search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "People's demand"

    • குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை வருவதால் மக்களும் அச்சத்தில் உள்ளனர்.
    • குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தை நுழைவது வாடிக்கையாகி விட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அண்மைக்காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    குறிப்பாக வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் சிறுத்தை, வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளை வேட்டையாடி செல்வது அதிகரித்துள்ளது.

    சிறுத்தை அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் வருவதால் மக்களும் அச்சத்தில் உள்ளனர்.

    ஊட்டி அருகே கல்லக்கொரை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்குள் சம்பவத்தன்று இரவு வனத்தை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று புகுந்தது.

    குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை அங்கு உணவு தேடி அலைந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் அங்குள்ள வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை, வீட்டின் வளாகத்தில் சிறிது நேரம் சுற்றி வந்தது.

    பின்னர் வீட்டின் மொட்டை மாடிக்கு தாவிய சிறுத்தை, அங்கு கட்டப்பட்டிருந்த வளர்ப்பு நாயை தனது வாயில் கவ்வி கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி வெளியே சென்று விட்டது.

    இந்த காட்சிகள் அனைத்தும் வீட்டில் உள்ள சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி இருந்தது. இதை பார்த்த வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியதால் மக்களும் அச்சத்தில் உள்ளனர்.

    இதற்கிடையே இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்திலும் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த பலரும் அதிர்ச்சியாகினர். தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தை நுழைவது வாடிக்கையாகி விட்டது. இதனால் நாங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் வருவதற்கு அச்சமாக உள்ளது.

    எனவே வனத்துறையினர் இந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு சிறுத்தையை கண்காணித்து அடர்ந்த வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தற்போது பகல் நேரத்திலும் விலங்குகள் உலா வரத் தொடங்கி உள்ளன.
    • விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடி வருகின்றனர். இரவு நேரத்தில் மட்டும் ஊருக்குள் உலா வந்த வனவிலங்குகள் தற்போது பகல் நேரத்திலும் உலா வரத் தொடங்கி உள்ளன.

    இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

    குன்னூர் அருகே உள்ள பழத்தோட்டம் பகுதியில் கடந்த சில நாட்களாகவே கரடிகள் சுற்றி வருகின்றன. இந்த பகுதியின் அருகே தேயிலை தோட்டம் உள்ளது. சம்பவத்தன்று அந்த தோட்டத்திற்குள் கரடி ஒன்று புகுந்தது.

    மக்கள் நடமாட்டம் இருப்பதை அறிந்து கொண்ட கரடி அங்கு மிங்கும் ஓடியது. பின்னர் அங்குள்ள மரத்தின் அருகே சென்று மரத்தை சுற்றியது. மரத்தில் உள்ள கிளைகளை இழுத்தும், தலையை மரத்தின் இடுக்கில் கொடுத்தும் விளையாடி கொண்டிருந்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக மரத்தின் இடுக்கில் கரடியின் தலை சிக்கிக்கொண்டது. இதனால் கரடி அலறியது. சத்தம் கேட்டு தொழிலாளர்கள் அங்கு சென்று பார்த்தனர். கரடியின் தலை மரத்தின் இடுக்கில் சிக்கியிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    கரடி தலையை மீட்பதற்காக போராடியது. அரைமணிநேர போராட்டத்திற்கு பிறகு மரத்தின் இடுக்கில் சிக்கிய தலையை மீட்டது. பின்னர் அங்கிருந்து வனத்திற்குள் ஓடிவிட்டது. தகவல் அறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பழத்தோட்ட பகுதியில் தொடர்ந்து கரடிகள் நடமாடி வருவதால் அதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 3 பகுதிகளை இணைக்ககூடிய பகுதியாக கட்டப்பெட்டு பகுதி உள்ளது.
    • சுற்றுலா வரும் பயணிகள் மட்டுமின்றி இங்கு கடை நடத்தி வருபவர்களும் மிகவும் அவதி அடைகின்றனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர், ஊட்டி பகுதிகளை இணைக்ககூடிய பகுதியாக கட்டப்பெட்டு பகுதி உள்ளது.

    அதிகமான சுற்றுலா பயணிகள் இந்த வழியாக தான் சென்று வருகின்றனர். குறிப்பாக சீசன் காலங்களில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் இந்த பாதையை தான் பயன்படுத்தி வருகிறார்கள்.

    இதுதவிர இந்த பகுதியில் ஏராளமான கடைகளும் உள்ளன. இப்படி சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் வரக் கூடிய இடமான இந்த கட்டபெட்டு பகுதியில் ஒரு கழிவறை வசதி கூட இல்லை. இதனால் சுற்றுலா வரும் பயணிகள் மட்டுமின்றி இங்கு கடை நடத்தி வருபவர்களும் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே இந்த பகுதியில் கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • செங்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கு வாரத்திற்கு மும்முறை ரெயில் இயக்கப்படுகிறது.
    • நெல்லை-தாம்பரம் சிறப்பு ரெயில் கடந்த 3 மாதங்கள் இயங்கி தென்னக ரெயில்வேக்கு நல்ல வருமானம் கொடுத்தது

    தென்காசி:

    இந்திய ரெயில்வே கால அட்டவணை சந்திப்பின்போது செங்கோட்டை-தாம்பரம் இடையே புதிய ரெயில்கள் இயக்கம் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்டது.

