search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "postponing"

    பாராளுமன்ற தேர்தல் எதிரொலியாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் அடுத்த மாதம் 5 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடக்கிறது. #TNPSC #LokSabhaElection
    சென்னை:

    முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் காலி பணி இடங்களை நிரப்புவதற்கு வருகிற 20-ந்தேதியும், வேதியியலர், இளநிலை வேதியியலர் பணி, உதவி புவியியலர், புவி வேதியியலர், அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் துணை கண்காணிப்பாளர் பணி இடங்களுக்கு 21-ந்தேதியும் தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்திருந்தது.

    இந்தநிலையில் இந்த தேர்வுகள் திடீரென்று தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் க.நந்தகுமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் வருகிற 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தலை நடத்துவதாக அறிவித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு நிர்வாக காரணங்களுக்காக வருகிற 20 மற்றும் 21-ந்தேதிகளில் நடைபெற இருந்த எழுத்து தேர்வுகளை பின் வரும் தேதிகளில் நடத்துவதற்கு தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    * முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர்/இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் எழுத்து தேர்வு- மே.11-ந்தேதி (காலை மற்றும் மதியம்)

    * வேதியியலர்/ இளநிலை வேதியியலர் எழுத்து தேர்வு - மே.5-ந்தேதி(காலை மற்றும் மதியம்)

    * உதவி புவியியலர்/ புவி வேதியியலர் எழுத்து தேர்வு - மே.5-ந்தேதி(காலை மற்றும் மதியம்)

    * அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் துணை கண்காணிப்பாளர் எழுத்து தேர்வு- மே.5-ந்தேதி (காலை மற்றும் மதியம்)

    இந்த தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 மாவட்டங்களில் நடைபெறும்.

    ஏற்கனவே அறிவித்தப்படியே, கணக்கு அலுவலர்கள் (பிரிவு-3) பணி இடங்களுக்கு எழுத்து தேர்வு மே.5-ந்தேதியும், அரசு குற்றவியல் உதவி வக்கீல்கள் (நிலை-2) முதன்மை எழுத்து தேர்வு மே.11 மற்றும் 12-ந்தேதியும் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்ததை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கு ஜூன் 6-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.#Thoothukudi #Sterlite #SterliteProtest #BanSterlite #TalkAboutSterlite
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்பட அனுமதி மறுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த 9.4.2018 அன்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஆலை நிர்வாகம் சென்னையில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.

    ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்தற்கு கூறி உள்ள 5 குறைபாடுகளை நிறைவேற்ற ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ஸ்ரீவைகுண்டம் வக்கீல் ராமசுப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவைச் சேர்ந்த பாத்திமாபாபு ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்கள் நீதிபதி சுதந்திரம் மற்றும் நிபுணர்கள் ஜெயக்குமார், எத்திராஜ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது வைகோ, ராமசுப்பு ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர்.

    ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் சார்பில் மூத்த வக்கீல்கள் பி.எஸ்.ராமன், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அப்போது அவர்கள், ‘ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் எந்தவித விளக்கமும் கோராமல் ஆலைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்தது இயற்கை நீதிக்கு புறம்பானது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்ததற்கு 5 குறைபாடுகளை கூறி உள்ளது. இந்த குறைபாடுகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். இதில், ஒரு குறைபாட்டை சரி செய்ய 2019-ம் ஆண்டு வரை காலக்கெடு உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் இதுவரை மாசு ஏற்படவில்லை’ என்று வாதாடினர்.

    அப்போது கோர்ட்டில் ஆஜராகி இருந்த வைகோ, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், தமிழக அரசு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை தங்களது முழுமையான வாதத்தை எடுத்து வைத்த பின்பு தனது தரப்பு வாதத்தை எடுத்து வைப்பதாக நீதிபதியிடம் தெரிவித்தார். இதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

    இதன்பின்பு, வழக்கு விசாரணையை அடுத்த மாதம்(ஜூன்) 6-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். #Thoothukudi #Sterlite #SterliteProtest  #BanSterlite #TalkAboutSterlite
    ×