என் மலர்
நீங்கள் தேடியது "PrabhuDeva"
மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சினிமா பிரபலங்கள் மோகன்லால், பிரபுதேவா, ஷங்கர் மகாதேவன் உள்ளிட்ட பலரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. #PadmaAwards #Mohanlal #Padmabushan
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அதேபோல் நடிகர் பிரபுதேவா, மனோஜ் பாஜ்பய், மறைந்த நடிகர் காதர்கான் உள்ளிட்டோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாடகர் ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, நார்த்தகி நடராஜ் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருது பெறுகின்றனர்.

பத்ம விருதுகள் வென்ற பிரபலங்களுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. #PadmaAwards #Padmashri #PadmaBhusan #KaderKhan #Mohanlal #ManojBajpayee #PrabhuDeva
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா - நிக்கி கல்ராணி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சார்லி சாப்ளின் 2’ படத்தின் விமர்சனம். #CharlieChaplin2 #Prabhudeva #NikkiGalrani #CharlieChaplin2Review
மேட்ரிமோனி நடத்தி வரும் பிரபுதேவா, தனக்கு ஏற்ற பெண்ணையும் தேடி வருகிறார். அரவிந்த் ஆகாஷ், சந்தனா இருவரும் இவரின் நண்பர்கள். கையில் ஏற்பட்ட சிறிய காயம் காரணமாக மருத்துவரான பிரபுவை சந்திக்க செல்லும் இவருக்கு, நிக்கி கல்ராணி 15 நாளில் இறந்து விடுவார் என்று தெரிய வருகிறது.
இதையடுத்து நிக்கி கல்ராணியை திருமணம் செய்வதற்கான முயற்சியில் பிரபுதேவா இறங்க, ஒரு கட்டத்தில் நிக்கி கல்ராணிக்கு ஒன்றும் இல்லை என்பது தெரியவருகிறது. அத்துடன் நிக்கி கல்ராணி பிரபுவின் மகள் என்பதையும் அறிந்து கொள்கிறார். இதையடுத்து இரு குடும்பத்தாரும் பேசி இவர்களது திருமணத்தை நடத்த திட்டமிடுகிறார்கள்.

இதற்கிடையே நிக்கி கல்ராணி வேறு ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்றை பார்த்து அதிர்ச்சியடையும் பிரபுதேவா, நிக்கியை கேவலமாக திட்டி வாட்ஸ்அப்பில் வீடியோ ஒன்றை அனுப்பிவிடுகிறார். பின்னர், நிக்கி மீது தவறில்லை என்பது அறிந்த பிரபுதேவா, அந்த வீடியோவை நிக்கி கல்ராணி பார்த்தவிடுதற்கு முன்பாக அதை அழிக்க நினைக்கிறார்.
கடைசியில் நிக்கி அந்த வீடியோவை பார்த்தாரா? பிரபுதேவா - நிக்கி கல்ராணி திருமணம் நடந்ததா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

பிரபுதேவா தனது வழக்கமான கலகலப்பான நடிப்பால் கவர்கிறார். நிக்கி கல்ராணியை, அந்த வீடியோவை பார்க்க விடாமல் பண்ண பிரபுதேவா எடுக்கும் முயற்சிகள் பழைய பிரபுதேவாவை நினைவுபடுத்துகின்றன. நிக்கி கல்ராணி படம் முழுக்க மாடர்னான குடும்ப பெண்ணாக வருகிறார். அடா சர்மா, அரவிந்த் ஆகாஷ், சந்தனா உள்ளிட்டோரும் அவர்களது கதாபாத்திரங்களை மெருகேற்றி இருக்கிறார்கள். பிரபு, டி.சிவா முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். விவேக் பிரசன்னா, அமித் பார்கவ், சமீர் கோச்சார் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
சார்லி சாப்ளின் என்ற முழுநீள காமெடி படத்தை கொடுத்த சக்தி சிதம்பரம், சார்லி சாப்ளின் 2 படத்தில் ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும். சக்தி சிதம்பரம் இயக்கிய படமா இது என்று யோசிக்கும்படி படம் இருக்கிறது. திரைக்கதை ஓரளவுக்கு வேகமாக நகர்ந்தாலும், அது படத்திற்கு பலமாக அமையவில்லை. குறிப்பாக காமெடி காட்சிகளில் சிரிக்க முடியவில்லை. ஜி.சசிகுமாரின் படத்தொகுப்பு ஓரளவுக்கு படத்திற்கு கைகொடுத்திருக்கிறது.

