என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pichaikkaran 2"

    • விஜய் ஆண்டனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘பிச்சைக்காரன் -2’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

    பிச்சைக்காரன்

    இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    பிச்சைக்காரன் -2 படக்குழு

    இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் பார் கவுன்சில் வளாகத்தை அனுமதி பெறாமல் ட்ரோன் மூலம் படம் பிடித்ததாக கூறி 'பிச்சைக்காரன் -2' படக்குழுவினர் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரையும் ஜாமீனில் விடுவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

    • விஜய் ஆண்டனி இயக்கத்தில் 'பிச்சைக்காரன் -2' உருவாகி வருகிறது.
    • இப்படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

    சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

    விஜய் ஆண்டனி

    இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டு விஜய் ஆண்டனிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    • ’பிச்சைக்காரன் -2’ படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனிக்கு காயம் ஏற்பட்டது.
    • இவர் தற்போது சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

    விஜய் ஆண்டனி

    இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்ற போது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது இவர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விஜய் ஆண்டனி பதிவு

    இந்நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளப் பக்கத்தில் உடல் நலம் குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மலேசியாவில் படப்பிடிப்பின் போது தாடை மற்றும் மூக்கில் ஏற்பட்ட காயத்திலிருந்து நான் குணமடைந்து வருகிறேன். நான் ஒரு பெரிய அறுவை சிகிச்சையை முடித்துள்ளேன். விரைவில் உங்கள் அனைவரிடமும் பேசுகிறேன். உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் என் உடல்நிலை குறித்த அக்கறைக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

    • பிச்சைக்காரன் -2 படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டது.
    • இதைத்தொடர்ந்து இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

    விஜய் ஆண்டனி

    இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்ற போது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    விஜய் ஆண்டனி

    இந்நிலையில், தான் 90 சதவிகிதம் குணமடைந்துவிட்டதாக விஜய் ஆண்டனி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "அன்பு இதயங்களே நான் 90% குணம் அடைந்து விட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன. என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன். வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன். அன்புக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் 'விரைவில் குணமடைய வாழ்த்துகள்' என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

    • விஜய் ஆண்டனி தற்போது ‘பிச்சைக்காரன் -2’ படத்தை இயக்கி நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டது.

    சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

    பிச்சைக்காரன் 2 

    இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்ற போது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    பிச்சைக்காரன் 2 போஸ்டர்

    இதையடுத்து இவர் தற்போது ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில், 'பிச்சைக்காரன் -2' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படத்தின் முதல் 4 நிமிடம், ஆரம்ப காட்சி ஸ்னீக் பீக் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். மேலும், "பணம் உலகை காலி பண்ணிடும்" என்றும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது கவனம் ஈர்த்து வைரலாகி வருகிறது.

    • விஜய் ஆண்டனி ‘பிச்சைக்காரன் -2’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • 'பிச்சைக்காரன் -2' திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

    பிச்சைக்காரன் -2

    இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் முதல் 4 நிமிடம், ஆரம்ப காட்சி ஸ்னீக் பீக் டிரைலர் மற்றும் முதல் பாடல் வெளியாகி வைரலானது.

    பிச்சைக்காரன் 2 போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'பிச்சைக்காரன் -2' படத்தின் அடுத்த பாடலான 'கோவில் சிலையை' பாடல் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என விஜய் ஆண்டனி சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார்.

    • விஜய் ஆண்டனி இயக்கத்தில் 'பிச்சைக்காரன் -2' திரைப்படம் உருவாகி வருகிறது.
    • இப்படத்தின் தொடர் அப்டேட்களால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

    பிச்சைக்காரன் -2

    இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் முதல் 4 நிமிடம், ஆரம்ப காட்சி ஸ்னீக் பீக் டிரைலர் மற்றும் முதல் பாடல் வெளியாகி வைரலானது.

    பிச்சைக்காரன் -2 போஸ்டர்

    இதையடுத்து இப்படத்தின் அடுத்த பாடலான 'கோவில் சிலையே' பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தனர். அதன்படி, இப்படத்தின் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. அண்ணன் -தங்கைக்கு இடையே உள்ள பாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

    • விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘பிச்சைக்காரன் -2’.
    • இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மாங்காடு மூவிஸ் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

    இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தற்போது இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'பிச்சைக்காரன் -2'. இப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மாங்காடு மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜகணபதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அந்த புகார் மனுவில், "மாங்காடு மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான 'ஆய்வுக் கூடம்' திரைப்படத்தின் கருவையும், வசனத்தையும் விஜய் ஆண்டனி 'பிச்சைக்காரன் -2' திரைப்படத்திற்கு பயன்படுத்தியுள்ளதால் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தனக்கு நஷ்டஈடாக ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சவுந்தர் இந்த மனுவுக்கு ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் பதிலளிக்கும் படி விஜய் ஆண்டனிக்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்துள்ளார். இந்நிலையில், விஜய் ஆண்டனி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில், ஆய்வுக்கூடம் படம் குறித்த எந்தவொரு தகவலும் தமக்கு தெரியாது என்றும் அந்த படத்தை பார்த்தது கூட இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

    மேலும், வழக்கு தொடரப்பட்ட பிறகே அந்த படத்தை பார்த்ததாகவும் பிச்சைக்காரன் -2 படத்திற்கும் ஆய்வுக்கூடம் படத்திற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை என்றும் விஜய் ஆண்டனி தரப்பில் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் வெளியாவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கடைசி நேரத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் படத்தின் வெளியீடு தள்ளிப்போனதால் பொருளாதார ரீதியாக தனக்கு பெருத்த இழப்பு மற்றும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் விஜய் ஆண்டனி அந்த பதில் மனுவில் வேதனை தெரிவித்துள்ளார்.

