என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "picture"
- இதில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் ,கோல்டன் குளோப் விருது வென்றது.
- ரூ.500 கோடியில் உருவான படம் உலக அளவில் ரூ. 1000 கோடி வசூலித்தது.
சமீப காலமாக பல ஆண்டுகளுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மனதில் இடம் பெற்ற படங்கள் தியேட்டர்களில் "ரீ ரிலீஸ்" செய்யப்பட்டு மீண்டும் வசூல் அள்ளி குவித்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான படங்கள் கூட 'மீண்டும் ரீ ரிலீஸ்' செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 2022 - ஆண்டு தியேட்டர்களில் 'ஆர்ஆர்ஆர்' படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது.
இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய்தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா உள்பட பலர் நடித்தனர்.
பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இதனை இயக்கினார். எம்.எம்.கீரவாணி இசை அமைத்திருந்தார்.
இதில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருது வென்றது. 500 கோடியில் உருவான படம் உலக அளவில் 1000 கோடிக்கு மேல் வசூலித்தது.
இந்நிலையில் 'ஆர்ஆர்ஆர்' படம் மீண்டும் தியேட்டர்களில் 'ரீ ரிலீஸ்' செய்யப்பட உள்ளது. இதுகுறித்து தயாரிப்பு குழுவினர் நாளை மறுநாள் (10-ந் தேதி) தியேட்டர்களில் இப்படம் 'ரீ ரிலீஸ்' செய்யப்படும் என அறிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜூன் 22 - ந் தேதி விஜயின் 50 -வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.
- வில்லு" படம் ஜூன் 21- ந் தேதி 'ரீ-ரிலீஸ்' செய்யப்படுகிறது.
பிரபல நடிகர் விஜய் நடிப்பில் 2009 -ம் ஆண்டு வெளியான படம் 'வில்லு'. இப்படம் அதிரடி நகைச்சுவைப்படமாகும். பிரபு தேவா இயக்கியுள்ளார்.இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகை நயன்தாரா , பிரகாஷ் ராஜ் , வடிவேலு ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய் - வடிவேலு காமெடி படத்துக்கு வலு சேர்த்து இருந்ததால் "வில்லு" திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் விஜய்யின் 'கில்லி' படம் ரீ ரிலீஸாகி தமிழ்நாட்டில் பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது.
இதை தொடர்ந்து வருகிற ஜூன் 22 - ந் தேதி விஜயின் 50 -வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு 'வில்லு" படத்தை ஜூன் 21- ந்தேதி அன்று 'ரீ-ரிலீஸ்' செய்யப்படும் என ஜங்கரன் நிறுவனம் அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விஜய்யின் பிறந்த நாளை யொட்டி ஜூன் 22- ந்தேதி இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
- ஏப்ரல் 14 - ந் தேதி தமிழ் புத்தாண்டில் படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏஜிஎஸ்' பட நிறுவன தயாரிப்பில் GOAT என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இது விஜய் க்கு 68- வது படமாகும்.இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.
இந்த படத்தில் பிரசாந்த்,பிரபுதேவா, மோகன், மீனாட்சி சௌத்ரி,சினேகா, லைலா, ஜெயராம்,யோகிபாபு, ஆகியோர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
கோட் படத்தில் நடிகர் விஜய் கதாநாயகன், வில்லன் உள்ளிட்ட 2 வேடத்தில் நடிக்கிறார்.மேலும் கடந்த மாதம் கேரளாவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இதில் விஜய் பங்கேற்று நடித்தார். அப்போது விஜய்க்கு கேரள ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் கடந்த வாரம் 'கோட்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக விஜய் துபாய் சென்றார். 'கோட்' படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ந்தேதி தியேட்டர்களில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
இந்நிலையில் விஜயின் 69 -வது படத்தை எச்.வினோத் இயக்குவதாக கூறப்படுகிறது. தற்போது இந்த படம் குறித்து புது அப்டேட் வெளியாகி உள்ளது. விஜய்யின் பிறந்த நாளை யொட்டி ஜூன் 22- ந்தேதி இந்த படம் குறித்து அறிவிப்பு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த ஆண்டுக்குள் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பு முடித்து விட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 - ந் தேதி தமிழ் புத்தாண்டில் தியேட்டர்களில் படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்