அம்ரிஷ் கணேஷ் இசையில் சின்ன மச்சான் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மற்ற பாடல்களும் கேட்கும் ரகம் தான். செளந்தர்ராஜன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
மொத்தத்தில் `சார்லி சாப்ளின் 2' ஏமாற்றம். #CharlieChaplin2 #Prabhudeva #NikkiGalrani #CharlieChaplin2Review
மெர்குரி படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து நடித்த போது கிசுகிசுக்கப்பட்ட இந்துஜா, பிரபுதேவா எனது குரு போன்றவர் என்று கூறியுள்ளார். #Magamuni #Indhuja #Prabhudeva
மேயாத மான் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இந்துஜா தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாகி வருகிறார். விக்ரம் பிரபுவை தொடர்ந்து தற்போது ஆர்யாவுக்கு ஜோடியாகி இருக்கிறார்.
‘மெளன குரு’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சாந்தகுமார், ஆறு வருடங்கள் கழித்து தன் இரண்டாவது படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில், ஆர்யா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இந்துஜா, மஹிமா நம்பியார் நடிக்கின்றனர். ஜுனியர் பாலையா, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்ய, எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். ‘மகாமுனி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
இந்துஜா மெர்குரி படத்தில் நடித்தபோது பிரபுதேவாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் இதை இந்துஜா மறுத்துள்ளார். பிரபுதேவா தனது குரு போன்றவர் என்று தெரிவித்துள்ளார். #Magamuni #Indhuja #Prabhudeva
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான நந்திதா, விஜய் இயக்கத்தில் உருவாக இருக்கும் தேவி 2 படத்தில் பிரபுதேவா ஜோடியாக நடிக்கவிருக்கிறார். #Devi2 #Prabhudeva #Nandita
`அட்டகத்தி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நந்திதா. தொடர்ந்து `எதிர்நீச்சல்', `முண்டாசுபட்டி' படங்களில் நடித்தவர் சமீபத்தில் வெளியான `அசுரவதம்' படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்து இருந்தார்.
முன்னணி கதாநாயகர்கள் படங்களில் நடிக்காமல் இருந்த நந்திதா, முதன்முறையாக பிரபுதேவா நடிக்கும் தேவி 2 படத்தில் நடிக்க உள்ளார். நடிப்பதற்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் என்பதால் நந்திதா மகிழ்ச்சியாக இருக்கிறார். தேவி படத்தின் முதல் பாகத்தில் பிரபுதேவா ஜோடியாக தமன்னா இந்த படத்திலும் தொடர்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க நித்யா மேனன் மற்றும் ஏமி ஜாக்சனுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் `தேவி 2' படத்தின் படப்பிடிப்பு மொரீசியசில் தொடங்கியதாக பிரபுதேவா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். பிரபுதேவாவுடன் மூத்த நடிகை கோவை சரளாவும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேவி படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகும் இந்த படத்தையும் இயக்குநர் விஜய் இயக்குகிறார்.
இது தவிர வைபவ்வுக்கு ஜோடியாக `டாணா' என்ற படத்திலும் நந்திதா நடித்து வருகிறார். இது ஒரு பேண்டசி போலீஸ் படமாக உருவாகி வருகிறது. #Devi2 #Prabhudeva #Nandita
விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவான தேவி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு மொரீசியசில் துவங்கியிருக்கிறது. #Devi2 #Prabhudeva
விஜய் இயக்கத்தில் பிரபுதேவா - தமன்னா நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான `தேவி' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு மொரீசியசில் துவங்கியிருக்கிறது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பிரபுதேவா, தேவி 2 படப்பிடிப்புக்காக கோவை சரளாவுடன் மொரீசியஸ் செல்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தேவி படத்தின் தொடர்ச்சியா அல்லது முற்றிலும் மாறுபட்ட கதையா என்பது குறித்த தகவல் ஏதும் இல்லை. மேலும் படத்தில் தமன்னா நடிப்பதும் உறுதியாகவில்லை.
With the super kovai sarala ji , on the way to Mauritius for DEVI 2 pic.twitter.com/btAYRCS9Re
— Prabhudheva (@PDdancing) September 18, 2018
பிரபுதேவா நடிப்பில் அடுத்ததாக `யங் மங் சங்', `சார்லி சாப்ளின்-2' உள்ளிட்ட படங்கள் விரைவில் ரிலீசாக இருக்கின்றன.
