என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » pm modi sharad pawar
நீங்கள் தேடியது "PM Modi Sharad Pawar"
பிரதமர் மோடியை கொல்ல சதி நடப்பதாக கூறி பா.ஜ.க. அனுதாபம் தேடுவதாக சரத் பவார் கூறியிருப்பது துரதிர்ஷ்டவசமானது என மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ் கூறியுள்ளார். #ModiAssassinationPlot #FadnavisCriticisedPawar
மும்பை:
இந்த நிலையில், பிரதமரை கொல்ல சதி நடப்பதாக கூறி பாஜக அனுதாபம் தேடுகிறது என்று சரத்பவார் குற்றம் சாட்டியுள்ளார். மக்களிடையே தற்போது அக்கட்சிக்கு மதிப்பும், செல்வாக்கும் குறைந்து வருவதாகவும், அதன் காரணமாக இத்தகைய கொலை மிரட்டல் கடிதங்களை வைத்து அனுதாபம் தேட பாஜக முயற்சிப்பதாகவும் பவார் கூறியிருந்தார்.
அவரது கருத்துக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘பிரதமர் மோடியை படுகொலை செய்வதற்கான சதித்திட்டத்தை வெளிப்படுத்திய போலீசார் திரட்டிய தகவல்களை சரத் பவார் சந்தேகப்படுவது துரதிர்ஷ்டவசமானது. பிரதமர் நரேந்திர மோடி, அரசியல் கட்சியின் தலைவர் அல்ல, நமது நாட்டின் தலைவராக இருக்கிறார். சரத் பவார் இந்த அளவிற்கு இறங்கி பேசுவார் என எதிர்பார்க்கவில்லை. காவல்துறையிடம் அனைத்து ஆதாரங்களும் இருக்கின்றன. உண்மை விரைவில் வெளியாகும்’ என பட்னாவிஸ் டுவிட்டரில் கூறியுள்ளார். #ModiAssassinationPlot #FadnavisCriticisedPawar
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் 5 பேரை போலீசார் அண்மையில் கைது செய்தனர். அவர்களுக்கு மாவோயிஸ்டு இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஒரு கடிதத்தில் பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் திட்டமிட்டது தெரிய வந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமருக்கான பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரதமரை கொல்ல சதி நடப்பதாக கூறி பாஜக அனுதாபம் தேடுகிறது என்று சரத்பவார் குற்றம் சாட்டியுள்ளார். மக்களிடையே தற்போது அக்கட்சிக்கு மதிப்பும், செல்வாக்கும் குறைந்து வருவதாகவும், அதன் காரணமாக இத்தகைய கொலை மிரட்டல் கடிதங்களை வைத்து அனுதாபம் தேட பாஜக முயற்சிப்பதாகவும் பவார் கூறியிருந்தார்.
அவரது கருத்துக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘பிரதமர் மோடியை படுகொலை செய்வதற்கான சதித்திட்டத்தை வெளிப்படுத்திய போலீசார் திரட்டிய தகவல்களை சரத் பவார் சந்தேகப்படுவது துரதிர்ஷ்டவசமானது. பிரதமர் நரேந்திர மோடி, அரசியல் கட்சியின் தலைவர் அல்ல, நமது நாட்டின் தலைவராக இருக்கிறார். சரத் பவார் இந்த அளவிற்கு இறங்கி பேசுவார் என எதிர்பார்க்கவில்லை. காவல்துறையிடம் அனைத்து ஆதாரங்களும் இருக்கின்றன. உண்மை விரைவில் வெளியாகும்’ என பட்னாவிஸ் டுவிட்டரில் கூறியுள்ளார். #ModiAssassinationPlot #FadnavisCriticisedPawar
×

X