என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Place Accident"
- மியான்மர் ராணுவத்தினர் மிசோரமில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
- அவர்களை அழைத்துச் செல்ல வந்த விமானம் விபத்தில் சிக்கியதாக தகவல்.
இந்தியா- மியான்மர் எல்லையில் அமைந்துள்ள மிசோரம் மாநிலத்தில் உள்ள லெங்புய் விமான விலையத்தில் மியான்மர் நாட்டின் ராணுவத்திற்கு சொந்தமான விமானம் தரையிறங்கியது.
அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுபாதையில் இருந்து விலகி அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குள் சென்று விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் விமானியுடன் 14 பேர் இருந்தனர். இதில் 6 பேர் காயம் அடைந்தனர்.
மியான்மரில் ராணுவத்தினருக்கும், இனக்குழுவினருக்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகிறது. இனக்குழுவினருக்கு பயந்து ராணுவ வீரர்கள் மியான்மரில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். அவர்கள் சொந்த நாட்டிற்கு திருப்பு அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் 184 மியான்மர் ராணுவ வீரர்களை அழைத்துச் செல்ல வந்தபோது விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
- கரீபியன் தீவுகளுக்கு குடும்பத்துடன் விடுமுறை கொண்டாட்டத்திற்கு சென்றிருந்த போது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
- குட்டி விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திற்குள் விபத்து நடந்துள்ளது.
ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் ஜெர்மனியில் பிறந்தவர். இவர் தனது இரண்டு குழந்தைகளுடன் குட்டி விமானத்தில் பயணம் செய்தார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளாகி மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் கரீபியன் கடல் பகுதியில் நடந்துள்ளது.
தி குட் ஜெர்மன் (The Good German) என்ற படம் மூலம் அறிமுகம் ஆனார். 2008-ல் ஆக்ஷன்-காமெடி படமான ஸ்பீடு ரேஸர் (Speed Racer) படத்தில் நடத்தியிருந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கடற்படை அதிகாரிகள், மீனவர்கள், கடல் நீருக்கு அடியில் சென்று தேடும் வீரர்கள் உள்ளிட்டோர் தேடுதல் பணியில் ஈடுபட்டு நான்கு உடல்களை மீட்டுள்ளனர்.
ஆலிவர், அவரது மகள்கள் மதிதா (10), அன்னிக் (12) மற்றும் விமான என நான்கு பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். விமானம் பெகுய்யா என்ன சிறிய தீவில் இருந்து செயின்ட் லூசியா புறப்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
ஆரம்ப காலத்தில் டி.வி. தொடரில் நடித்தது பிரபலமானார். அதன்பின் ஆலிவர் 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்