பிரபுதேவா தற்போது பொன் மாணிக்கவேல், தேள், ஊமை விழிகள் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்தியிலும் பிரபுதேவாவுக்கு நல்ல மார்க்கெட் இருப்பதால் பிரபுதேவா படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன்வருவதாக கூறப்படுகிறது. #Devi2 #Prabhudeva
அறிமுகமான ஒரு சில படங்களின் மூலமே முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்திருக்கும் சாயிஷா சய்கல் தான் பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கவே ஆசைப்படுவதாக கூறியிருக்கிறார். #SayyeshaaSeigal
சாயிஷா சய்கல் அறிமுகமான வேகத்திலேயே முன்னணி நடிகையாகிவிட்டார். தற்போது சூர்யா ஜோடியாக நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டியில் இருந்து...
வசனத்தை மனப்பாடம் பண்ணித்தான் பேசுவேன் என்று அடம் பிடிக்கிறீர்களாமே?
மொழி தெரியாதவர்கள் தான் பிராம்ப்டிங் வைத்து டயலாக் பேசுவார்கள். எனக்கு பிராம்ப்டிங் பண்ண தெரியாது. கேமரா ஆனில் இருக்கும்போது ஒருவர் டயலாக் சொல்லி சொல்லி அதை அப்படியே சொல்வது என்பது ரசிகர்களை ஏமாற்றும் வேலை. டயலாக்கை மனப்பாடம் செய்து பேசும்போது தான் அந்த காட்சிக்கு தகுந்த ரியாக்ஷன் வரும். எனவே பிராம்ப்டிங் பண்ணுவதில்லை.

யாருடைய இயக்கத்தில் நடிக்க ஆசை..?
பிரபுதேவா இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். சிறு வயதில் இருந்தே நடனம் கற்று வருகிறேன். எனக்கு 10க்கும் மேற்பட்ட வகை நடனம் தெரியும். அதனால் முழு நீள நடனப் படம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதே?
தினமும் காலையில் டீ குடிக்கும்போது பேப்பர் படிக்கிறது என் வழக்கம். சென்னையில 11 வயதுச் சிறுமிக்கு நடந்த கொடூரம் பத்திப் படிச்சதும் மனசு தாங்கலை. தொடர்ந்து குழந்தைகள் மேல நிகழ்த்தப்படும் குற்றங்கள் வருத்தத்தைத் தருது. சட்டங்கள் கடுமையாக்கப்படணும். அது மட்டும் போதாது. மக்கள் இன்னும் அதிக விழிப்புணர்வோடு இருக்கணும்.

எந்த விஷயத்தையும் உடனே கத்துக்கணும்னு நினைக்கிற என் ஆர்வம்தான். ஒரு விஷயத்துல ஈடுபட்டா, அதுல நூறு சதவீதம் வெற்றிபெறணும். புதுசா சாதிக்கணும். சின்ன வயசுலயே எல்லாவிதமான டான்ஸையும் கத்துக்கிட்டேன். இப்பவும் நேரம் கிடைச்சா டான்ஸ் ரிகர்சலுக்கு போவேன். லத்தீன் அமெரிக்கன் ஸ்டைலில் சம்பா, சல்சா டான்ஸ் தெரியும். கதக் தெரியும். சினிமாவுக்கு தேவையான டான்ஸ் தெரியும். லத்தீன் அமெரிக்காவுக்கு போய், அவங்களோட பாடிலாங்குவேஜையும், எப்படி டான்ஸ் பண்றாங்கன்னும் தெரிஞ்சுக்கிட்டேன். இப்ப ஜிம்னாஸ்டிக்ஸ் கத்துக் கிட்டிருக்கேன். #SayyeshaaSeigal
பிரபல நடன இயக்குனர், இயக்குனர், நடிகர் பிரபுதேவா ‘லட்சுமி’ படத்தை அடுத்து மற்றொரு நடன இயக்குனர் படத்தில் நடிக்க இருக்கிறார். #Prabhudeva
சில்லுன்னு ஒரு காதல், பருத்தி வீரன், சிங்கம், சிறுத்தை, நான் மகான் அல்ல, கொம்பன், பிரியாணி, மாஸ், மெட்ராஸ் உள்பட பல படங்களை தயாரித்தவர், கே.ஈ.ஞானவேல்ராஜா. இவர் நடிகர் சிவகுமாரின் உறவினர் ஆவார். சூர்யா, கார்த்தி ஆகிய இருவரை வைத்தே படங்களை தயாரித்து வந்த ஞானவேல்ராஜா முதல் முறையாக ஆர்யாவை வைத்து, ‘கஜினிகாந்த்’ படத்தை தயாரித்தார்.
