என் மலர்
நீங்கள் தேடியது "PIA"
- கராச்சியில் இருந்து உள்நாட்டு விமானம் புறப்பட்டு லாகூர் சென்றடைந்தது.
- லாகூரில் தரையிறங்கும்போது லேண்டிங் கியரின் பின்புற சக்கரம் காணாமல் போனது தெரியவந்தது.
பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான உள்ளாட்டு விமானம் லாகூர் விமான நிலையத்தில் லேண்டிங் கியரின் பின்புற சக்கரங்களில் ஒன்று இல்லாத நிலையில் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. என்றபோதிலும் பயணிகளுக்கு எந்தவித அசாம்பாவிதம் ஏற்படாத வகையில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.
பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான உள்நாட்டு விமானம் கராச்சியில் இருந்து லாகூருக்கு புறப்பட்டுச் சென்றது.
பயணிகளுடன் லாகூர் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதன்பின்னர்தான் லேண்டிங் கியரில் உள்ள 6 சச்கரங்கில் பின்புறம் இருக்கும் சக்கரங்களில் ஒன்று காணாமல் போனது தெரியவந்தது. விமானம் காராச்சியில் இருந்து புறப்படும்போது கழன்று விழுந்ததா? அல்லது லாகூர் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது கழன்று விழுந்ததா? எனத் தெரியவில்லை.
இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விமானம் கராச்சியில் இருந்து புறப்படும்போது ஒரு சக்கரம் பழுதடைந்த நிலையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- பிப்ரவரி 26 அன்று டொரன்டோ விமான நிலையத்தில் பிஐஏ விமானம் தரையிறங்கியது
- பணிப்பெண் சீருடையுடன் "நன்றி பிஐஏ" எனும் குறிப்பையும் மர்யம் விட்டுச் சென்றார்
பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமானது, பிஐஏ எனப்படும் "பாகிஸ்தான் சர்வதேச விமான சேவை" (Pakistan International Airlines) நிறுவனம்.
பிஐஏ-விற்கு சொந்தமான ஒரு விமானத்தில் பயணியர் சேவைக் குழுவில் பணி புரிந்து வந்தவர் "மர்யம் ராசா" (Maryam Raza).
பாகிஸ்தானில் இருந்து கனடா நாட்டின் டொரன்டோ (Toronto) நகருக்கு ஒரு பிஐஏ விமானம் சென்றது.
இந்த விமானம் கடந்த பிப்ரவரி 26 அன்று டொரன்டோ விமான நிலையத்தில் தரையிறங்கியது.
அந்த விமானத்தில் பணியாற்றிய மர்யம் ராசா, விமானம் தரையிறங்கியதும் டொரன்டோ நகருக்குள் சென்றார்.
மறுநாள் விமானம் புறப்பட வேண்டிய நேரத்தில் பணிக்கு திரும்ப வேண்டிய மர்யம், பணிக்கு வரவில்லை.
இதையடுத்து அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்று அதிகாரிகள் அவரை தேடினர்.
முறையான காவல்துறை அனுமதி பெற்று மர்யம் தங்கியிருந்த அறையை திறந்து பார்த்து போது அங்கு, மர்யம் ராசாவின் விமான பணிப்பெண் சீருடையையும், "நன்றி பிஐஏ" (Thank You, PIA) எனும் குறிப்பையும் அவர் விட்டுச் சென்றது தெரிய வந்தது.
சுமார் 15 வருடங்கள் பிஐஏ-வில் பணியாற்றியவர் மர்யம் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்ப விருப்பமில்லாத மர்யம் போன்ற பல பிஐஏ பெண் ஊழியர்கள் அடுத்தடுத்து கனடாவிற்குள் நுழைந்து தங்களை குறித்த தகவல்களை எவருக்கும் தெரிவிக்காமல் காணாமல் போகின்றனர்.
பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான், சர்வதேச நாணய நிதியம் (IMF) கடனாக வழங்கும் நிதியிலும், சில உலக நாடுகள் அளிக்கும் கடனுதவியிலும் சமாளித்து வருகிறது.
இதனால் எதிர்காலம் குறித்த அச்சத்தில் உள்ள பல துறைகளை சேர்ந்த வல்லுனர்களும், திறன் படைத்த ஊழியர்களும், கனடா போன்ற நாடுகளுக்கு சென்று, அகதிகளாக புகலிடம் தேடி, அங்கேயே தங்கி, புதிய வாழ்க்கையை தொடங்குவது தொடர்கதையாகி வருகிறது.
கனடாவிற்குள் நுழைந்து மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பாமல் இருப்பது பிறரை காட்டிலும், விமான சேவையில் பணிபுரிபவர்களுக்கு இன்னும் எளிதாகிறது.
அகதிகளாக நுழைபவர்களை ஆதரிக்கும் வகையில் கனடாவின் குடியுரிமை சட்டங்கள் உள்ளதே இதற்கு காரணம் என பிஐஏ தரப்பு தெரிவித்தது.
பாகிஸ்தானில் நேற்று முன்தினம் கராச்சி நகரில் இருந்து பஞ்ச்குர் நகருக்கு பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் சென்றது. இந்த விமானத்தில் 48 பேர் பயணம் செய்தனர்.
இந்த விமானம் தரை இறங்கியபோது சற்றும் எதிர்பாராத விதத்தில் அதன் இரு டயர்களிலும் காற்று இறங்கி விட்டது. இதனால் விமானம் சறுக்கியது. அது, ஓடுதளத்தை கடந்து சென்று நின்றது.
இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஓடுதளத்தின் தரைப்பரப்பு மிக மிக மோசமான நிலையில் இருந்ததால் தான் விமானத்தின் டயர்களில் காற்று இறங்கிவிட்டது என தகவல்கள் கூறுகின்றன. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் மீட்பு பணியாளர்களும், தீயணைப்பு படை வீரர்களும் விரைந்து வந்து மீட்பு பணிகளை கவனித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
பஞ்ச்குர் விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் சிறிது நேரம் விமானப்போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஏர் மார்ஷல் அர்ஷத் மாலிக் அறிக்கை கேட்டுள்ளார். விபத்தில் பணியாளர்களின் தவறு காரணமாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். #Pakistan #PIA #Runway