என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Prahaspathi"
- தேவ குருவான பிரகஸ்பதியை மனதார நினைத்து தவம் புரிந்தாள்.இதன் பலனாக குருவின் பார்வை கிடைக்கப்பெற்றாள்.
- சிவனாரைத் திருமணம் புரிந்தாள் என விவரிக்கிறது புராணம்.
திட்டை திருத்தலம் கோவிலும் எதிரே திருக்குளமும் என அழகுற அமைந்துள்ளது.
ஒருவருக்கு திருமணம் நடக்கவேண்டுமெனில் குருவின் பார்வை வேண்டும்.
குருவருள் வேண்டும். குருவருள் இருந்தால்தான் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம். இதைத்தான் புராணமும் தெரிவிக்கிறது.
ஆனானப்பட்ட உமையவள், சிவனாரை மணம் புரிய வேண்டினாள். குரு பார்வை வேண்டும் என்பதை அறிந்தாள்.
திட்டை எனும் திருத்தலத்துக்கு வந்தாள். தேவ குருவான பிரகஸ்பதியை மனதார நினைத்து தவம் புரிந்தாள்.
இதன் பலனாக குருவின் பார்வை கிடைக்கப்பெற்றாள். சிவனாரைத் திருமணம் புரிந்தாள் என விவரிக்கிறது புராணம்.
திருமண தோஷம் இருக்கும் பெண்களுக்கு இந்த கோவிலுக்கு சென்று வந்தால் விரைவில் திருமணம் நடக்கும்.
வயது தாமதித்துக்கொண்டே இருந்தால், இந்த கோவிலுக்கு சென்று வரலாம்.
விரைவில் திருமண யோகமும், குழந்தை யோகமும் கிடைக்கும். வியாழன் பார்வை இருந்தால் தொழில் முன்னேற்றம் காணலாம் என்றும் கூறப்படுகிறது.
- கயிலாயநாதரும் சந்திரனின் சாபத்தை நீக்கி, மூன்றாம் பிறையாக தனது தலையில் சந்திரனை அணிந்து கொண்டார்.
- திங்களூரில் தன் சாபத்தை போக்கிய சிவ பெருமானுக்கு திட்டையிலே தன் நன்றிக் கடன் செலுத்துகிறார் சந்திரன்.
நமசிவாய என்பது ஐந்தெழுத்து மந்திரம். அந்த ஐந்து எழுத்தை மனதில் நிறுத்தும் அற்புத வடிவம் லிங்க உருவம்.
திட்டையில் லிங்க வடிவமாக எழுந்தருளியிருக்கும் மூலவர் வசிஷ்டேஸ்வரர் விமானத்தில், சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. அதற்கும் ஒரு வரலாறு உண்டு.
தன் மாமனார் தட்சனால் தினம் ஒரு கலையாக தேய்ந்து அழியும் சாபம் பெற்றார் சந்திர பகவான். தினமும் தேய்ந்து கொண்டே வந்த அவர் திங்களூர் வந்து கயிலாயநாதரை, வணங்கி தவம் இருந்தார்.
கயிலாயநாதரும் சந்திரனின் சாபத்தை நீக்கி, மூன்றாம் பிறையாக தனது தலையில் சந்திரனை அணிந்து கொண்டார்.
திங்களூரில் தன் சாபத்தை போக்கிய சிவ பெருமானுக்கு திட்டையிலே தன் நன்றிக் கடன் செலுத்துகிறார் சந்திரன்.
இறைவனுக்கு மேலே சந்திரக்காந்தக் கல்லாக அமர்ந்து காற்றிலிருந்து ஈரப் பதத்தை ஈர்த்து ஒரு நாழிகைக்கு ஒரு சொட்டாக இறைவனுக்கு நித்யாபிஷேகம் செய்கிறார்.
24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒரு முறை இறைவன் மீது ஒரு சொட்டு நீர் விழுவதை இன்றும் காணலாம். உலகில் வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாத அற்புதம் இது.
- வியாழ பகவானுக்குரிய நாளாகிய வியாழக்கிழமையில் விரதம் இருந்து பரிகாரம் செய்யலாம்.
- நீராடி மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து வழிபட வேண்டும்.
