search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prakasraj"

    • கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முக்கிய குற்றவாளி மோகன் நாயக்கிற்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
    • பிரதமர் மோடிக்கு எதிராக கவுரி லங்கேஷுடன் இணைந்து செயல்பட்ட நடிகர் பிரகாஷ் ராஜையும் கொல்ல சதித் திட்டம் தீட்டியிருந்தோம் என்று போலீசில் வாக்குமூலம் அளித்தார் நவீன் குமார்.

    கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மூவருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன்  வழங்கியுள்ளது. பிரதமர் மோடி மற்றும் பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளை கடுமையாக விமர்சித்து வந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது நண்பர் நடிகர் பிரகாஷ்ராஜ் உட்பட பலர் அவரது கொலைக்கு நீதிகேட்டு குரல் எழுப்பி வருகின்றனர்.

    இதற்கிடையில் இந்தப் கொலையில் தொடர்புடைய மோகன் நாயக் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முக்கிய குற்றவாளி மோகன் நாயக்கிற்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் இன்னும் இறுதிக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில் வழக்கின் தீர்ப்பு தாமதமாவதால் தங்களுக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று மற்ற 3 குற்றவாளிகளும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி விஸ்வஜித் ஷெட்டி, அமித் திவேகர், நவீன் குமார், சுரேஷ் ஆகிய 3 குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். தற்போது ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவனான நவீன்குமார், பிரதமர் மோடிக்கு எதிராக கவுரி லங்கேஷுடன் இணைந்து செயல்பட்ட நடிகர் பிரகாஷ் ராஜையும் கொல்ல சதித் திட்டம் தீட்டியிருந்தோம் என்று போலீசில் வாக்குமூலம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×