search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PhonePe"

    • தனக்கு உள்பட மக்களுக்கு இந்த மசோதா நியாயமானது கிடையாது.
    • 25 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கிய சொந்த நகரத்தில் வசித்து வரும் எனது குழந்தைகளுக்கு...,

    கர்நாடக மாநில மந்திரிசபையில் தனியார் நிறுவனங்களில் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 100 சதவீத வேலை வாய்ப்பை உறுதி செய்யும் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார்.

    இதற்கு பெரும்பாலான தனியார் நிறுவன உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் மசோதா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சித்தராமையா தெரிவித்தார். நிர்வாகம் தொடர்பான வேலையில் 50 சதவீதம், நிர்வாகம் அல்லாத வேலையில் 75 சதவீதம் ஒதுக்கீடு என மசோதாவில் திருத்தம் கொண்டு வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    இந்த நிலையில் பணபரிமாற்றம் செயலியான போன்பே (PhonePe) சிஇஓ சமீர் நிகம் "தனக்கு உள்பட மக்களுக்கு இந்த மசோதா நியாயமானது கிடையாது. என்னுடைய தந்தை அவரது பணிக்காலத்தில் பல்வேறு மாநிலங்களில் இந்திய கடற்படையில் பணிபுரிந்துள்ளார். என்னுடைய கேள்வி, 25 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கிய சொந்த நகரத்தில் வசித்து வரும் எனது குழந்தைகளுக்கு வேலை மறுக்கப்படுமா? என்பதுதான் எனக் கூறியிருந்தார்.

    இதற்கு கன்னடர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். PhonePe-ஐ புறக்கணிக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் போன்பே சிஇஓ சமீர் நிகர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார்.

    நான் யாருடைய உணர்வையும் புண்படுத்தும் நோக்கத்தில் இதுபோன்று கூறவில்லை. யாரையும் காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் முதலாவதாக, முதன்மையாக விளக்கம் அளிக்க விரும்புகிறேன்.

    என்னுடைய நோக்கம் ஒருபோதும் கர்நாடகா மற்றும் அங்குள்ள மக்களை இழிவுப்படுத்துவது இல்லை. என்னுடைய கருத்து யாருடைய உணர்வை காயப்படுத்தியிருந்தால், உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.

    போன்பே (PhonePe) நிறுவனம் பெங்களூருவில்தான் தொடங்கப்பட்டது. தொழில்நுட்பத் திறமை மற்றும் கலாச்சார பன்முகத்தன்மைக்கு பெயர் பெற்ற இந்த நகரத்தில் உள்ள நம்முடைய அடித்தளம் பற்றி நம்பமுடியாத அளவிற்கு பெருமிதம் கொள்கிறேன். எனத் தெரிவித்துள்ளார்.

    ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் பயனர்கள் ரூ.199 சலுகைக்கு ரீசார்ஜ் செய்யும் போது ரூ.75 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. #offers



    இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பணப்பரிமாற்ற சேவையை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக அறியப்படும் போன்பெ ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து புதிய சலுகையை அறிவித்துள்ளது. 

    அதன்படி போன்பெ ஆப் மூலம் ரூ.199 பிரீபெயிட் ரீசார்ஜ் செய்யும் ஏர்டெல் பயனர்களுக்கு ரூ.75 கேஷ்பேக் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மைஏர்டெல் ஆப் மூலம் ரீசார்ஜ் செய்து, போன்பெ வாலெட் மூலம் பணம் செலுத்துவோருக்கும் கேஷ்பேக் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏர்டெல் வழங்கும் ரூ.199 சலுகையில் தினமும் 1.4 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் (உள்ளூர் மற்றும் வெளியூர்), இலவச ரோமிங் மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ரூ.199 சலுகையின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

    இந்த சலுகையின் கீழ் ஏர்டெல் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மாதம் ரூ.25 கேஷ்பேக் ஆகஸ்டு, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கான கேஷ்பேக் தொகை போன்பெ வாலெட் / கிஃப்ட் வவுச்சர் பேலென்ஸ் / போன்பெ அக்கவுன்ட் மூலம் பெற முடியும். 
    ஐ.ஆர்.சி.டி.சி.-யின் ரெயில் கனெக்ட் ஆன்ட்ராய்டு செயலியில் கட்டணம் செலுத்த புதிய பேமென்ட் ஆப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது. #PhonePe #IRCTC
     

    இந்திய ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. உடன் இணைவதை போன்பெ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி. ரெயில் கனெக்ட் ஆன்ட்ராய்டு செயலியில் பணம் செலுத்த இனி போன்பெ பயன்படுத்தலாம்.