வியாழ பகவானுக்குரிய நாளாகிய வியாழக்கிழமையில் விரதம் இருந்து பரிகாரம் செய்யலாம்.
நீராடி மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து வழிபட வேண்டும்.
குருபகவானுக்கும் மஞ்சள் நிற ஆடையும், சரக்கொன்றை, முல்லை மலர்களும் கொண்டு அலங்கரிக்க வேண்டும்.
கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட்ட பின்னர், மற்றவர்களுக்கு தானம் செய்தல் அவசியம்.
மஞ்சள் நிற ஆடையையும் தானம் செய்யலாம்.
கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நிவேதனம் செய்து குழந்தைகளுக்கு தானம் செய்வது சிறப்பு தரும்.
- குரு பார்க்க கோடி நன்மை என் பார்கள். குருவின் பார்வை கிடைக்கப் பெறுவீர்கள்.
- இதுவரை இருந்த குழப்ப நிலையெல்லாம் மாறும்.
திட்டை குருபகவானை வியாழக் கிழமையிலும் ஞாயிற்றுக்கிழமையிலும் வந்து தரிசியுங்கள்.
குருவின் பார்வை நம் மீது பட்டாலே போதும்... குருவருளும் திருவருளும் கிடைக்கப் பெறலாம்.
நல்ல படிப்பிருந்தும் வேலை இல்லை என்று வருந்துவோர், அதிக சம்பளம் இல்லையே என்று கலங்குவோர், உரிய வயது வந்தும் திருமணம் இன்னும் கைகூடவில்லையே என்று கண்ணீர் விடுபவர்கள், திட்டை வசிஷ்டேஸ்வரர் திருத்தலத்துக்கு வந்து, தனிச்சந்நிதியில் அருள் பாலிக்கும் குரு பகவானை வணங்கி வழிபடுங்கள்.
தரிசித்துப் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
குரு பார்க்க கோடி நன்மை என் பார்கள். குருவின் பார்வை கிடைக்கப் பெறுவீர்கள்.
இதுவரை இருந்த குழப்ப நிலையெல்லாம் மாறும். மனதில் தைரியமும் புத்தியில் தெளிவும் காரியத்தில் வெற்றியும் தந்தருளுவார் குரு பகவான்.
- ஜோதிடக் கலையின் குருவான பிரஹஸ்பதியிடம், தெய்வீக சாஸ்திரத்தைக் கற்பதற்காக வேண்டி சந்திரன் சென்றான்.
- கற்றுத் தேர்ந்தவுடன் எல்லாம் அறிந்து கொண்டு விட்டோம் என்ற மமதையில் மூழ்கித் திளைத்தான்.
ஜோதிடக் கலையின் குருவான பிரஹஸ்பதியிடம், தெய்வீக சாஸ்திரத்தைக் கற்பதற்காக வேண்டி சந்திரன் சென்றான்.
கற்றுத் தேர்ந்தவுடன் எல்லாம் அறிந்து கொண்டு விட்டோம் என்ற மமதையில் மூழ்கித் திளைத்தான்.
சந்திரனின் மமதையைக் கொஞ்சம் மட்டம் தட்டி வைக்க விரும்பிய குரு பகவான், பூமியில் அப்போது ஜனித்த ஒரு சிசுவின் ஜாதகத்தைக் கணிக்குமாறு சந்திரனைப் பணித்தார்.
சந்திரனும் அந்தச் சிசுவின் ஜாதகத்தை கணித்தான். அந்தக் குழந்தை ஒரு வயது பூர்த்தியாகும் சமயம் பாம்பு கடித்து மரணம் சம்பவிக்கும் என்றும் சொன்னான்.
குழந்தைக்கு ஓராண்டு முடிவதற்கு இன்னும் ஒரு சில வினாடிகளே இருந்தன. சந்திரனும், குருவும் வானவெளியில் சஞ்சரித்தபடியே குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தனர்.
தொட்டில் சங்கிலி வழியே பாம்பு ஒன்று மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தது.
