search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "petrol pumps"

    வாட் வரியை குறைக்க மறுக்கும் டெல்லி அரசின் முடிவை எதிர்த்து நாளை பெட்ரோல் பங்குகள் 24 மணிநேர வேலைநிறுத்தம் செய்வதால் கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. #Petrolpumpsshut #Delhi #Petrolpumpsshut
    புதுடெல்லி:

    நாளுக்குநாள் அதிகரித்துகொண்டே வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் மக்கள் அடையும் பாதிப்பை சரிகட்டும் வகையில் அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு (வாட்) வரியை ஓரளவுக்கு குறைத்துள்ளன. 

    இதேபோல், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசும் வாட் வரியை குறைக்க வேண்டும் என இங்குள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், இந்த கோரிக்கைக்கு டெல்லி அரசு செவி சாய்க்கவில்லை.

    வெளி இடங்களில் இருந்து டெல்லி வழியாக செல்லும் பல கார், லாரி, பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் வாட் வரி குறைவாக உள்ள அண்டை மாநிலங்களான அரியானா, உத்தரப்பிரதேசம் பகுதியில் பெட்ரோல் நிரப்பினால் ஓரளவுக்கு பணத்தை மிச்சப்படும் என கருதி டெல்லிக்கு உட்பட்ட பங்குகளில் பெட்ரோல், டீசல் நிரப்புவதை தவிர்த்து விடுகின்றனர்.

    இதனால், கடந்த 3 மாதங்களாக டெல்லியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் டீசல் விற்பனை 60 சதவீதம் அளவிலும், பெட்ரோல் விற்பனை 25  சதவீதம் அளவிலும் குறைந்துப் போனதாக பெட்ரோல் பங்கு உரிமையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    எனவே, வாட் வரியை டெல்லி அரசு குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் உள்ள சுமார் 400 பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் பங்குகள் 24 மணிநேர கதவடைப்பு போராட்டத்தில் குதித்துள்ளன.

    இதன் விளைவாக நாளை காலை 6 மணிமுதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிவரை பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படாது என்பதால் தலைநகர் டெல்லியில் நாளை கால் டாக்சி மற்றும் ஆட்டோ ரிக்‌ஷா சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. #Petrolpumpsshut #Delhi #Petrolpumpsshut 
    ×