என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Polyphenols"
- உணவுகளால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் தங்கிவிடுகின்றன.
- நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.
இப்போது நாம் உட்கொள்ளும் ஃபாஸ்ட்புட் போன்ற உணவுகளால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் தங்கிவிடுகின்றன. இதுவே நாளடைவில் உடல் பருமனாக உதவுகிறது. இதனால் உடல் எடையை குறைக்க முடியாமல் திணறி வருகிறார்கள். இதற்காக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறீர்கள் என்றால் நெல்லிக்காயை பயன்படுத்துங்கள். நெல்லிக்காய் ஒன்றே போதும் உடல் எடையை குறைக்க மிகவும் நல்ல மருந்து. வாங்க இதனை பயன்படுத்தி எப்படி உடல் எடையை குறைப்பது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதுமட்டுமில்லாமல் நெல்லிக்காயில் ஆன்டி ஆக்சிடன்ட்கள், டானின்கள், பாலிப்பினால்கள், நார்ச்சத்துக்கள், ஹைபோலி பிடெமிக் போன்ற சத்துக்களும் உள்ளது. இது நம் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது.
பொதுவாகவே நான் அனைவரும் நெல்லிக்காயில் ஊறுகாய் செய்து சாப்பிடுவது அல்லது உப்பு, மிளகாய்தூள் சேர்த்து சாப்பிடுவது என்று சாப்பிட்டிருப்போம். ஆனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் நெல்லிக்காயை ஜூஸ் செய்து சாப்பிட வேண்டும்.
இந்த நெல்லிக்காய்களை வில்லைகளாக வெட்டி எடுத்து அதனுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து ஜூசாக்கி அதனை வடிகட்டி அப்படியேவும் குடிக்கலாம். அல்லது உப்பு சேர்த்தும் குடிக்கலாம். நீங்கள் விருப்பப்பட்டால் தேன் கலந்தும் குடிக்கலாம்.
காலையில் தினமும் வெறும் வயிற்றில் இந்த நெல்லிக்காய் ஜூசை குடித்து வருவதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும். அதுமட்டுமில்லாமல் இதனை நீங்கள் பயன்படுத்திய ஒரு வாரத்திலேயே உங்களால் உணரமுடியும்.
நெல்லிக்காயில் உள்ள ஹப்போலிபிடெமிக் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு மற்றும் கொழுப்போடு தொடர்புடைய பண்புகளை எதிர்த்து போராடுகிறது. இதன்மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் வெளியேறுகிறது.