குழந்தைக்கும் பாம்புக்குமிடையே ஒரு அடி தூரமே இடைவெளி இருந்தது. தன்னுடைய கணிப்பு சரிதான் இன்னும் கொஞ்ச நேரத்தில் பலிக்கப்போகிறது என எண்ணி மகிழ்ந்த சந்திரன், குருவை இறுமாந்து நோக்க, குரு தன் புன்னகை மாறாமல் குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது தான் அந்த எதிர்பாராத அதிசயம் நடந்தது.
திடீரென கண்விழித்த குழந்தை வழவழவென்று மின்னிக் கொண்டு இறங்கி வரும் பாம்பு ஏதோ புதுமாதிரி விளையாட்டுச் சாமான் என்று கருதி, மகிழ்ச்சியால் கையையும் காலையும் உதைத்துக் கொண்டுதுள்ள, தொட்டில் மேலே கீழே பக்கவாட்டில் என்று திசைமாறிக் குலுங்க, பாம்பின் தலை சங்கிலியின் ஒரு வளையத்திற்குள் எக்கச்சக்கமாகச் சிக்கிக் கொண்டது.
தன் தலையை விடுவித்துக் கொள்ளும் முயற்சியில் பாம்பு தன் உடலால் சங்கிலியைச் சுழற்றிக் கொண்டு நெளிய, குழந்தை மேலும் துள்ள, இப் போது பாம்பின் வாலும் வேறொரு வளையத்தினிடையே சிக்கிக் கொண்டது. குழந்தை மேலும் மேலும் துள்ளி விளையாட எவ்வளவு நேரம்தான் பாம்பு தாங்கும்? ஓரிரு வினாடிகளில் பாம்பு இறந்து விட்டது.
அடுத்த வினாடி குழந்தை தன்னுடைய இரண்டாவது வயதில் அடி எடுத்து வைத்தும் விட்டது.
சந்திரன் தன் ஓலைச் சுவடிகளில் இருந்த குழந்தையின் ஜாதகக் கணக்கை சரிபார்த்துக் கொண்டிருந்தான். தன் கணக்கு சரியாகவே இருந்தது போலப்பட்டது.
பின்னர் குருவைப் பார்த்துக் கேட்டான். ஜாதகத்தில் இப்போது குருபார்வை கூட இல்லையே இது எப்படி நடந்தது? குழந்தை எப்படிப் பிழைத்தது?- தோற்றுவிட்ட ஆத்திரம் அவன் குரலில் பீறிட்டது. புன்னகை மாறாத குரு, அப்போதுதான் வாயைத் திறந்தார் ஜாதகத்தில் குரு பார்க்காவிட்டால் என்ன?
அதுதான் இப்போது நேரிலேயே பார்த்துக் கொண்டிருந்தேனே அப்புறம் எப்படி மரணம் சம்பவிக்கும்? சந்திரன் தன் கர்வம் அழிந்து, குருவை வணங்கி விடைெபற்றான்.
ஜாதகத்தில் கிரக நிலை எப்படி இருந்த போதும், கிரகங்களின் கோசார நிலைகளையும் ஆராய்ந்த பின்னரே உறுதியாகப் பலன்களை உணர முடியும். குரு இருந்து கொடுப்பதைவிட பார்த்துக் கொடுப்பது அதிகம். அதனால்தான் குரு பார்வை கோடி நன்மை என்கிறார்கள்.
- வசிஷ்டர் இங்கு வந்து ஆசிரமம் அமைத்து, இறைவனை வழிபட்டு, தவமிருந்த புண்ணிய பூமி இது.
- எனவே இந்தத் தலம் வசிஷ்டாஸ்ரமம் எனும் பெயரைப் பெற்றது.
பல பெருமைகளைத் தாங்கி நிற்கிறது தென்குடித்திட்டை திருத்தலம்.
வசிஷ்டர் இங்கு வந்து ஆசிரமம் அமைத்து, இறைவனை வழிபட்டு, தவமிருந்த புண்ணிய பூமி இது.
எனவே இந்தத் தலம் வசிஷ்டாஸ்ரமம் எனும் பெயரைப் பெற்றது.
