என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Pramod Muthalik"
- பிரமோத் முத்தாலிக்கிற்கு அசையா சொத்துகள் இல்லை.
- பிரமோத் முத்தாலிக்கிற்கு வாகனமும் கிடையாது, கடனும் இல்லை
உடுப்பி :
ஸ்ரீராமசேனை சார்பில் அக்கட்சியின் தலைவர் பிரமோத் முத்தாலிக் உடுப்பி மாவட்டம் கார்கலா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதற்காக அவர் நேற்று முன்தினம் கார்கலா தாலுகா அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். இதையொட்டி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது சொத்து மதிப்புகளையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது பிரமோத் முத்தாலிக்கிற்கு அசையா சொத்துகள் இல்லை. வாகனமும் கிடையாது, கடனும் இல்லை. தற்போது அவரது கையில் வெறும் ரூ.10,500 மட்டுமே இருப்பு உள்ளது. 2 வங்கிகளில் ரூ.2.63 லட்சம் இருப்பு உள்ளது.
அவருக்கு சொத்தை விட வழக்குகள் தான் அதிகமாக உள்ளது. மாநிலத்தில் உள்ள 7 போலீஸ் நிலையங்களில் மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக வழக்குகள் பதிவாகி உள்ளது. அத்துடன் ஆத்திரமூட்டும் பேச்சு, ஆயுதச்சட்டத்தை மீறுதல், அவதூறு வழக்கு, கொலை மிரட்டல், மதங்கள் இடையே வெறுப்பு உணர்வை ஏற்படுத்தல், மதவாத கலவரம், அவமதிப்பு உள்ளிட்ட வழக்குகள் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது.
இந்துத்துவா அமைப்புகளை கடுமையாக விமர்சித்து கட்டுரை எழுதிய பிரபல கர்நாடக பெண் எழுத்தாளர் கவுரி லங்கேஷ் கடந்த ஆண்டு மர்ம நபர்களால் பெங்களூருவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த படுகொலை தொடர்பாக பிரதமர் மோடி கருத்து தெரிவிக்காதது ஏன்? என்று அண்மையில் காங்கிரஸ் தலைவர் மணிஷ் திவாரி கேள்வி எழுப்பி இருந்தார்.
இதுபற்றி ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தலிக் நேற்றுமுன்தினம் பெங்களூருவில் கூறும்போது, “இடது சாரி ஆதரவு அறிவாளிகள் கவுரி லங்கேஷ் கொலை பற்றி பிரதமர் மோடி ஏன் மவுனம் சாதிக்கிறார் என்று தொடர்ந்து கேள்வி எழுப்புகின்றனர். கர்நாடகாவில் சாகும் ஒவ்வொரு நாய்க்காகவும் மோடி பதில் அளிக்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
அவருடைய இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கொலை செய்யப்பட்ட கவுரி லங்கேஷை இழிவு படுத்துவதுபோல் உள்ளது என்று கடும் எதிர்ப்பும் எழுந்தது.
இதற்கு நேற்று பதில் அளித்த பிரமோத் முத்தலிக் கூறும்போது, “கவுரி லங்கேஷை நாயுடன் நான் ஒப்பிடவில்லை. அவரை இழிவுபடுத்தும் எண்ணமும் கிடையாது. மாநிலத்தில் நடக்கும் ஒவ்வொரு இறப்புக்கும் பிரதமர் மோடி பதில் அளிக்கவேண்டுமா? என்பதைத்தான் சுட்டிக்காட்டினேன்” என்றார். #GauriLankesh #Murder #PramodMuthalik #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்