search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Periya Nayagi Ambal"

    • நடராஜப் பெருமான் லதா விருச்சிக நடனத் தோற்றத்தில் அற்புதமாக தாண்டவமாடுவதை பார்க்கலாம்.
    • இந்தக் கோவிலுள்ள துர்க்கை மிகவும் சக்தி உடையவர்களாகக் கருதப்படுகிறாள்.

    குடந்தையில் மிகத் தொன்மை வாய்ந்த சிறப்புடைய கோவில்களில் நாகேஸ்வர சுவாமி கோவில் முக்கியமானதாகும்.

    இறைவன் மடந்தை பாகார், எனும் நாகேஸ்வரர், அம்பாள் பெயர் பெரிய நாயகி.

    பிரளய காலத்தில் அமுத கும்பத்திலிருந்து வில்வம் விழுந்த இடம் இத்தலம்தான். முதலில் இதற்கு வில்வ வனம் என்று பெயர்.

    தேவார காலத்தில் குடந்தையின் கீழ்க் கோட்டமாக இக்கோவில் கருதப்பட்டது.

    முன்பொரு சமயம் பூமியின் பாரத்தால் அதை தாங்க முடியாமல் ஆதிசேஷன் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டு நிறைய வலிமை பெற்றதால் நாகேஸ்வரர் கோவிலாக பின்பு மாறியது.

    ஆதிசேஷனைப் போல் சூரியனுக்கும் திடீரென்று வலிமையும், பிரகாசமும் குறைந்து கொண்டே வந்தது.

    இத்தலத்தில் குடி கொண்டிருக்கும் சிவபெருமானை தரிசனம் செய்தால் இழந்த ஒளியை மீண்டும் பெறலாம் என்ற வாக்கிற்கிணங்க சூரியன் இங்கு வந்து இறைவனை வணங்கினார்.

    இறைவனும் சூரியனுக்குரிய குறையை போக்கி அருள் பாலித்தார்.

    இதனால் இது பாஸ்கர ஷேத்திரம் என்றும் கருதப்படுகிறது. இங்கு சூரியனுக்கு சன்னதி உண்டு.

    ஒவ்வொரு ஆண்டும் சித்திரை 11, 12, 13ந் தேதியன்று சூரியனின் உதய கால கிரணங்கள் நாகேஸ்வர லிங்கத்தின் மீது விழுகின்ற காட்சியை இப்பொழுதும் காணலாம்.

    இறைவியின் அழகு சொல்ல முடியாதது.

    நடராஜப் பெருமான் லதா விருச்சிக நடனத் தோற்றத்தில் அற்புதமாக தாண்டவமாடுவதை பார்க்கலாம்.

    இந்தக் கோவிலுள்ள துர்க்கை மிகவும் சக்தி உடையவர்களாகக் கருதப்படுகிறாள்.

    ×