search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pettikadai"

    இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சமுத்திரகனி, வீரா, சாந்தினி, வர்ஷா, சுந்தர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `பெட்டிக்கடை' படத்தின் விமர்சனம். #Pettikadai #PettikadaiReview
    சாந்தினி ஒரு கிராமத்திற்கு மருத்துவராக செல்கிறார். அங்கே பெட்டிக்கடையே இல்லை. கார்ப்பரேட் என்னும் நிறுவனம் ஒன்று டோர் டெலிவரி மூலம் மக்களுக்கு தேவையான பொருட்களை விற்கிறார்கள். வேறு யாரும் கடை வைக்க கூடாது என்று மிரட்டி பணிய வைக்கிறார்கள். இந்த நிலையை எதிர்த்தவர்களை கொலை செய்து விடுகிறார்கள். அந்த நிறுவனத்துக்கு எதிராக சாந்தினி அறப்போராட்டத்தில் இறங்குகிறார். அவர் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு கிடைத்ததா? வெற்றி பெற்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    சமுத்திரகனி வாத்தியாராக சில காட்சிகளில் வந்து போகிறார். அவர் பேசும் வசனங்களின் உள்ள உண்மை கைதட்டல்களை பெறுகிறது. துணிச்சலான போராளியாக சாந்தினி சிறப்பாக நடித்துள்ளார். வீரா - வர்ஷா ஜோடி படத்தின் இளமை பகுதியை தங்கள் குறும்பு காதல் மூலம் நிறைக்கிறார்கள். மொட்டை ராஜேந்திரன் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். களவாணி திருமுகன் வில்லத்தனமான போலீசாக மிரட்டுகிறார். 

    அருமையான அவசியமான கருத்தை கதைக்களமாக்கியதற்காக இயக்குனர் இசக்கி கார்வண்ணனை பாராட்டலாம். கார்ப்பரேட் நிறுவனங்களால் பெட்டிக்கடைகள் அழிந்து போனதையும் அதன் விளைவுகளையும் சொல்லும் கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். இன்றைய சமூக அவல நிலையை கதையாக எழுதிய இயக்குனர் இன்னும் சுவாரசியமான திரைக்கதையையும் உருவாக்கி இருக்கலாம். கிராமத்தை கார்ப்பரேட் கம்பெனி கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது முதல் பல காட்சிகளில் லாஜிக் மீறல்கள் தெரிகிறது.



    அருள், சீனிவாஸ் இருவரின் ஒளிப்பதிவும் கிராமத்தை அழகாக படம் பிடித்துள்ளது. மரியா மனோகர் இசையில் நா.முத்துகுமார் எழுதிய பாடல் ரசிக்க வைக்கிறது.

    மொத்தத்தில் `பெட்டிக்கடை' தேவை.
    இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள பெட்டிக்கடை படத்தை விஜய்யின் சர்கார் படத்துடன் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், சமுத்திரக்கனி அதனை தவிர்த்திருக்கிறார். #Pettikadai #Samuthirakani
    நடிகர் சமுத்திரகனி சமூக அக்கறை கொண்ட கதைகளை மையப்படுத்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார். அடுத்து அவர் லட்சுமி கிரியே‌ஷன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்.

    இசக்கி கார்வண்ணன் இயக்கும் இப்படத்திற்கு பெட்டிக்கடை என பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் சமுத்திரகனி சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட ஆசிரியராக நடிக்கிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சமுத்திரகனி பேசும்போது, பெட்டிக்கடைகளின் அழிவு அடுத்த தலைமுறையை எப்படி பாதிக்கும் என்பதை இயக்குனர் சொல்லி இருக்கிறார். 

    இயக்குனர் திடீர் என்று ஒரு நாள் வந்து சர்கார் படத்துடன் நம்ம படத்தையும் ரிலீஸ் செய்வோம். அவங்க சர்காரைப் பற்றி சொல்றாங்க. நாம சமூக விரோதிகளைப் பற்றி சொல்றோம்.



    ஒரே தேதியில் ரிலீஸ் செய்வோம் என்றார். நான் தான் அப்படியெல்லாம் வேண்டாம். நமக்கு என்று ஒரு தேதி வரும் அப்ப ரிலீஸ் செய்வோம் என்று அனுப்பி வைத்தேன். அந்தளவுக்கு அவருக்கு படத்து மேலே அவ்வளவு நம்பிக்கை’. இவ்வாறு சமுத்திரகனி பேசினார். #Pettikadai #Samuthirakani

    ×