வசிஷ்ட முனிவர், கிருதயுகத்தில் பலாசவனம் எனப் பெயர் சூட்டியுள்ளார்,
இந்தத் தலத்துக்கு! ஸ்ரீபைரவர், திரேதா யுகத்தில்... இந்தத் தலத்தின் மகிமையை உணர்த்தும் வகையில், சம்யாகவனம் என்று இந்தத் தலத்தைப் போற்றிச் சொல்லியிருக்கிறார்.
துவாபர யுகத்தில், வில்வ வனமாகத் திகழ்ந்த இந்தத் தலத்தை வில்வவனம் என்றே அழைத்துள்ளார் சேஷ பகவான்.
- சோழ தேசத்தின் மிகத் தொன்மையான, அழகிய, அற்புதமான ஆலயங்களில், தென் குடித்திட்டை திருத்தலமும் ஒன்று!
- இங்கே உள்ள சிவலிங்கத் திருமேனி, சுயம்பு மூர்த்தம். ஆம், சுவாமி தான்தோன்றீஸ்வரர்.
திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகத்தில் இந்தத் தலத்தைக் குறிப்பிட்டுப் பாடியிருக்கிறார்.
ஆக, பாடல் பெற்ற திருத்தலம் எனும் பெருமையைப் பெறுகிறது, திட்டை.
ஆனால், திருஞானசம்பந்தர் இந்தத் தலத்துக்கு எப்போது வந்தார், என்ன விளையாடல் நிகழ்ந்தது என்பன போன்ற தகவல்கள் பெரிய புராணத்தில் குறிப்பிடப்படவில்லை.
இந்தத் தலத்தின் பெருமைகளை, ஸ்ரீலோக நாயகி சமேத ஸ்வயம்பூ தேஸ்வரர் புராண க்குறிப்புகள் வாயிலாக அறிய முடிகிறது.
சோழ தேசத்தின் மிகத் தொன்மையான, அழகிய, அற்புதமான ஆலயங்களில், தென் குடித்திட்டை திருத்தலமும் ஒன்று!
இங்கே உள்ள சிவலிங்கத் திருமேனி, சுயம்பு மூர்த்தம். ஆம், சுவாமி தான்தோன்றீஸ்வரர்.
தானே தோன்றி தன் இருப்பை வெளிப்படுத்தியவர். திருக்கயிலாயம், காசி, திருக்காஞ்சி, சிதம்பரம் முதலான பல தலங்களில் சிவனார், மக்களுக்கு அருள் செய்ய சுயம்பு மூர்த்தமாக, தானே வெளிப்பட்டார் என்கின்றன புராணங்கள்.
அந்த வகையில், சுயம்புமூர்த்தமாக திட்டையிலும் தோன்றினார் சிவனார். அப்படியான சிவ தலங்களில் 22-வது திருத்தலம் தென்குடித்திட்டை.
- குருபகவானுக்குரிய மற்றொரு சிறப்பான தலம் திட்டை.
- தென்குடித் திட்டை திருத்தலத்தைத்தான் எல்லோரும் திட்டை என்று சொல்கிறார்கள்.
குருபகவானுக்குரிய மற்றொரு சிறப்பான தலம் திட்டை. தென்குடித் திட்டை திருத்தலத்தைத்தான் எல்லோரும் திட்டை என்று சொல்கிறார்கள்.
திட்டை எனும் சொல் மருவியே திட்டு என்றானது. அதாவது திட்டை என்றால் மேடு என்று பொருள்.
பக்தர்களாகிய நம்மை, மேட்டுக்குக் கொண்டு வருவேன் என்பதை, இப்படியொரு தலத்தில் அமர்ந்து கொண்டு, சூசகமாகச் சொல்கிறார் தென்னாடுடைய சிவனார்.
இங்கு நமக்கெல்லாம் ராஜ யோகம் முதலான சகல யோகங்களையும் தந்து அருள குரு காத்திருக்கிறார்.
ஒரு கோவிலில், கோபுர வாசல் வழியே உள்ளே வந்து, பலிபீடம், கொடிமரம், நந்தியெல்லாம் கடந்து, மகா மண்டபத்தையும் அர்த்த மண்டபத்தையும் பார்த்துக் கொண்டே, அங்கே இருக்கிற விநாயகரையும் துவார பாலகர்களையும் தரிசித்தபடியே, கருவறைக்கு அருகில் வருவோம்.