அடுத்து இவர், பிரபுதேவாவை வைத்து, ‘தேள்’ என்ற படத்தை தயாரிக்கிறார். ‘தூத்துக்குடி,’ ‘மதுரை சம்பவம்’ உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்த பிரபல நடன இயக்குனர் ஹரிகுமார் கதை–திரைக்கதை எழுதி டைரக்டு செய்கிறார்.
பிரபுதேவா–ஹரிகுமார் இருவருமே நடன இயக்குனர்களாக இருந்து கதாநாயகன் ஆனவர்கள். படங்களை இயக்கியும் இருக்கிறார்கள். இவர்கள் கூட்டணியில், ‘தேள்’ படத்தை தயாரிப்பது பற்றி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறியதாவது:–
‘‘ஒரு புகழ் பெற்ற நடன இயக்குனரை, இன்னொரு நடன இயக்குனர் இயக்குவது வெறும் எதேச்சையான நிகழ்வு மட்டும் அல்ல. நடனத்தில் அனுபவம் மிகுந்த இருவரும் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில், உணர்வுப்பூர்வமான ஒரு அதிரடி படத்தை கொடுக்க இருக்கிறார்கள். இது, எங்கள் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு மேலும் பெருமை சேர்க்கும் படமாக இருக்கும்.’’
இவ்வாறு ஞானவேல்ராஜா கூறினார்.
பிரபுதேவா நடிப்பில் லக்ஷ்மி படம் இன்று ரிலீசாகி இருக்கும் நிலையில், அவர் தனது குழந்தைகளுக்கு நடனமாட தெரியாது என்று கூறியிருக்கிறார். #Prabhudeva #Lakshmi
பிரபுதேவா நடிப்பில் லக்ஷ்மி படம் இன்று வெளியாகி இருக்கிறது. பிரபுதேவா கூறும்போது, “ இப்போ வர்ற இயக்குனர்கள் கிட்டயும் கதை கேட்கிறேன். பழைய ஆட்கள்கிட்டேயும் கதை கேட்கிறேன்.
‘ஊமை விழிகள்’ படத்துல 20 வயது பையன் இயக்குநர். புதியவர்களையும், முன்பு படம் செய்த இயக்குநர்களையும் பேலன்ஸ் செய்து படங்கள் பண்ண வேண்டும் என்பது என் ஆசை’ என்றார். உங்கள் வாரிசுகள் நடிக்க வருவார்களா? என்று கேட்டதற்கு, அவங்க சினிமாவுக்குத்தான் வரணும்னு என் மனதில் தோன்றியதில்லை. அவங்களுக்கு டான்ஸ் ரிகர்சல் ரூம்னா என்னென்னு கூடத் தெரியாது.
என்ன பிடிக்குதோ அதைச் செய்யட்டும். இப்போ நல்ல பசங்கன்னு பேர் வாங்கினா போதும். அதுவே பெரியவங்களா வளர்ந்ததும், ‘அவர் நல்ல ஆளுப்பா’ன்னு பேர் வாங்கினா போதும்’ என்று கூறி இருக்கிறார். #Prabhudeva #Lakshmi
ஏ.சி.முகில் இயக்கத்தில் பிரபுதேவா போலீசாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிய நிலையில், பாகுபலி பட வில்லன் பிரபாகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Prabhudeva #PDinKhaki
ஏ.சி.முகில் இயக்கத்தில் பிரபுதேவா போலீஸாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிய நிலையில், படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பாகுபலி படத்தில் வில்லனாக காலகேயர் தலைவன் இன்கோசி கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரபாகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திலும் பிரபாகர் வில்லனாக நடிக்க இருப்பதாகவே கூறப்படுகிறது.
இதில் பிரபுதேவா ஜோடியாக நிவேதா பெத்துராஜும், முக்கிய கதபாத்திரங்களில் இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். அன்பறீவ் இப்படத்திற்கு சண்டை காட்சிகளை அமைக்கிறார். டிக் டிக் டிக் படத்தை தயாரித்த ஜபக் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
‘பிரபுதேவா போலீஸாக நடிக்கும் இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை என்றும், இந்த படம் பிரபுதேவாவின் திரையுலக பயணத்தில் திருப்புமுனை படமாக அமையும்’ என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் இயக்குநர் முகில். இவர் பிரபுதேவாவின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. #Prabhudeva #PDinKhaki
பார்த்திபன் இயக்கத்தில் கடைசியாக `கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்திற்கு பிறகு பார்த்திபன் அடுத்ததாக இயக்கவிருக்கும் ‘உள்ளே வெளியே-2’ படத்தில் 10 பலமான நடிகர்களுடன் களமிறங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். #UlleVeliye2
பார்த்திபன் இயக்கத்தில் கடந்த 1993-ஆம் ஆண்டு வெளியான ‘உள்ளே வெளியே’ படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. ‘உள்ளே வெளியே’ படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்க பார்த்திபன் முடிவு செய்திருக்கிறார்.
