என் மலர்
நீங்கள் தேடியது "Pixel 6"
கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 6 சீரிஸ் மாடல்களின் பாஸ்ட் சார்ஜிங் வசதி பற்றி அதிகாரப்பூர்வ தகவல் வழங்கி இருக்கிறது.
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6 சீரிஸ் மாடல்களில் அதிகளவு பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுவதாக தகவல் வெளியானது. தற்போது கூகுள், தனது புதிய பிளாக்ஷிப் மாடல்களில் 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இல்லை என அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளது.
இதுகுறித்து கூகுள் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. பிக்சல் 6 சீரிஸ் மாடல்களுடன் சார்ஜர் வழங்கப்படுவதில்லை. எனினும், கூகுள் 30 வாட் பாஸ்ட் சார்ஜரை தனியாக விற்பனை செய்து வருகிறது. இதையடுத்து பலரும் புதிய பிக்சல் 6 சீரிஸ் மாடல்களில் 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதாக நினைத்துக் கொண்டனர்.

தற்போது கூகுள் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், புதிய பிக்சல் 6 மாடலில் 21 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும், பிக்சல் 6 ப்ரோ மாடலில் 23 வாட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படுகிறது.
"பேட்டரி செல், சிஸ்டம் டிசைன், டெம்பரேச்சர், சிஸ்டம் யூசேஜ் மற்றும் ஸ்டேட் ஆப் சார்ஜ் உள்ளிட்ட காரணிகளே சார்ஜிங் ரேட்டை நிர்ணயிக்கிறது. எனினும், போனின் பேட்டரி குறையும் போது 30 நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் செய்துவிடும்." என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.