என் மலர்
நீங்கள் தேடியது "PR SUNDARAM"
- பி.ஆர்.சுந்தரம் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு கொள்கை பரப்பு துணை செயலாளராக பணியாற்றினார்.
ராசிபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நாமக்கல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக கொள்கை பரப்பு துணை செயலாளாருமான பி.ஆர்.சுந்தரம் (73) உடல்நிலை குறைவு காரணமாக காலமானார். இன்று மாலை இறுதி சடங்கு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.ஆர்.சுந்தரம் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பி.ஆர்.சுந்தரம் மறைவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், " மிக நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட சுந்தரம் அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், அரசியல் நண்பர்கள், நாமக்கல் மாவட்ட மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான பி.ஆர்.சுந்தரம், கட்சியின் மாவட்ட அவைத்தலைவராக பதவி வகித்தவர். 1996 முதல் 2006 வரை இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் 2014 முதல் 2019 வரை நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் இருந்தவர்.
அதிமுகவில் நீண்ட காலம் பயணித்த பி.ஆர்.சுந்தரம் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார்.
பின்னர் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு கொள்கை பரப்பு துணை செயலாளராக பணியாற்றினார்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேர நீட் என்னும் அகில இந்திய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி நாடு முழுவதும் நீட் தேர்வு அவசியமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மிக குறைந்த கட்டணத்தில் சேர்ந்து படிக்க முடியும்.
தமிழகத்தில் 2 ஆண்டுகளாக நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. இந்த வருடம் மத்திய அரசு வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ். படிக்க செல்லக்கூடிய மாணவர்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவித்தது.
இதனால் ரஷ்யா, சீனா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் எம்.பி.பி.எஸ். படிக்க விரும்பிய மாணவர்கள் செல்ல முடியாமல் தடை பட்டது.

சென்னையில் உள்ள ஏ.ஜெ.டிரஸ்ட் மூலமாக மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த அவர்கள் இந்த ஒரு வருடத்திற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்க வேண்டும் எனவும், மத்திய அரசினுடைய அறிவிப்பு தாமதமாக வெளியானதால் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர்.
அதன் அடிப்படையில் தமிழக எம்.பி.க்கள் அன்வர் ராஜா, பி.ஆர்.சுந்தரம் உள்ளிட்டவர்களுடன் மத்திய சுகாதாரத்துறையிடம் முறையிட்டனர். ஒரு வருடம் மட்டும் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தனர்.
இதற்கிடையில் டெல்லி ஐகோர்ட்டு இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளித்தது. வெளிநாடுகளில் எம்.பி. பி.எஸ். படிக்க பதிவு செய்யும் மாணவர்களுக்கு இந்த ஒரு வருடம் மட்டும் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதுகுறித்து ஏ.ஜே.டிரஸ்ட் கல்வி ஆலோசனை இயக்குனர் டாக்டர் நஜுரல் அமீன் கூறியதாவது:-
ரஷியாவில் எம்.பி.பி.எஸ். படிக்க அட்மிஷன் பெற்ற மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் இந்த வருடம் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வெளி நாடுகளில் எம்.பி.பி.எஸ். படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இந்த வருடம் நீட் தேர்வு அவசியம் இல்லை. ரஷியாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர விரும்பினால் பிளஸ்-2 தேர்வில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். உடனே சேர்ந்து படிக்க முடியும் என்றார். #NEET #DelhiHighcourt