என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "prabash"
- இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஆதிபுருஷ்’.
- இப்படம் பல சர்ச்சை கருத்துகளை எதிர்கொண்டு வருகிறது.
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளனர்.
ஆதிபுருஷ் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த 16-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்திற்கு சிலர் ஆதரவும் பலர் கடும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். மேலும், படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் மோசமாக உள்ளதாக நெட்டிசன்கள் பலர் விமர்சனம் செய்திருந்தனர். அதுமட்டுமல்லாமல், இப்படத்திற்கு தடை விதிக்க கோரி பலரும் கடிதம் எழுதி வருகின்றனர்.
இந்நிலையில், 'ஆதிபுருஷ்'படத்திற்கு எதிரான வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, ராமாயணம் நமக்கு ஒரு முன்னுதாரணம். மக்கள் வீட்டை விட்டு வெளியேறும் முன்பு ராமாயணத்தை தான் படிக்கிறார்கள். படம் பார்த்துவிட்டு மக்கள் சட்ட ஒழுங்கை சீர்குலைக்காமல் இருந்தது ஆச்சர்யம். அனுமனும் சீதையும் முக்கியமில்லாதவர்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். இதுமாதிரியான விஷயங்கள் ஆரம்பத்திலேயே அகற்றப்பட்டிருக்க வேண்டும். சில காட்சிகள் 18 வயதிற்கு மேற்பட்டோர் பார்ப்பவையாக இருக்கிறது.
இது போன்ற படங்களை பார்ப்பது மிகவும் கடினம். படத்தை முறையாக சென்சார் செய்ய தணிக்கை வாரியம் ஏன் தவறியது? சொலிசிடர் ஜெனரல் சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கப்பட்டதாகக் கூறுகிறார். ஆனால், காட்சிகளை என்ன செய்வது? இது தொடர்பாக தணிக்கை வாரியத்திடம் கேள்வி கேளுங்கள். பின்னர் நாங்கள் செய்ய வேண்டியதைச் செய்கிறோம். ஒருவேளை இந்தப் படம் தடை செய்யப்பட்டால் மக்களுக்கு கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும் என நம்புகிறோம்.
படத்தில் பல சர்ச்சைகளை வைத்துக் கொண்டு பொறுப்புத் துறப்பு பதிவிட்டிருந்தோம் என்று படக்குழு தரப்பு வாதிடுவது விநோதமாக இருக்கிறது. நீங்கள் ராமர், சீதை, அனுமன், ராவணன் எல்லோரையும் திரையில் காட்டிவிட்டு இது ராமாயணம் அல்ல என்று பொறுப்புத் துறப்பு வாசகம் போடுவீர்கள்... அதை நாட்டு மக்களும் இளைஞர்களும் நம்புவார்கள். அவர்கள் மூளையற்றவர்கள் என்று நினைக்கிறீர்களா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பியது.
மேலும், விசாரணையின்போது தயாரிப்பாளர், இயக்குனர், மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் ஏன் ஆஜராகவில்லை என்று கேட்ட நீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அது தொடர்பாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்