என் மலர்
நீங்கள் தேடியது "perumalsamy"
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தில் பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமி இன்று ஆஜரானார். #JayaDeathProbe
சென்னை:
ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ டாக்டர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள், சசிகலாவின் உறவினர்கள் என 150 பேர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
சசிகலாவும், தனது தரப்பு விளக்கத்தை வக்கீல் மூலம் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளார். இதில் 50-க்கும் மேற்பட்டவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தி உள்ளார்.
தற்போது விசாரணை இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதை ஏற்று பெருமாள்சாமி இன்று ஆணையத்தில் ஆஜர் ஆனார். அவருடன் அண்ணாநகர் துணை கமிஷனர் சுதாகரும் ஆஜரானார்.
இதேபோல் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் 3-வது நாளாக மீண்டும் ஆஜரானார்.
இவர்களிடம் ஆணையத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
இதன் அடுத்த கட்டமாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்ப உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #JayaDeathProbe
ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ டாக்டர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள், சசிகலாவின் உறவினர்கள் என 150 பேர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
சசிகலாவும், தனது தரப்பு விளக்கத்தை வக்கீல் மூலம் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளார். இதில் 50-க்கும் மேற்பட்டவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தி உள்ளார்.
தற்போது விசாரணை இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.
ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள்சாமியிடம் மீண்டும் விசாரிக்க ஆணையம் முடிவு செய்திருந்தது.