என் மலர்
நீங்கள் தேடியது "Philippine"
- பிலிப்பைன்சில் பிக் அப் டிரக் மீது பயணிகள் பஸ் மோதியது.
- இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மணிலா:
பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிகரிக்கும் விதிமீறல்கள் மற்றும் மோசமாக பராமரிக்கப்படும் வாகனங்களால் சாலை விபத்துகள் அடிக்கடி நடந்து வருகின்றன.
இந்நிலையில், வடக்கு பிலிப்பைன்ஸில் பிக் அப் டிரக் மீது பயணிகள் பஸ் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து ககாயன் மாகாணத்தில் உள்ள அபுலுக் நகராட்சியில் உள்ள சந்திப்பில் நேற்று நள்ளிரவு நடந்துள்ளது.
இதுதொடர்பாக நடந்த விசாரணையில், பயணிகள் பஸ்சில் எந்த உயிரிழப்பும் இல்லை. பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் படுகாயம் அடைந்தனர். பயணிகளில் 23 பேர் காயம் அடைந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.
- பிலிப்பைன்சில் பெய்து வரும் கனமழையால் டிராமி புயல் உருவானது.
- இந்தப் புயல் அங்குள்ள பல மாகாணங்களை புரட்டிப் போட்டது.
மணிலா:
பிலிப்பைன்சில் பெய்து வரும் கனமழையால் டிராமி புயல் உருவானது. இந்தப் புயல் அங்குள்ள பல மாகாணங்களை புரட்டிப் போட்டது. இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு சுமார் 160 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் பல மாகாணங்களில் கனமழை கொட்டியது. பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் பல வீடுகள், கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
கனமழையை தொடர்ந்து படங்காஸ் மாகாணத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணில் புதையுண்டன. தகவலறிந்த மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.
இந்நிலையில், பிலிப்பைன்ஸ் டிராமி புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கி மாயமாகினர்.
நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
- 114 அடி உயரத்தில் இந்த கோழி வடிவ ஓட்டல் கட்டப்பட்டுள்ளது.
- புயல் மற்றும் சூறாவளியை தாங்கும் வகையில் இந்த ஓட்டல் வடிவமைக்கபட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் உலகின் மிகப்பெரிய கோழி வடிவ ஓட்டல் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
காம்புஸ்டோஹான் ஹைலேண்ட் ரிசார்ட்டின் ஒரு பகுதியாக கட்டப்பட்டுள்ள இந்த கோழி வடிவ ஓட்டல் 34.931 மீட்டர் (114 அடி 7 அங்குலம்) உயரமும் 12.127 மீட்டர் (39 அடி 9 அங்குலம் ) அகலமும் 28.172 மீட்டர் (92 அடி 5 அங்குலம்) நீளமும் கொண்டது. வந்த ஓட்டலில் 15 அறைகள் உள்ளன.
2023 ஜூன் 10 ஆம் தேதி தொடங்கப்பட்டு 2024 செப்டம்பர் 8 ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்ட இந்த ஓட்டல் உலக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.
கடுமையான புயல் மற்றும் சூறாவளியை தாங்கும் வகையில் இந்த ஓட்டல் வடிவமைக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிலிப்பைன்ஸ் மீன்பிடி படகுகள் மீது சீன கடற்படையினர் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர்.
- சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மணிலா:
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தென்சீனக் கடல் பகுதி முழுமைக்கும் சீனா உரிமை கொண்டாடுகிறது. அதேசமயம் பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான் உள்ளிட்ட நாடுகளும் அந்த பகுதிகளுக்கு உரிமை கோருகின்றன. எனவே அந்த நாடுகளுக்கும், சீனாவுக்கும் இடையே அவ்வப்போது அங்கு மோதல் ஏற்படுகிறது. குறிப்பாக அங்கு செல்லும் பிலிப்பைன்ஸ் மீன்பிடி படகுகள் மீது சீன கடற்படையினர் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர்.