இந்த படத்தின் கதை தயாராகி இருக்கும் நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்க இருக்கிறார். பிரபுதேவாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மம்தா மோகன்தாஸ், கிஷோர், எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில், பார்த்திபனுடன் நடந்த உரையாடலின் போது அவர் தெரிவித்ததாவது,
நான் தயாராக இருக்கிறேன். சரியான தயாரிப்பாளர் அமைவதற்காக பேச்சுவார்த்தை சென்று கொண்டிருக்கிறது. உள்ளே வெளியே 2, நான், சமுத்திரகனி, கிஷோர் என்று 10 பலமான நடிகர்களுடன் களம் இறங்குகிறேன். எதையும் நகைச்சுவையுடன் சொல்வதுதான் என் பாணி. அது இந்த படத்தில் இருக்கும். என்னுடைய வழக்கமான படத்தை பார்க்கலாம். ஆனால் அதிர்ச்சியான ஒரு விஷயமும் படத்தில் உண்டு. #UlleVeliye2 #Parthiban
ஏ.சி.முகில் இயக்கத்தில் பிரபுதேவா போலீசாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கிய நிலையில், நேற்று சண்டைக் காட்சி ஒன்றை படக்குழுவினர் படமாக்கி இருக்கின்றனர். #Prabhudeva #PDinKhaki
நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் பிரபுதேவா போலீஸாக நடிக்கும் ‘புரொடக்சன் எண் 12’ படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.
பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ், இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கிறார்கள். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். அன்பறீவ் இப்படத்திற்கு சண்டை காட்சிகளை அமைக்கிறார். நேமிசந்த் ஜபக் தயாரிக்கும் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஏ.சி.முகில்.

‘பிரபுதேவா போலீஸாக நடிக்கும் இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை என்றும், இந்த படம் பிரபுதேவாவின் திரையுலக பயணத்தில் திருப்புமுனை படமாக அமையும்’ என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் இயக்குநர் முகில். இவர் பிரபுதேவாவின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படபிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது. இதில் பிரபுதேவா, முகேஷ் திவாரி கலந்து கொள்ளும் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. #Prabhudeva #PDinKhaki
ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா - நிக்கி கல்ராணி, அதா ஷர்மா நடிப்பில் உருவாகி வரும் ‘சார்லி சாப்ளின்-2’ படத்தின் முன்னோட்டம். #CharlieChaplin2 #Prabhudeva
டி.சிவாவின் அம்மா கிரியேசன்ஸ் தயாரித்துள்ள படம் ‘சார்லி சாப்ளின்- 2’.
இதில் பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார். நாயகிகளாக நிக்கி கல்ராணி, அதா ஷர்மா நடிக்கிறார்கள். இந்தி, தெலுங்கு நடிகையான அதாஷர்மா தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது. இவர்களுடன் ரவிமரியா, செந்தில், ஆகாஷ், மகதீரா வில்லன் தேவ்கில், மும்பை வில்லன் சமீர் கோச், கோமல் சர்மா, வைபவ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - சவுந்தர்ராஜன், இசை - அம்ரீஷ், பாடல்கள் - யுகபாரதி, பிரபுதேவா, கலை - ஆர்.கே.விஜய் முருகன், நடனம் - ஜானி, எடிட்டிங் - பென்னி, வசனம் - ஷக்தி சிதம்பரம், ஸ்டண்ட் - கனல் கண்ணன், தயாரிப்பு - டி.சிவா, கதை, திரைக்கதை, இயக்கம் - ஷக்தி சிதம்பரம்.‘சார்லி சாப்ளின்’ முதல் பாகத்தையும் இவர் தான் இயக்கினார். அவரிடம் படம் பற்றி கேட்ட போது....

“பிரபு தேவா நிக்கி கல்ராணி இருவருக்கும் திருப்பதியில் திரு மணம் நடக்க இருக்கிறது. அதற்காக இரண்டு பேரின் குடும்பத்தினரும் திருப்பதிக்கு போகிறார்கள். அப்போது நடக்கும் சம்பவங் களின் கலகலப்பான தொகுப்பே ‘சார்லி சாப்ளின்-2’ திருப்பதிக்கு போனால் திருப்பம் வரும் என்பார்கள். அது என்ன திருப்பம் என்பது படத்தின் சஸ்பென்ஸ்” என்றார்.
படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. #CharlieChaplin2 #Prabhudeva