என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Post-Election Survey"
- அனைத்து கருதுகணிப்புகளையும் பொய்யாக்கி இந்தியா கூட்டணி 235 இடங்களில் வென்றது பாஜகவுக்கு பேரிடியாக அமைந்தது.
- பங்குசந்தையில் முறைகேடு செய்யவே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்தியாவில் நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த நிலையில் காங்கிரசின் இந்தியா கூட்டணி 235 இடங்களிலும் வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் வலுவான சக்தியாக உருவெடுத்துள்ளது.
முன்னதாக தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெரும் எனவும் காங்கிரஸ் ஒற்றை இலக்கத்தில் தான் இடங்களைக் கைப்பற்றும் எனவும் கணித்திருந்தன. இந்த கருத்துக்கணிப்புகள் பாஜகவால் திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடியிருந்தன.
இதற்கிடையே ஜூன் 4 ஆம் தேதி அனைத்து கருதுகணிப்புகளையும் பொய்யாக்கி இந்தியா கூட்டணி 235 இடங்களில் வென்றது பாஜகவுக்கு பேரிடியாக அமைந்தது. வட மாநிலங்களில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம், ஆர்.ஜே.டி ஆகியவற்றின் தயவுடனேயே பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியானதும் இந்திய பங்குச் சந்தையில் பங்குகளின் விலை அதிரடியாக உயர்ந்தது. பங்குசந்தையில் முறைகேடு செய்யவே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்நிலையில் கருத்துக்கணிப்பை வெளியிட்ட பல்வேறு நிறுவனங்களில் முக்கியமானதாக விளங்கும் ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் மீதும் இந்த குற்றச்சாட்டு வலுவாக முன்வைக்கப்டுகிறது.
எனவே செபி அமைப்பு மற்றும் பாராளுமன்ற குழு இணைந்து ஆக்சிஸ் மை இந்தியா மீது விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. மேலும் வருங்காலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தற்போது பதிலளித்துள்ள ஆக்சிஸ் மை இந்தியா தலைவர் பிரதீப் குப்தா, அனைத்து வகையான விசாரணைக்கும் தாங்கள் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். பங்குச் சந்தைக்கும் தங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று முற்றிலுமாக மறுத்துள்ள அவர் வருங்காலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படுவதை ரத்து செய்ய வேண்டும் என்பது குழந்தைத்தனமானது என்றும் விமர்சித்துள்ளார். இந்த பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி 361 முதல் 401 இடங்களைக் கைப்பற்றும் என ஆக்சிஸ் மை இந்தியா கணித்தது. முன்னதாக பிரதீப் குப்தா தேர்தல் ரிசல்ட் நாளன்று பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறாததால் தொலைக்காட்சி விவாத மேடையில் கதறி அழுதது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்