    அதில் அளிக்கப்பட்ட பதிலில் செங்கோட்டையிலிருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து மதியம் 3.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு செங்கோட்டை வந்தடையும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த ரெயில் செங்கோட்டையிலிருந்து, தென்காசி, அம்பை, நெல்லை, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக தாம்பரம் சென்றடையும்.

    அதாவது அம்பை, அருப்புக்கோட்டை, பட்டுக்கோட்டை இந்த மூன்று ரெயில் வழித்தடங்களின் சென்னை ரெயில் கோரிக்கைகளை ஒரே ரெயிலில் நிறைவேற்ற அட்டவணை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தென்மாவட்ட பயணியர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஏற்கனவே அம்பை ரெயில் வழித்தட பயணிகளிடையே நல்ல வரவேற்்பை பெற்ற, 2020-ம் ஆண்டு முன்மொழிவு செய்யப்பட்ட நெல்லை-தாம்பரம் வழி அம்பை, தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், அருப்புக்கோட்டை, புதுக்கோட்டை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் ரெயில் கோரிக்கை நிலுவையில் உள்ளது.

    மேலும் இந்த நெல்லை-தாம்பரம் சிறப்பு ரெயில் கடந்த 3 மாதங்கள் இயங்கி தென்னக ரெயில்வேக்கு நல்ல வருமானம் கொடுத்தது.


    இதுகுறித்து தென் மாவட்ட ரெயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகி அந்தோணி கூறுகையில், சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பிரதான வழித்தடங்கள் அனைத்தும் மின்மயமாக்கல் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

    அம்பை ரெயில் வழித்தட பயணிகளின் நலன் கருதி அதிகபட்சம் 12 மணி நேரத்தில் சென்னை செல்லும் வகையில் இயங்கிய நெல்லை-தாம்பரம் ரெயிலை இயக்க தென்னக ரெயில்வே முன்வரவேண்டும். மேலும் 16 மணி நேரம் சென்னை செல்வதற்கு பயணிகள் விரும்பமாட்டார்கள்.

    தாம்பரத்திலிருந்து சிலம்பு எக்ஸ்பிரஸ் செல்லும் ரெயில் வழித்தடத்தின் வழியாக இந்த வாரம் மும்முறை ரெயிலை இயக்கினாலும் பரவாயில்லை. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் விருப்பத்துக்கு ஏற்ப மாலை 7 மணிக்கு நெல்லையில் புறப்பட்டு தென்காசி வழியாக மறுநாள் காலை 7 மணிக்கு தாம்பரம் செல்லும் வகையில் அட்டவணை ஏற்படுத்தப்பட்டு ரெயில் இயக்க வேண்டும் என்றார்.

    • பண்ருட்டி அருகே அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடத்தை சபா.ராஜேந்திரன், எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
    • அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று மாணவ மாணவிகளுக்கு உதவுகின்ற வகையில் மாவட்ட கனிமவள அறக்கட்டளை நிதியில் ரூபாய் 15 லட்சம் பெற்று, 2 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    கடலூர்:

    நெய்வேலி சட்ட மன்ற தொகுதி, பண்ருட்டி அருகே கருக்கை கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு இட பற்றாக்குறை உள்ளதால் புதிய வகுப்பறை கட்டிடம் வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று மாணவ மாணவிகளுக்கு உதவுகின்ற வகையில் மாவட்ட கனிமவள அறக்கட்டளை நிதியில் ரூபாய் 15 லட்சம் பெற்று, 2 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்ட பட்டு, திறப்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக திரு சபா.ராேஜந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய சேர்மன் சபா. பாலமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் ஜெகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரன், வட்டார கல்வி அலுவலர் செல்வம்,பள்ளித் தலைமை ஆசிரியர் செல்வி, ஊராட்சி மன்ற தலைவர் கலைமணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கலியபெருமாள், ஊராட்சி செயலாளர் ஜோதிநாதன்,உக்கரமூர்த்தி, ராமநாதன், திருநாவுக்கரசு, வெங்கடேசன், சேட்டு, ராஜிவ்காந்தி, கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் கவிதாஞானசேகரன், ஒன்றிய விவசாய அணி செந்தாமரை, குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் குணசேகரன், தொமுச பேரவை துணை தலைவர் வீரராமச்சந்திரன், பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய மேலாளர் பாண்டியன், ஒன்றிய துணைச் செயலர்கள் செல்வகுமார், ஏழுமலை, மற்றும் கழக நிர்வாகிகள் வழக்கறிஞர் வெங்கடேசன், மாணவரணி இளங்கோ, வருவாய் ஆய்வாளர் மணிவண்ணன், கிராம நிர்வாக அலுவலர் சத்தியமூர்த்தி, ஒப்பந்ததாரர் நித்தியநந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×