என் மலர்
நீங்கள் தேடியது "PM"
கர்நாடகா மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
கர்நாடக முதல் மந்திரியும், மதசார்பற்ற ஜனதா தள மாநில தலைவருமான குமாரசாமி மாண்டியாவில் ரூ.5 ஆயிரம் கோடி நலத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இது அவரது தேர்தல் பிரசார தொடக்கமாக கருதப்படுகிறது. விழாவில் குமாரசாமி பேசியதாவது:-
கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் பிரதமராகும் உகந்த சூழ்நிலை நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. மத சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் ஒட்டு போட்டு 22 தொகுதிகளை கைப்பற்றினால் கர்நாடகாவை சேர்ந்தவர் பிரதமர் நாற்காலியில் அமரலாம். 1996-ல் இருந்த அரசியல் சூழ்நிலை போலவே தற்போது உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார். தனது தந்தையான தேவேகவுடா மீண்டும் பிரதமர் பதவிக்கு தயாராக இருப்பதாக குமாரசாமி மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். தேவேகவுடா 1996 ஜூன் முதல் 1997 ஏப்ரல் வரை பிரதமராக பணியாற்றினார். #kumaraswamy #DeveGowda
பாராளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேசத்தில் உள்ள தனது வாரணாசி தொகுதிக்கு ஒரே மாதத்தில் 2-வது முறையாக நேற்று சென்றார்.
அங்கு அவர் 15, 16-ம் நூற்றாண்டில் பிரபலமாக விளங்கிய பக்தி இயக்கத்தை சேர்ந்த குரு ரவிதாஸ் பிறப்பிட வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். நாட்டிலேயே முதன்முதலாக டீசல் என்ஜினை மின்சார என்ஜினாக மாற்றி இயக்கப்படுகிற ரெயிலை அவர் பச்சைக்கொடியசைத்து தொடங்கியும் வைத்தார்.
இதையொட்டி முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் முன்னிலையில் நடந்த இந்த விழாவிலும், தொடர்ந்து ஒரு பொதுக்கூட்டத்திலும் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் கடந்த 2016-ம் ஆண்டு இதே நாளில் இங்கு வந்தேன். குருவின் ஆசிகளைப் பெற்றேன். நாம் அனைவரும் குரு ரவிதாஸ் காட்டிய பாதையை பின்பற்றினால், நமது சமூகத்தில் பெருமளவுக்கு ஊழல் இருக்காது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது நடக்காமல் போய் விட்டது.
குரு ரவிதாஸ், சாதியின் அடிப்படையில் எந்த விதமான பாகுபாடும் இருக்கக்கூடாது என்று வலியுறுத்தினார். சாதிய பாகுபாடு இருக்கிறவரையில், மக்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முடியாது. சமூக நல்லிணக்கம் சாத்தியப்படாது. சமத்துவம் உறுதி செய்ய முடியாது.
தங்களது சுய நலத்துக்காக சாதி பாகுபாடுகளை உருவாக்கி, அதை மேம்படுத்துகிறவர்களை மக்கள் அடையாளம் காட்ட வேண்டும்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக சாதி பாகுபாட்டினை இப்போது வரை சமூகத்தில் இருந்து ஒழித்துக்கட்ட முடியவில்லை. புதிய இந்தியா இதில் மாற்றத்தைக் காணப்போகிறது. இளைஞர்களுக்கு உதவப்போகிறது. ஏழை மக்களுக்கு நாங்கள் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் ஒடுக்கப்பட்டவர்கள் கண்ணியமாக வாழ வழி பிறந்துள்ளது.
ஊழல்வாதிகளை எங்கள் அரசு தண்டிக்கிறது. நேர்மையானவர்களுக்கு பரிசு அளிக்கிறது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் பலம் வாய்ந்த எங்கள் அரசை தேர்ந்தெடுத்தீர்கள். அதன் காரணமாக இந்த நாடு முன்னேற்றத்தை கண்டது. நீங்களும் சமூக, பொருளாதார நிலையில் முன்னேறுவதற்கு பல திட்டங்களைப் பெற்று பலன்அடைந்தீர்கள். அதே போன்று வரக்கூடிய தேர்தலிலும் நீங்கள் செயல்பட வேண்டும். பாரதீய ஜனதாவை தேர்ந்தெடுத்தால், வளர்ச்சிப்பணிகள் தொடரும்.
காங்கிரஸ் ஆட்சியின்போது கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறியது போன்று நடைபெறவில்லை. அது போலியானது என்பதை மக்கள் அம்பலப்படுத்த வேண்டும்.
இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு, வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் நல்லதொரு உதாரணம். ஆனால் அதையும் சிலர் விமர்சிப்பது வேதனை அளிக்கிறது.
இப்படிப்பட்டவர்களுக்கு (எதிர்க்கட்சிகளுக்கு) மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி நடந்து வந்தாலும் அது முழுமையான வெற்றியை பெறவில்லை.
குறிப்பாக உத்தரபிரதேசத்தில் காங்கிரசுக்கு மாற்றாக மாயாவதி- அகிலேஷ் யாதவ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இதுபோன்ற நிலை பல மாநிலங்களில் நிலவுகிறது. மேலும் எதிர்க்கட்சி அணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதிலும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமராவதை மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், மாயாவதி போன்றோர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ராகுல் காந்தி பிரதமர் ஆவதற்கு ஆதரவு தெரிவிப்பதாக காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். மதசார்பற்ற ஜனதா தள தலைவர் தேவேகவுடாவும் இதற்கு ஆதரவு தெரிவித்தார்.
மற்றபடி எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் இதுசம்பந்தமாக எந்த கருத்தும் சொல்லாமல் மவுனம் சாதித்து வந்தனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள லல்லுபிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியும் இப்போது ராகுல்காந்தி பிரதமர் ஆவதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பிரமாண்ட மாநாடு பீகார் தலைநகரம் பாட்னாவில் நேற்று நடைபெற்றது. இதில் ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் மற்றும் பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அந்த கூட்டத்தில் லல்லுபிரசாத்தின் மகனும் தற்போது கட்சியை நடத்தி வருபவருமான தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
ராகுல்காந்தி பிரதமர் பதவி வகிக்க அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளார். அவர் பிரதமர் ஆவதை நான் வரவேற்கிறேன்.
ஆனால் அவருக்கு ஒரு முக்கியமான கடமை ஒன்று உள்ளது. ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் பா.ஜனதாவுக்கு எதிராக ஒருங்கிணைக்கும் முயற்சியை அவர் மேற்கொள்ள வேண்டும்.
எதிர்க்கட்சிகளும், ஒருசில கருத்து வேறுபாடுகளை மறந்து ஒரே குடையின் கீழ் வரவேண்டும். நமது ஒரே இலக்கு பா.ஜனதாவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது என்பது மட்டுமாகவே இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #Rahulgandhi #TejashwiYadav
நகரி:
ஒருங்கிணைந்த ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் உதயமானது. இதையடுத்து ஆந்திராவுக்கு மாநில சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை மாநில சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை. இதற்காக ஆந்திர மக்கள் போராடி வருகிறார்கள்.
இதற்கிடையே மத்தியில் ஆளும் பா.ஜனதா கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. அன்று முதல் பிரதமர் மோடியை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில் வருகிற 6-ந்தேதி ஆந்திர மாநிலம் குண்டூரில் நடக்கும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.

அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அனந்தபுரத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் பேசியதாவது:-
ஆந்திராவுக்கு மாநில சிறப்பு அந்தஸ்து பெற பிரதமர் மோடியை 29 முறை சந்தித்து பேசினேன். ஆனால் சிறப்பு அந்தஸ்து தரவில்லை. குஜராத்தை விட ஆந்திரா முன்னேறி விடக்கூடாது என்று நினைக்கிறார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனை சந்தித்த போது கூட அவரை பெயரை சொல்லி தான் அழைத்தேன். ஆனால் பிரதமர் மோடியை மாநில சிறப்பு அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதற்காக மிக மரியாதையாக சார் என்று அழைத்தேன். ஆனால் அவர் சிறப்பு அந்தஸ்து தராமல் ஏமாற்றி விட்டார்.
பாராளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக நான் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததால் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பழி வாங்கப்படுகிறார்கள். அவர்கள் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்ற சோதனைகள் தொடுக்கப்படுகின்றன.
இது எனது கட்சிக்காரர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் அல்ல. ஆந்திர மக்கள் மீது மோடி நடத்தும் தாக்குதல்.
ஆந்திராவுக்கு மாநில சிறப்பு அந்தஸ்து தர மறுக்கும் பிரதமர் மோடி எந்த முகத்தை வைத்துக் கொண்டு இங்கு வருகிறார்.
அவரது வருகையை எதிர்த்து மாநிலம் முழுவதும் பொதுமக்களும், தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களும் போராட்டம், எதிர்ப்பு பேரணி ஆகியவற்றை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #ChandrababuNaidu
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பேசுகையில் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் ராகுலை முன் மொழிந்தார்.
எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி இன்னமும் முழுவடிவத்துக்கு வராத நிலையில், மு.க.ஸ்டாலின் வெளியிட்ட கருத்துக்கு எதிராக மாறுபட்ட கருத்துக்கள் வெளியானது.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளும் மு.க.ஸ்டாலின் கருத்தை ஏற்கவில்லை. இந்த நிலையில் மேற்கு வங்க முதல்-மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும் மு.க.ஸ்டாலின் கூறியதை ஏற்க மறுத்துள்ளார். இது தொடர்பாக கொல்கத்தாவில் அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-
2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகள் சார்பில் இப்போதே பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுபற்றி விவாதிக்க தற்போது சரியான நேரமும் இல்லை.
எதிர்க்கட்சி கூட்டணியில் நான் மட்டுமே அல்ல. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து இதுபற்றி விவாதித்து முடிவு எடுக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் எடுக்கப்படும் ஒருமித்த முடிவின்படியே பிரதமர் வேட்பாளர் யார் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.
நிச்சயமாக மாற்றம் வரும். அந்த மாற்றத்துக்கான நேரம் வரும்வரை நாம் காத்து இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் இப்போதே பிரதமர் வேட்பாளர் யார் என்று சொன்னால் அது எதிர்க்கட்சிகள் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தி விடக்கூடும்.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.
இதற்கிடையே தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் ஆகியோரும் இப்போதே பிரதமர் வேட்பாளர் பற்றி பேசக்கூடாது என்று கூறி உள்ளனர். இதனால் ராகுலை பிரதமர் பதவியில் அமர்த்த வேண்டும் என்ற மு.க.ஸ்டாலினின் கருத்தை ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளும் ஏற்க மறுத்து விட்டது தெரிய வந்து உள்ளது. #ParliamentaryElection #MKStalin #MamataBanerjee
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் 6 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் ஒன்றை பிரதமர் மோடி அமைத்தார். இந்த ஆலோசனை கவுன்சிலின் தலைவராக நிதி ஆயோக் உறுப்பினரான தேப்ராய் பதவி வகிக்கின்றார். இந்த குழுவின் பகுதிநேர உறுப்பினராக பொருளாதார நிபுணரும் கட்டுரையாளருமான சுர்ஜித் பல்லா பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில், பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சில் உறுப்பினர் பதவியில் இருந்து சுர்ஜித் பல்லா ராஜினாமா செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் பகுதிநேர உறுப்பினர் பதவியில் இருந்து கடந்த டிசம்பர் 1ந்தேதி விலகிவிட்டேன்’ என தெரிவித்து உள்ளார்.
அவரது ராஜினாமாவை பிரதமர் ஏற்றுக்கொண்டுவிட்டதாக பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். சுர்ஜித் பல்லா வேறு நிறுவனத்தில் சேரவிருப்பதாக கூறியிருக்கிறார். #SurjitBhalla
கொழும்பு:
இலங்கையில் பிரதமரக இருந்த ரணில் விக்ரமசிங் கேவை நீக்கி விட்டு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா கடந்த மாதம் 26-ந்தேதி நியமித்தார். இதனால் இலங்கை அரசியலில் குழப்பம் நிலவி வருகிறது.
ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை இல்லாததால் அதிபர் சிறிசேனா பாராளுமன்றத்தை கலைத்தார். அதற்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்த நிலையில் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. எனவே கடந்த வாரம் பாராளுமன்றம் கூடிய போது வரலாறு காணாத வகையில் மோதல் ஏற்பட்டது.
இந்த களேபரங்களுக்கு மத்தியிலும் கடந்த 14 மற்றும் 16-ந்தேதிகளில் ராஜபக்சே அரசுக்கு எதிராக 2 முறை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டன. எனினும் அதை ஏற்க அதிபர் சிறிசேனா மறுத்து விட்டார். ரணில் விக்ரம் சிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க மறுத்து வருகிறார்.
3 வாரங்களுக்கும் மேலாக நீடித்து வரும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்தை அதிபர் சிறிசேனா கூட்டினார். அதில் ரணில் விக்ரமசிங்கே, ராஜபக்சே மற்றும் அவர்களது கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் சபாநாயகர் கரு.ஜெயசூர்யா கலந்து கொள்ளவில்லை. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்த இந்த கூட்டம் எவ்வித முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

எனவே பிரதமர் யார் என்ற பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் இலங்கை பாராளுமன்றம் இன்று மாலை மீண்டும் கூடுகிறது.
அப்போது புதிய பிரதமர் யார்? என்ற பிரச்சினை மீண்டும் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சபையில் மீண்டும் மோதல், அடி-தடி ரகளை ஏற்படும் அபாயம் உள்ளது.
இதற்கிடையே பாராளுமன்றத்தில் கடந்த வாரம் போன்று மோதல் தொடர அனுமதித்தால் எம்.பி.க் களில் ஒருவர் அல்லது இருவர் கொல்லப்படலாம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர அச்சம் தெரிவித்துள்ளார்.
ஹம்பாத்தோட்டை மாவட்டத்தில் இலங்கை சுதந்திரா கட்சியின் அமைப்பாளர்ளின் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய போது இத்தகவலை அவர் கூறினார்.
இதற்கிடையே நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்துக்கு பிறகு ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த லட்சுமன் கிரியெல்ல நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது “எங்கள் தரப்புக்கு (ரணில் விக்ரம சிங்கேவுக்கு) பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது. ராஜபக்சேவை பிரதமராக நியமிக்க அதிபருக்கு மக்கள் உத்தரவு வழங்கவில்லை. புதிய பிரதமர் நியமிக்கப்பட்டால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். #Rajapaksa #SriLankanPolitics

நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் 129வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு தலைவர்கள் அவரை நினைவுகூர்ந்து கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “நமது முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்த நாளான இன்று அவரை நினைவு கூர்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

நமது முதல் பிரதமரான பண்டித ஜவகர்லால் நேருவின் பிறந்த நாளான இன்று அவரை நினைவு கூர்வோம். சுதந்திர போராட்டம் மற்றும் பிரதமராக பதவி வகித்த போது அவர் ஆற்றிய பங்களிப்பை நாம் நினைவு கூர்வோம்”. இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் மீது பிரியம் கொண்ட நேரு, குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு அவரது நினைவலைகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர். #JawaharlalNehru #ChildrensDay
இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரம சிங்கேவை அதிபர் சிறிசேனா கடந்த மாதம் அதிரடியாக நீக்கிவிட்டு, ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். அத்துடன் பாராளுமன்றத்தையும் வருகிற 16-ந் தேதி வரை முடக்கி வைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், அதிபர் சிறிசேனாவுக்கு சபாநாயகர் கரு ஜெயசூர்யா இன்று கடிதம் எழுதி உள்ளார். அதில், பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ராஜபக்சேவை பிரதமராக ஏற்க முடியாது என்றும், அதுவரை ரணில் தான் பிரதமர் என்றும் கூறியுள்ளார்.
பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தின்படி ராஜபக்சே நியமனம் சட்டவிரோதம் என்பதை ஏற்கிறேன். 7ம் தேதி பாராளுமன்றத்தை கூட்டுவதாக தெரிவித்துவிட்டு இப்போது தாமதிப்பது ஏன்? என்றும் சபாநாயகர் கேள்வி எழுப்பி உள்ளார்.
பாராளுமன்றத்தை கூட்டுவதில் தாமதிப்பது ஜனநாயகத்தை சவப்பெட்டிக்குள் அடைப்பததற்கு சமம் என ரணில் விக்ரமசிங்கே விமர்சித்துள்ளார். #SriLankaSpeaker #KaruJayasuriya
சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு முன்னாள் நிதிமந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நோக்கமே பாஜகவை ஒழித்து, முன்னேற்றமிக்க ஒரு ஆட்சியை மத்தியில் அமைப்பது என தெரிவித்தார்.

தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கூட்டணி கட்சிகளே பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
தேர்தல் பிரச்சாரங்களில் கூட்டணி கட்சிகளும், மக்களும் விரும்பினால் பிரதமராக தயார் என ராகுல்காந்தி கூறி வந்த நிலையில், ப.சிதம்பரம் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. #Chidambaram #RahulGandhi

இதேபோல் கேல் ரத்னா விருது பெற்ற விராட் கோலி மற்றும் பிற தேசிய விளையாட்டு விருதுகளைப் பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கும் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.
‘விளையாட்டுத் துறையில் பல ஆண்டு கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் செயல் திறனால் வீரர்களுக்கு இந்த விருதுகள் கிடைத்துள்ளன. நமது விளையாட்டு வீரர்களை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது’ எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
தேசிய விளையாட்டு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று விருதுகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது. #ManmohanSingh #HappyBirthdayDrSingh #ModiWishes