அங்கே கருவறையில் இருக்கிற தெய்வமே மூலக் கடவுள். மூலவர்.
அவரின் திருநாமத்தைக் கொண்டே அந்தக் கோவில் அழைக்கப்படும். கல்வெட்டுகளிலும் குறிப்புகளிலும் அறநிலையத்துறை பதிவுகளிலும் மூலவரின் பெயரைக் கொண்டே கோவில் குறிக்கப்பட்டிருக்கும்.
ஆனால், அந்த மூலவரின் சாந்நித்தியத்தையும் கடந்து, மக்களின் மனங்களில் பரிவார தெய்வமாகத் திகழ்பவர் அப்படியே பதிந்துவிடுவார். அவரே அந்த ஆலயத்தின் நாயகனாகத் திகழ்ந்து, கோவிலின் பெருமையை உலகுக்கு உணர்த்துவார்.
தமிழ் கூறும் நல்லுலகில், இப்படி பரிவாரக் கடவுளே, பரிகாரக் கடவுளாகவும், பலன் தரும் தெய்வமாகவும் நின்று அருள்பாலிக்கிற ஆலயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
அந்த வகையில், திட்டை திருத்தலமும் முக்கியத்துவம் வாய்ந்த ஆலயம். இங்கே, மக்களின் மனங்களில் இடம் பிடித்த, குரு பகவானே முதன்மையாக வழிபடப் படுபவராக உள்ளார்.
தமிழகத்தில் குரு பகவான் குடிகொண்டு அருள்பாலிக்கும் தலங்களில், திட்டை முக்கியமான தலம் ஆகும்.
- எட்டுத் திசைகளுள் வடகிழக்கு எனப்படும் ஈசான்ய திசையே வியாழனுக்குரிய திசையாகக் கருதப்படுகின்றது.
- ஆலங்குடி மற்றும் திட்டை திருத்த லங்கள் குருபக வானுக்கு உரிய தலங்களாகும்.
குரு என்னும் வியாழ பகவானைத் தேவகுரு என்றும், நுண்ணறிவு மிக்கவராகையால் 'பிரகஸ்பதி' என்றும் அழைப்பார்கள்.
ஜோதிடத்தில் குரு பகவானை புத்திகாரகன் என்று சொல்வார்கள்.
குரு நன்றாக அமைந்திருந்தால் நல்ல பிள்ளைகள், அவர்களால் முன்னேற்றம், மகிழ்ச்சி ஆகியவற்றைத் தருவர்.
கம்பீரமான தோற்றம், சிறந்த குரல் வளம், புகழ், சன்மானம், நல்ல வீடு, வாகனம், நல்ல நண்பர்கள், சுற்றம், தெய்வ காரியங்களில் வெற்றி போன்ற பலன்களையும் குரு தர வல்லவர்.
குரு பார்வை பெற்ற, சேர்க்கைப் பெற்ற கிரகங்கள், நன்மை தரும்.
கோச்சார ரீதியாக ஜென்ம ராசியில் இருந்து குரு 1, 2, 5, 7, 11 ஆகிய இடங்களுக்கு வருகையில் நன்மை உண்டாகும்.
குருபகவானுக்கு அரசன், ஆசான், ஆண்டளப்பான், சிகண்டீ சன், சித்தன், சீவன், சுந்தரப்பொன், சுரகுரு, தேவமந்திரி, பிரகஸ்பதி, பீதகன், பொன், மந்திரி, மறையோன், வியாழன், வேதன், வேந்தன் என்று வேறு பெயர்களும் உண்டு.
தனுசு, மீன ராசிகளுக்கு அதிபதியான இவருக்கு உரிய அதிதேவதை பிரம்மன், நிறம் - மஞ்சள், வாகனம்-மீனம், தானியம் - கடலை, மலர்- வெண்முல்லை, ஆடை- மஞ்சள் நிற ஆடை, புஷ்பராகமணி, உணவு- கடலைப் பொடி அன்னம், ஆபரணம்- அரசன் சமித்து, தங்க உலோகம் ஆகியன ஆகும்.