இந்த விவகாரத்தில் பிலிப்பைன்சுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களமிறங்கியது. எனவே சர்ச்சைக்குரிய அந்த பகுதியில் பிலிப்பைன்சுடன் இணைந்து அமெரிக்கா கூட்டுப்போர் பயிற்சியை நடத்துகிறது.
இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் இரு நாடுகளும் நேற்று மீண்டும் கூட்டுப்போர் பயிற்சியை தொடங்கின. இதில் அமெரிக்காவின் பி.1-பி குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் எப்.ஏ-50 போர் விமானங்கள் போன்றவை ஈடுபடுத்தப்பட்டதாக பிலிப்பைன்ஸ் விமானப்படை செய்தித்தொடர்பாளர் மரியா கான்சுலோ தெரிவித்துள்ளார்.
- 3 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
- 2-வது மாடியில் வசித்து வந்தவர்களில் 2 பேரும், 3 மாடியவில் வசித்து வந்தவர்களில் 6 பேரும் உயிரிழந்தனர்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் புறநகர் பகுதியான குயிசன் நகரில் உள்ள சான் இசிட்ரோ கலாஸ் கிராமத்தில் இன்று அதிகாலை 3 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பயங்கர தீ விபத்தில் முதல் தளத்தில் வசித்து வந்த 2 பேரும், 2-வது தளத்தில் வசித்து வந்த 6 பேரும் தீயில் சிக்கி உயிரிழந்தனர். தீ விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். கோடைக்காலம் தொடங்குவை முன்னிட்டு மார்ச் மாதம் அரசு தீ விபத்தை தடுப்பது குறித்து வழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. மார்ச் மாதம் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தாதது, அதிக மக்கள் கூட்டம், ஒழுங்கற்ற கட்டட வடிவமைப்பு ஆகியவை அடிக்கடி தீ விபத்து ஏற்பட காரணம் எனக் கூறப்படுகிறது.
குயிசனில் கடந்த 1996-ம் ஆண்டு இரவு விடுதியில் நடைபெற்ற தீ விபத்தில் 162 பேர் உயிரிழந்தனர். பள்ளி இறுதித் தேர்வு முடிவடைந்ததையொட்டி ஏராளமான மாணவர்கள் விடுதிக்கு சென்றிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் தீயில் சிக்கி உயிரிழந்தனர். இந்த விபத்து பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட தீ விபத்துகளில் மிகவும் கொடூரமான தீ விபத்தாக கருதப்படுகிறது.
புவியியல் அமைப்பின்படி நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டின் கலுஸான் தீவில் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
பூமியின் அடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் மையம்கொண்ட இந்த நிலநடுக்கத்தால் லுஸான் தீவில் உள்ள பல கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. பீதியடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகள் போன்ற திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்தனர். பல கட்டிடங்கள் அட்டைப்பெட்டிகளைப் போல் சரிந்து விழுந்தன.
லுஸான் தீவின் போராக் நகரில் உள்ள 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் இருந்து 20-க்கும் அதிகமானவர்கள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மூன்று பிரேதங்களும் வெளியே எடுக்கப்பட்டன. இதேபோல், லுபாவ் நகரில் இடிந்து விழுந்த மற்றொரு கட்டிடத்தில் இருந்து ஒரு குழந்தை உள்பட இருவரின் பிரேதங்கள் மீட்கப்பட்டதாக பம்பாங்கா மாகாண கவர்னர் லிலியா பினேடா நேற்று மாலை தெரிவித்தார்.

இந்நிலையில், இன்றைய நிலவரப்படி உயிரிழப்பு எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புக்குழுவின் இயக்குனர் ரிக்கார்டோ சாலட் தெரிவித்துள்ளார். மேலும் நிலநடுக்கம் சார்ந்த விபத்துகளில் 81 பேர் காயமடைந்ததாகவும், காணாமல்போன 14 பேரை இடிபாடுகளுக்கு இடையில் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். #Philippinequake #Philippinequaketoll