில் கருந்திட்டுகள் ஏற்படுவது (dark skin patches).

    * இடுப்பு வலியோடு மன அழுத்தம்.

    மேலே குறிப்பிட்டுள்ளவற்றில் சில அறிகுறிகளோ அல்லது அனைத்து அறிகுறிகளும் இருந்தால், PCOS பாதிப்பு இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.



    PCOS எதனால் ஏற்படுகிறது?

    PCOS என்பது சினைப்பை மற்றும் மூளைப் பகுதியில் இருக்கும் ஹார்மோன்களின் சமநிலையின்மையால் ஏற்படுகிறது. குறிப்பாக, பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரக்கும் Luteinizing hormone அல்லது கணையத்தில் இருந்து சுரக்கும் இன்சுலின் சராசரி அளவை விட அதிகமாக இருப்பின் அது சினைப் பையில் அதிக அளவு டெஸ்டோஸ்டிரோன் என்கிற ஆண் ஹார்மோன்கள் சுரக்க காரணமாகிறது.

    மரபணுக்களும் கூட இதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. அம்மாவுக்கோ அல்லது சகோதரிக்கோ PCOS இருந்தால் அந்தக் குடும்பத்தில் மற்றவருக்கும் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். PCOS-க்கு சிகிச்சை பொதுவாக PCOS-க்கு கருத்தடை மாத்திரைகள், ஹார்மோன் சிகிச்சை பரிந்துரைக்கப்படலாம். உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்வது மிக அவசியமானது.

    * ஹார்மோன் சமநிலைபடுத்துதல்

    * டெஸ்டோஸ்டிரோன் அளவை குறைத்தல்.

    * மாதவிடாய் முறைப்படுத்துதல்

    * உங்கள் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல்.

    * உடல் எடையைக் குறைத்தல் ஆயிவற்றை பரிந்துரை செய்வார்கள்.
    ×