search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pinaki ghose"

    லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஸ் இன்று பதவியேற்றார். #Lokpal #FirstLokpalOfIndia #SCjudgeGhose
    புதுடெல்லி:

    பிரதமர், மத்திய மந்திரிகள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் என உயர் பதவி வகிப்பவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் விசாரிப்பதற்கு லோக்பால் என்ற அதிகாரம் பொருந்திய அமைப்பை உருவாக்குவதற்கான மசோதா கடந்த 2013-ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த சட்டத்தின்படி லோக்பால் அமைப்பை உருவாக்குவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில், பிரதமர் தலைமையிலான தேர்வுக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், லோக்பால் அமைப்புக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர். நாட்டின் முதல் லோக்பால் நீதிபதியாக பினாக்கி சந்திர கோஸ் நியமனத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். அவருடன் மேலும் 8 உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர். நீதிபதிகள் திலீப் பி.போஸ்லே, பி.கே.மொஹந்தி, அபிலாஷா குமாரி, ஏ.கே.திரிபாதி மற்றும் தினேஷ் குமார் ஜெயின், அர்ச்சனா ராமசுந்தரம், மகேந்தர் சிங்,  ஐ.பி. கவுதம் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.


    இதையடுத்து லோக்பால் அமைப்பின் முதல்  தலைவராக பினாகி சந்திர கோஸ் இன்று பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆகியோர் பங்கேற்றனர். #Lokpal #FirstLokpalOfIndia #SCjudgeGhose
    ×