    இதனால் போன்பெ செயலியை பயன்படுத்தும் சுமார் ஒரு கோடி பயனர்கள் யு.பி.ஐ., கிரெடிட், டெபிட் கார்டு மற்றும் போன்பெ வாலெட் பயன்படுத்தி தங்களது வங்கி கணக்குகளில் இருந்து நேரடியாக பணம் செலுத்தலாம்.

    "இந்தியாவில் பயணங்களை மேற்கொள்ள முன்பதிவுகளுக்கு நம்பத்தகுந்த தளமாக இருக்கும் ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கூட்டணியின் மூலம் இந்தியா முழுக்க டிஜிட்டல் பண பரிமாற்றங்களை அதிகரிக்க முடியும். ஐ.ஆர்.சி.டி.சி. செயலியில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பேமென்ட் வசதிகளுடன் பயனர்கள் இனி யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்த முடியும்," என போன்பெ நிறுவனததின் கார்திக் ரகுபதி தெரிவித்தார்.

    "இந்த கூட்டணி மூலம் ஐ.ஆர்.சி.டி.சி. பயனர்கள் சிறப்பான முன்பதிவு அனுபவம் பெறுவதோடு டிஜிட்டல் பேமென்ட் நன்மைகளை பெரும்பாலானோருக்கு கொண்டு சேர்க்கும்," என அவர் மேலும் தெரிவித்தார்.

    முன்னதாக ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் இ-வாலெட் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இதை கொண்டு பயனர்கள் தட்கல் டிக்கெட்களை ஐ.ஆர்.சி.டி.சி. ரெயில் கனெக்ட் செயலிய மூலம் முன்பதிவு செய்ய முடியும். வேகமாக டிக்கெட் முன்பதிவு செய்யும் நோக்கில் இ-வாலெட் சேவையில் பயனர்கள் முன்கூட்டியே பணத்தை சேர்த்து வைக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற மொபைல் வாலெட் போன்றே இந்த பணம் கொண்டு டிக்கெட் முன்பபதிவின் போது பயன்படுத்தலாம்.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவன போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ஹாலிடே ஹங்காமா ஆஃபர் எனும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஜியோ போஸ்ட்பெயிட் சலுகையை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ ஹாலிடே ஹங்காமா ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.399 ரீசார்ஜ் செய்து ரூ.100 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

    ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.399 சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா, 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் ஜியோ சேவைகள் வழங்கப்படுகிறது. 

    இத்துடன் மைஜியோ செயலியை பயன்படுத்துவோர் போன்பெ மூலம் பணம் செலுத்தும் போது ரூ.100 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.



    ஜியோ சலுகையை பெறுவது எப்படி?

    - மைஜியோ செயலியில் லாக் இன் செய்து ரீசார்ஜ் செய்யக்கோரும் - - -

    - ஆப்ஷனை க்ளிக் செய்யவும்

    - இனி பை (Buy) பட்டனை க்ளிக் செய்து கட்டணம் செலுத்தலாம் (ரூ.50 - 
    உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது)

    - போன்பெ வாலெட்-ஐ பேமென்ட் ஆப்ஷனாக தேர்வு செய்ய வேண்டும்

    - போன்பெ கணக்கில் சைன்-இன் செய்து, மொபைல் நம்பர் மூலம் உறுதி செய்ய வேண்டும்

    - போன்பெ வாலெட் மூலம் பணம் செலுத்த வேண்டும் (ரூ.50 கேஷபேக் போன்பெ வாலெட்-இல் சேர்க்கப்படும்)

    புதிய ரிலையன்ஸ் ஜியோ சலுகை ஜூன் 1-தேதி முதல் ஜூன் 15-ம் தேதி வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ×