என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Poem"

    • விஜய் நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான படமான கில்லி 20 ஆண்டுகளுக்கு பிறகு மீ்ணடும் நேற்று திரைக்கு வந்துள்ளது.
    • தமிழகமெங்கும் கில்லி படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.

    தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளாவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

    வெங்கட்பிரபு இயக்கத்தில் 'தி கோட்'படத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில் விஜய் நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான படமான கில்லி 20 ஆண்டுகளுக்கு பிறகு மீ்ணடும் நேற்று திரைக்கு வந்துள்ளது.

    தமிழகமெங்கும் கில்லி படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். திருப்பத்தூரை அடுத்த ஜடையனூரை சேர்ந்த விஜய் ரசிகரான கதிர்வேல் என்பவர் கில்லி படம் மீண்டும் திரைக்கு வந்த மகிழ்ச்சியில் விஜய்யை பற்றி 10 ஆயிரம் வரிகள் கொண்ட ஒரு முழு கவிதையை 36 மணி நேரத்தில் எழுதி சாதனை படைத்துள்ளார்.

    விஜய் ரசிகரின் இந்த சாதனையை கேரள மாநிலத்தை சேர்ந்த யுனிவர்சல் அச்சீவர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் பியூச்சர்கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் அங்கீகரித்து விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கி இருக்கிறது.

    ×