search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ponnamaravathi violence"

    பொன்னமராவதி கலவரத்துக்கு காரணமான வாட்ஸ்அப் வீடியோவை வெளியிட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். #PonnamaravathiViolence
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இரு சமுதாயத்தினருக்கு
    இடையே கடந்த வாரம் கடுமையான மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். 
     
    அப்போது கலைந்துசென்ற நபர்கள் திடீரென கற்களை வீசி போலீசாரை நோக்கி தாக்கினர். இதில் 2 காவலர்கள் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

    இந்நிலையில், பொன்னமராவதி கலவரத்துக்கு காரணமான வாட்ஸ்அப் வீடியோவை வெளியிட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக, பட்டுக்கோட்டையை சேர்ந்த செல்வகுமார், வசந்த் ஆகிய இருவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் செல்வகுமாரை அங்கிருந்து வரவழைத்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். #PonnamaravathiViolence
    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் மோதலில் ஈடுபட்ட 1000 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #PonnamaravathiViolence
    பொன்னமராவதி:

    தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியின் சுயேச்சை வேட்பாளரான செல்வராஜையும், அவர் சார்ந்த சமூகத்தையும் 2 பேர் அவதூறாக பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.

    இந்த ஆடியோ நேற்று முன்தினம், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனால் பொன்னமராவதி அருகே கருப்புக்குடிப்பட்டியில் உள்ள ஒரு சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். அவர்கள், தங்கள் சமூகத்தை இழிவாக பேசிய 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வந்தனர்.

    அப்போது பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றதால், இரவில் வாருங்கள் என்று கூறி, அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர். இதை யடுத்து நேற்று முன் தினம் இரவு, அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் மீண்டும் பொன்ன மராவதி போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம் இருந்து, போலீசார் புகார் மனுவை பெற்றுக்கொண்டனர்.

    அப்போது அவர்கள், உடனடியாக அந்த 2 பேரையும் கைது செய்ய வேண்டும் என்று கூறினார்கள். அதற்கு போலீசார் உடனடியாக எப்படி கைது செய்ய முடியும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பொன்னமராவதி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இந்நிலையில் நேற்று காலையில் மீண்டும் கருப்புக்குடிப்பட்டியை சேர்ந்த ஒரு சமூக பொதுமக்கள், பொன்னமராவதி போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் உடனடியாக தங்கள் சமூகத்தை இழிவாக பேசிய 2 பேரையும் கைது செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயற்சி செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதனால் ரோடுகள் முழுவதும் கற்களாக கிடந்தன. இந்த கல்வீச்சில் 3 போலீசார் உள்பட 13 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 3 போலீசாருக்கும், பொன்னமராவதி போலீஸ் நிலையத்திற்கு மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. காயமடைந்த மற்ற 10 பேர் ஆங்காங்கே உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.

    இதில் புதுக்கோட்டை ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வாகனங்கள் உள்பட 6 காவல்துறை வாகனங்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களால் தாக்கி கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர்.

    மேலும் அந்த சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள், பொன்னமராவதி சாலையில் உள்ள கடைகளின் முன்பு வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் மற்றும் சில கடைகளை அடித்து நொறுக்கினார்கள். அவர்கள் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பொன்னமராவதிக்கு வரும் சாலைகள் அனைத்திலும் பனைமரம் உள்ளிட்ட மரங்களை வெட்டிப்போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் பொன்னமராவதி நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.



    இந்நிலையில் அவதூறாகப் பேசியவர்களை கைது செய்யக்கோரி பொன்னமராவதி உள்பட 30 கிராமங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின்போது வன்முறை கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன

    புதுக்கோட்டையில் பிரச்சனை ஏற்பட்ட பொன்னமராவதி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 75% நகரப்பேருந்துகளும் இயக்கப்படவில்லை. பிரச்சனை தொடராமல் தடுக்க மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பொன்னமராவதி தாசில்தார் பாலகிருஷ்ணன் அளித்த புகாரில் சுமார் 1000 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #PonnamaravathiViolence

    ×