இந்திரனின் அமைச்சராகவும் தேவர்களின் குருவாகவும் திகழும் வியாழன் பிரம்மதேவரின் புத்திரர்களில் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும் வசுதா தேவிக்கும் பிறந்த குழந்தைகளுள் ஏழாவதாக பிறந்த சிறப்பினை உடையவராவார்.
இவருடைய மனைவியர் தாரை, சங்கினி ஆகியோர் ஆவர். பரத்வாஜர் யமகண்டன், கசன் ஆகியோர் இவருடைய புதல்வர்கள் ஆவர்.
குருவின் ஆட்சி வீடுகள் தனுசு, மீனம், மூலதிரிகோண ராசி தனுசு, உச்ச வீடு கடகம். நீச்ச வீடு மகரம் ஆகும். மேஷம் சிம்மம், கன்னி, விருச்சிகம் ஆகியன நட்பு வீடுகள்.
ரிஷபம், மிதுனம் துலாம் பகை வீடுகள்.
சூரியன், சந்திரன் நண்பர்கள். புதன் சுக்கிரன் பகைவர்கள். சனி, ராகு, கேது சம நிலையினர்.
ஒரு ஜாதகத்தில் குரு கெட்டுப் போயிருந்தால், அந்த ஜாதகர் ஒழுக்க நெறிகளைக் கைவிடுதல், பெரியோர் சொல் கேளாமை, தெய்வ நிந்தனை, உறவினருடன் பகை, பொய் கூறல் போன்ற செயல்களில் ஈடுபடுவார்.
தீய பலன்கள் குறையவும், நல்ல பலன்கள் அளவுக்கு அதிகமாக நடைபெறவும் குரு பகவானுக்கு செய்யும் பரிகார முறைகள் உதவும்.
வியாழனன்று குரு ஓரையில் நல்ல நேரத்தில் குருவிற்கு உரிய கோலத்தை வடகிழக்கு திசையில் வரைந்து, அதன் மேல் முல்லை மலர்கள் பரப்பிக் குரு யந்திரத்தை வைத்து அதற்கு முல்லை மலர் சூட்டி சந்தனப் பொட்டிட்டுப் பொன்னிறத்தட்டில் கடலை வைத்துத் தூப தீபம் காட்டி குரு காயத்ரியை 108 முறை மன ஒருமையுடன் கூறினால் குருவால் ஏற்பட்ட தீய பலன்கள் விலகும்.
நல்ல பலன்கள் மேலும் மேலும் அதிகரிக்கும்.
வியாழக்கிழமையன்று வீட்டில் நெய் தீபம் ஏற்றி வழிபடுதல், குருவுக்கு உரிய வஸ்திரம், தானியம் கொண்டு வழிபடுதல் நல்லது.
வியாழனன்று குரு பகவானுக்குச் சிறப்பு அபிஷேகம் செய்து மஞ்சள் நிற ஆடை அணிவித்து புஷ்பராகம் வெண் முல்லை மலர்களால் அலங்கரித்து குருவுக்குரிய மூல மந்திரத்தினை ஓதி, அரச சமித்தினால் வேள்வி செய்து, கடலை பொடி அன்னத்தால் ஆகுதி செய்து, அஷ்டோத்திர அர்ச்சனை தூப தீப நெய்வேத்தியம் ஆகியவற்றைச் செய்து அடானா ராகத்தில் குருவுக்குரிய கீர்த்தனைகளைப் பாடி வணங்கக் குருக் கிரக தோஷம் நீங்கும்.
மஞ்சள் நிற ஆடையை உடுத்துவது புஷ்பராகமணியை அணிவது, மஞ்சள் நிற ஆடை, கடலை தானியம் ஆகியவற்றைத் தானம் செய்வது வியாழக்கிழமை களில் விரதங்களை மேற்கொள்வது ஆகியவற்றால் குரு தோஷப் பரிகாரங்களைச் செய்யலாம்.
எட்டுத் திசைகளுள் வடகிழக்கு எனப்படும் ஈசான்ய திசையே வியாழனுக்குரிய திசையாகக் கருதப்படுகின்றது.
ஆலங்குடி மற்றும் திட்டை திருத்தலங்கள் குருபகவானுக்கு உரிய தலங்களாகும்.
இங்கு சென்று வழிபட்டு வருவது நன்மை தரும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்