என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "pitha"
- இயக்குநர் கார்த்திக் குமார் இயக்கத்தில், V மதி நடிகராக அறிமுகமாகும் திரைப்படம் பிதா.
- இது வித்தியாசமான தருணம், நான் நடிகனாக அறிமுகமாகும் முதல் மேடை , இந்த மாதத்திலேயே தயாரிப்பாளராக நான்கைந்து படங்களுக்கு இந்த மேடைக்கு வந்திருக்கிறேன்
RINIK PRODUCTION சார்பில் தயாரிப்பாளர்கள் D பால சுப்பிரமணி & C சதீஷ் குமார் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் குமார் இயக்கத்தில், V மதி நடிகராக அறிமுகமாகும் திரைப்படம் பிதா. மாறுபட்ட களத்தில் திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி, படக்குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அவ்விழாவில்
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது...
பிதா அன்மாஸ்கிங் மிக சந்தோசமாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் இன்னொரு புது ஹீரோ, புது தயாரிப்பாளர் வருவதை நாம் வரவேற்க வேண்டும்.
இயக்குநர் கார்த்திக் குமார் பேசியதாவது..
எனது தயாரிப்பாளர் பால சுப்ரமணியன் அவர்களுக்கும், சதீஷ் அவர்களுக்கும் முதல் நன்றி சாமானியன் திரைக்கதையை அவர்களிடம் சொன்னபோது, கேட்டவுடனே அந்தக் கதை மீது நம்பிக்கை வைத்து, உடனே அதைத் தயாரித்தார்கள். அதேபோல் இந்தக் கதையின் மீதும் நம்பிக்கை வைத்து, தயாரித்து இருக்கிறார்கள் மிக்க நன்றி. அவர்கள் தந்த வாய்ப்புதான் இந்த மேடையில் நான் நிற்கக் காரணம்,
தயாரிப்பாளர் நடிகர் V மதி பேசியதாவது...
இது வித்தியாசமான தருணம், நான் நடிகனாக அறிமுகமாகும் முதல் மேடை , இந்த மாதத்திலேயே தயாரிப்பாளராக நான்கைந்து படங்களுக்கு இந்த மேடைக்கு வந்திருக்கிறேன் இப்பொழுது நடிகனாக உங்கள் முன்னால் வந்திருக்கிறேன். உங்கள் முழு ஆதரவினை தர வேண்டுகிறேன், இப்படத்தில் ஈழம், மேதகு பிரபாகரன் போன்ற விஷயங்களைப் பரபரப்புக்காகப் பயன்படுத்தவில்லை அவர்களை எந்த விதத்திலும் அவமதிக்கவில்லை மிகவும் உண்மையாக ஒரு படைப்பை உருவாக்கி உள்ளோம். இதுவரை இல்லாத வகையில் மிக வித்தியாசமான படைப்பாக இந்த படம் இருக்கும், உங்கள் அனைவர் ஆதரவையும் தாருங்கள் நன்றி.
படத்தின் மோஷன் போஸ்டர் சில நாட்களுக்கு முன் படக்குழுவினர் வெளியிட்டனர். அதில் நாயகன் டிடக்டிவ் போல் எந்த குற்றத்திற்கு பின் உள்ள ரகசியங்களை தேடும் பணியில் உள்ளார். படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் சுகன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘பிதா’.
- இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 7-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.
இயக்குனர் சுகன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'பிதா'. இப்படத்தின் மூலம் சுகன் இயக்குனராக அறிமுகமாகிறார். அனு, ஆதேஷ் பாலா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் அருள்மணி, நகைச்சுவை நடிகர் சாம்ஸ் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
விச்சூர் எஸ் சங்கர் தயாரிக்கும் இப்படத்திற்கு நரேஷ் இசையமைக்கிறார். இளையராஜா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கவுள்ளது. தொடர்ந்து படப்பிடிப்பு முடிந்த தினமே, டப்பிங், எடிட்டிங், ரீ-ரெக்கார்டிங், பின்னணி இசை போன்ற அனைத்து வேலைகளையும் அன்றே முடித்து விட்டு மறுநாள் 8-ம் தேதி படத்தை திரையிட்டு சாதனை படைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஐந்து இடங்களில் நடைபெறவுள்ளதாகவும் முதல் நாள் காலை துவங்கும் படப்பிடிப்பு நள்ளிரவு வரை தொடரும் எனவும் படத்தில் 80 சதவிகிதம் நைட் எஃபெக்ட் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம் குறித்து இயக்குனர் சுகன் கூறியதாவது, "இயக்குனராக வருகிறோம் , ஏதாவது புதுமையாக இருக்க வேண்டும், ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்க வேண்டும், யார் இந்த சுகன் என்று படவுலகம் திரும்பி பார்க்க வேண்டும்… என்ற ஒரே ஒரு சின்ன ஆசை தான்" என்று கூறினார்.
இதுவரை எட்டு குறும்படங்களை இயக்கியுள்ள இயக்குனர் சுகன். பிரபல நடன இயக்குனர் கலாவிடம் ஆறு ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றியுள்ளார். மேலும், உளவுத்துறை, ஜனனம், கலவரம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ரமேஷ் செல்வனிடம் உதவி- துணை இணை- இயக்குனராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்