    பிச்சைக்காரன் கதை கரு பொதுவெளியில் உள்ளதோடு இதே கதைகருவோடு 1944-ஆம் ஆண்டு முதல் பல்வேறு மொழிகளில் பல படங்கள் வெளியாகியுள்ளதாகவும் இந்த கதையின் கருவை மனுதாரர் உரிமை கோர முடியாது என்றும் அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கை நீதிபதி ஏப்ரல் 25-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

    • விஜய் ஆண்டனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிச்சைக்காரன் -2’.
    • இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் உள்ளார்.

    பிச்சைக்காரன் -2

    இப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போனது. இதைத்தொடர்ந்து 'பிச்சைக்காரன் -2' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் புதிய பாடல் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். அதில், "நேத்து நைட்டு கனவுல கடவுளோட மடியில பேயி ஒன்னு படுத்துருக்கத பாத்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    'பிச்சைக்காரன் -2' திரைப்படம் வருகிற மே 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் -2 திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார்.
    • இப்படம் வருகிற மே 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    நடிகர் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் அவர் பிச்சைக்காரன் -2 படத்தை எடுத்தார். இந்த படத்தில் அவர் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.

    இப்படத்தில் கதாநாயகியாக காவ்யா தாப்பர் நடித்துள்ளார். இந்த படத்தின் படபிடிப்பு மலேசியாவில் நடந்த போது விபத்து ஏற்பட்டதாகவும் அதில் நடிகர் விஜய் ஆண்டனி படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் எனவும் அப்போது தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில் நடிகை காவ்யா தாப்பர் மலேசியாவில் நடந்த பிச்கைக்காரன் -2 படப்பிடிப்பில் படுகாயம் அடைந்ததாக கூறியுள்ளார். அப்போது நடந்த திகில் அனுபவத்தை அவர் உணர்ச்சிவசப்பட விவரித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-

    நடிகர் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் -2 படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் மலேசியாவில் நடந்தது. அங்குள்ள லங்காவி கடற்கரையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது நானும், விஜய் ஆண்டனியும் ஒரு படகில் கடலில் சென்று கொண்டிருந்தோம். அப்போது இன்னொரு படகு எங்கள் படகு மீது திடீரென மோதியது.இதில் படகில் இருந்த நானும், விஜய் ஆண்டனியும் கடலில் விழுந்தோம். நீரில் விழுந்ததும் எனக்கு எதுவும் தெரியவில்லை.

    ஒரு நிமிடம் சுதாரித்த பின்னர் விஜய் ஆண்டனியை பார்த்தேன். அவர் நீரில் தத்தளித்து கொண்டிருந்தார். அவருக்கு நீச்சல் தெரியவில்லை. எனவே அவரை காப்பாற்ற அவர் அருகில் நீந்தி சென்றேன். அதற்குள் படக்குழுவினரும் அங்கு வந்து விட்டனர். அவர்கள் உதவியுடன் விஜய் ஆண்டனியை மீட்டு படகில் ஏற்றினோம்.

    பின்னர் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் நீண்ட நேரத்திற்கு பிறகே கண்விழித்தார். அதன்பின்பே எங்களுக்கு நிம்மதி ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் என்னை பரிசோதித்த டாக்டர்கள் எனக்கும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர். மூக்கில் எலும்பு முறிவும், நெற்றியில் காயமும் இருந்தது. இதற்காக எனக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    கடலில் விழுந்த போது நான் மரணத்தின் எல்லைக்கு சென்று வந்ததை உணர்ந்தேன். இப்போது அதை நினைத்தாலும் உடல் சிலிர்க்கிறது. மனசு படபடக்கிறது. இந்த விபத்தும், இதில் ஏற்பட்ட அனுபவமும் என் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது. எனது முகத்தில் விபத்தால் ஏற்பட்ட வடுக்கள் உள்ளன. அவை எனக்கு இந்த விபத்தின் நினைவை வாழ்நாள் முழுக்க நினைவுப்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

    • விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘பிச்சைக்காரன் 2’.
    • இப்படம் வருகிற 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் உள்ளார். இதில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒயி ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் மே 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இந்நிலையில் 'பிச்சைக்காரன் 2' படத்தின் இரண்டாவது ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், பிச்சைக்காரனான யோகிபாபு க்யூ ஆர் கோடு வைத்து பிச்சை எடுக்கும் காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

    • விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பிச்சைக்காரன் -2'.
    • இப்படம் நாளை (மே 19) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் உள்ளார். இதில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒயி ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் மே 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கள் ஊறும் பூவே' பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள விஜய் ஆண்டனி, "இந்த பாட்டோட கடேசி shot-ல தான் எனக்கு accident ஆச்சு. அந்த song இதோ உங்கள் பார்வைக்கு 'கள் ஊறும் பூவே' பிச்சைக்காரன் 2" என்று பதிவிட்டுள்ளார்.

    'பிச்சைக்காரன் -2' படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×