search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PlayStation 5"

    • அதிவேகமாக விற்பனையான சோனி நிறுவன கேமிங் கன்சோலாக பிளே ஸ்டேஷன் 5 மாறியுள்ளது.
    • சோனியின் பிளே ஸ்டேஷன் 5 மாடலுக்கு ஆரம்பத்தில் வினியோகம் சார்ந்த சிக்கல்கள் ஏற்பட்டன.

    சோனி நிறுவனம் கேமிங் கன்சோல் விற்பனையில் புதிய மைல்கல் எட்டியது. உலகம் முழுக்க பிளே ஸ்டேஷன் 5 விற்பனையில் 40 மில்லியன் யூனிட்களை எட்டி அசத்தி இருக்கிறது. நவம்பர் 2020 வாக்கில் விற்பனைக்கு வந்த பிளே ஸ்டேஷன் 5, வெறும் எட்டு மாதங்களில் 10 மில்லியன் யூனிட்கள் விற்பனையை கடந்து அசத்தியது.

    இதன் மூலம் சோனி நிறுவனம் தனது முந்தைய கேமிங் கன்சோல்களின் விற்பனை பின்னுக்கு தள்ளி, அதிவேகமாக விற்பனையான கேமிங் கன்சோலாக பிளே ஸ்டேஷன் 5 மாறியது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விற்பனையில் 30 மில்லியன் யூனிட்களை கடந்தது. இது புதிய கேமிங் கன்சோல் உலகளவில் கேமர்களை கவர்ந்து வருவதை உணர்த்தி இருக்கிறது.

     

    2022 துவக்கம் வரை சோனி நிறுவனம் தனது பிளே ஸ்டேஷன் 4 மற்றும் பிளே ஸ்டேஷன் 2 மாடல்களை முறையே 117 மில்லியன் மற்றும் 157 மில்லியன் யூனிட்கள் விற்பனை செய்து இருக்கிறது. 100 மில்லியன் யூனிட்கள் எனும் எண்ணிக்கையை அடைய பிளே ஸ்டேஷன் 4 ஆறு ஆண்டுகளை எடுத்துக் கொண்ட நிலையில், பிளே ஸ்டேஷன் 5 இந்த மைல்கல்லில் கிட்டத்தட்ட பாதியை மூன்று ஆண்டுகளுக்குள் எட்டியது. அந்த வகையில், பிளே ஸ்டேஷன் 5 மாடல் 100 மில்லியன் யூனிட்களை அதிவேகமாக கடந்துவிடும் என்று தெரிகிறது.

    சந்தையில் அமோக வரவேற்பை பெற்ற நிலையிலும், பிளே ஸ்டேஷன் 5 மாடலுக்கு ஆரம்பத்தில் வினியோகம் சார்ந்த சிக்கல்கள் ஏற்பட்டன. மேலும் கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த நிலைமை மேலும் மோசம் அடைந்தது.

    சமீபத்தில் தான் சோனி நிறுவனம் தனது பிளே ஸ்டேஷன் 5 மாடலின் டிஸ்க் வேரியன்டிற்கு ரூ. 7 ஆயிரத்து 500 வரை தள்ளுபடி அறிவித்தது. இந்த தள்ளுபடி ஜூலை 25-ம் தேதி துவங்கிய நிலையில், ஆகஸ்ட் 7-ம் தேதி வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் 5 விலை கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டது.
    • குறுகிய கால சலுகையாக பிளே ஸ்டேஷன் 5 மாடலுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    சோனி இந்தியா நிறுவனம் கேமர்களுக்கு நற்செய்தியை அறிவித்து இருக்கிறது. இன்று (ஜூலை 25) துவங்கி பிளே ஸ்டேஷன் 5 டிஸ்க் எடிஷன் மாடலுக்கு ரூ. 7 ஆயிரத்து 500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிளே ஸ்டேஷன் 5 விலை உயர்த்தப்பட்டதை அடுத்து, இந்த சலுகை தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    பிளே ஸ்டேஷன் 5 டிஜிட்டல் எடிஷன் விலை ரூ. 44 ஆயிரத்து 990 என்றும் பிளே ஸ்டேஷன் 5 டிஸ்க் எடிஷன் விலை ரூ. 54 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விலை உயர்வுக்கு முன் இந்த கன்சோல்களின் விலை முறையே ரூ. 39 ஆயிரத்து 990 மற்றும் ரூ. 49 ஆயிரத்து 990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

     

    சோனி பிளே ஸ்டேஷன் 5 சலுகை விவரங்கள்:

    பிளே ஸ்டேஷன் 5 டிஸ்க் எடிஷன் விலை ரூ. 47 ஆயிரத்து 490 என்று மாறி இருக்கிறது. இந்த விலை குறைப்பு டிஸ்க் எடிஷனுக்கு மட்டும் பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சோனி இந்தியா நிறுவனம் பிளே ஸ்டேஷன் 5 வைத்திருப்போருக்கு அசத்தல் கேம்களை இந்த ஆண்டு வழங்க இருக்கிறது.

    அந்த வகையில், ஹாக்வர்ட்ஸ் லெகசி, பைனல் பேன்டசி XVI, மார்வல் ஸ்பைடர் மேன் 2, அசாசின்ஸ் கிரீட் மிரேஜ் மற்றும் ஆலன் வேக் 2 உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது.

    சோனி இந்தியாவின் சிறப்பு சலுகை ஆகஸ்ட் 7-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. பயனர்கள் இந்த சலுகையை ரிடெயில் ஸ்டோர், ஆன்லைன் சேனல்கள், அமேசான், ப்ளிப்கார்ட், ஷாப்அட்எஸ்சி, ரிலையன்ஸ், க்ரோமா, விஜய் சேல்ஸ் மற்றும் தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர்களிடம் பெற்றிட முடியும்.

    ×