search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PM condoles"

    ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஆந்திரப்பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டத்தின் வேல்துருத்தி என்ற பகுதியில் தனியார் பேருந்தும் ஜீப்பும் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், பலர் படுகாயம் அடைந்தனர். விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். 

    ஆந்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற சாலை விபத்து பற்றி கேள்விப்பட்ட முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

    இந்நிலையில், ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் 14 பேர் பலியானதை பற்றி அறிந்த பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ஆந்திராவின் கர்னூலில் நடைபெற்ற சாலை விபத்து வருத்தம் அளிக்கிறது. விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
    ஜம்மு காஷ்மீரில் பேருந்து விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். #JammuKashmir #BusAccident #Modi
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச்சென்ற சிறிய ரக பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.  இந்த விபத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், பேருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.



    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வார் நகரில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது சோக நிகழ்வாகும். விபத்தில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பதிவிட்டுள்ளார். #JammuKashmir #BusAccident #Modi
    ஐ.நா. சபையின் முன்னாள் செயலாளரும் நோபல் பரிசு பெற்றவருமான கோபி அன்னான் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். #PMcondoles #KofiAnnan #RIPKofiAnnan
    புதுடெல்லி:

    ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளராக 10 ஆண்டுகள் பதவி வகித்த கோபி அன்னான் தனது 80-ம் வயதில் சுவிட்சர்லாந்தில் இன்று மரணம் அடைந்தார்.

    அவரது மறைவுக்கு உலக நாடுகளின் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில், கோபி அன்னான் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.


    ‘ஐ.நா. சபையின் முன்னாள் செயலாளரும், நோபல் பரிசு பெற்றவருமான கோபி அன்னான் மறைவு செய்தி கேட்டு நாங்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம். ஆப்பிரிக்காவை சேர்ந்த பெரும் தலைவராக மட்டுமல்லாமல் மனிதநேயம் மிக்கவராகவும், உலகநாடுகள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்க எண்ணியவருமான அவரை உலகம்  இழந்து விட்டது.

    இந்த நூற்றாண்டின் இலக்குகளை எட்ட அவர் ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரத்தக்கதாகும். இந்த சோகமயமான வேளையில் அவரை இழந்து துயரப்படும் அபிமானிகள் மற்றும் குடும்பத்தாருடன் எனது நினைவுகள் இணைந்திருக்கும். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்’ என்று தனது இரங்கல் செய்தியில் மோடி குறிப்பிட்டுள்ளார். #PMcondoles #KofiAnnan #RIPKofiAnnan
    ×