என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ponmalai"
- “கனககிரி” என்று அழைக்கப்படும் பொன்மலை சுமார் 660 அடி உயரம் உடையது.
- மலை மீதுள்ள வற்றாதச் சுனைகளின் “நீர்” தீர்த்தமாக கருதப்படுகிறது.
"கனககிரி" என்று அழைக்கப்படும் பொன்மலை சுமார் 660 அடி உயரம் உடையது.
இதன் உச்சியில் உள்ள வேலாயுத சுவாமி கோவிலுக்கு செல்ல 200 படிக்கட்டுகள் உள்ளன.
மலை எறும் வழியில் இடும்பன் சன்னதி உள்ளது.
மலை மீதுள்ள வற்றாதச் சுனைகளின் "நீர்" தீர்த்தமாக கருதப்படுகிறது.
கிழக்கு திசை பார்த்தவாறு கோவில் அமைந்துள்ளது.
கோவில் மகா மண்டபத்தினுள் இடதுபுறம் ஆனந்தமாக தல விநாயகர் காட்சி தருகிறார்.
கருவறையில் வோலயுத சுவாமி என்ற பெயருடன் மூலவர் கிழக்கு திசை நோக்கி காட்சி தருகிறார்.
சுமார் 4 அடி உயரமுள்ள திருமேனி, வலக்கரத்தில் தண்டம் தரித்து இடக்கரத்தை இடுப்பில் வைத்த நிலையில் அருட்காட்சி தருகிறார்.
ருத்ராட்சம் சுற்றி சூரிய சந்திரர்களையும் சூடி விளங்கும் திருமுடியுடன் கூடிய
அழகன் முருகப்பெருமானின் அலங்கார காட்சி வேறு எந்த திருத்தலத்திலும் காணக்கிடைக்காத அருட்காட்சியாகும்.
வேல் கொண்ட கையுடன் விளங்கும் இங்குள்ள வேலாயுத சுவாமியை கண்டு தொழ
"நாலாயிரம் கண் அந்த நான்முகன் படைத்திலனே" என்று தனது கனககிரி திருப்புகழில் ஏங்குகிறார் அருணகிரிநாதர்.