என் மலர்
நீங்கள் தேடியது "Prashanth"
- பிரபல யூடியூபர் இர்பான் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
- ஹெல்மெட் அணியாமல் இர்பான் பைக் ஓட்டிய வீடியோன் வைரலானது.
பிரபல யூடியூபரான இர்பான் 'இர்பான் வியூஸ்' எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவியூ செய்வதன் மூலம் பிரபலமான இவர் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாரே நேர்காணல்களும் எடுத்து வருகிறார்.
பிரபல யூடியூபர் இர்பான் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். வகையில், அண்மையில் ஹெல்மெட் அணியாமல் பிரபல யூடியூபர் இர்பான் பைக் ஓட்டிய வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலானது.
அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், "நடிகர் பிரஷாந்த் விட சக்தி வாய்ந்த youtuber இர்பான் தான். இதுவே TTF வாசனா இருந்தா உடனடி கைது தான்" என்று விமர்சித்தனர்.
இதனையடுத்து, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது முறையான நம்பர் ப்ளேட் இல்லாதது உள்ளிட்டவைக்காக யூடியூபர் இர்ஃபானுக்கு ரூ.1,500 அபராதம் விதித்து சென்னை போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தநிலையில் சமீபத்தில் ஒரு யூ-டியூப் சேனலுக்கு, நடிகர் பிரசாந்த் பேட்டியளித்தார். 'யூ-டியூப்'பை சேர்ந்த இளம்பெண் பின்னால் அமர, பிரசாந்த் தனது மோட்டார் சைக்கிளில் சென்னை தியாகராயநகர் சவுத் போக் சாலையை சுற்றி சுற்றி வந்து பேட்டியளித்தார். இந்த பேட்டி, சம்பந்தப்பட்ட யூ-டியூப்பில் வெளியாகி வைரலானது.
இதனையடுத்து போக்குவரத்து போலீசார் நடிகர் பிரசாந்துக்கு ரூ.1,000, உடன் சென்ற பெண்ணுக்கு ரூ.1,000 என மொத்தம் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அந்தகன்.
- படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற 9-ந்தேதி படம் திரைக்கு வர இருக்கிறது.
தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அந்தகன். படத்தில் கண் தெரியாத கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்திருக்கிறார்.
சிம்ரன், பிரியா ஆனந்த் ,மனோபாலா சமுத்திரகனி, ஊர்வசி யோகி பாபு ,வனிதா விஜயகுமார் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற 9-ந்தேதி படம் திரைக்கு வர இருக்கிறது.
இதையொட்டி படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.
விழாவில் தியாகராஜன் ,பிரசாந்த், சமுத்திரகனி, சிம்ரன், வனிதா விஜயகுமார், பெசன்ட் ரவி, சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் சமுத்திரகனி பேசியதாவது:-
நான் தியாகராஜனின் தீவிர ரசிகன். நான் தியேட்டரில் ஆபரேட்டராக பணிபுரிந்து கொண்டிருந்த போதே மலையூர் மம்பட்டியான் படத்தை போட்டு பார்த்து ரசித்திருக்கிறேன்.
அவர் மீது எனக்கு எப்போதும் ஒரு பயம் உண்டு. திடீரென நண்பர் ஒருவர் எனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தியாகராஜன் உங்களிடம் பேச வேண்டுமாம் என்று கூறினார்.
ஏன் எதற்கு என்று கேட்பதற்குள் தியாகராஜனிடம் போனை கொடுத்து விட்டார். அவர் எடுத்ததும் நான் தியாகராஜன் பேசுகிறேன் சார் என்று கூறினார். அதைக் கேட்டதும் நான் உடனடியாக நேரில் வரட்டுமா என்றேன்.
பின்னர் விஷயத்தை கூறி படத்தில் நடிப்பதற்கு அழைத்தார். உடனடியாக சம்மதித்து படத்தில் நடித்தேன்.
அன்று முதல் பிரசாந்துடன் எனக்கு நல்ல நட்பு இருந்து வருகிறது. இருவரும் ஐயா என்று தான் அழைத்துக் கொள்வோம்.
படப்பிடிப்பில் ஒரு நாள் வனிதா விஜயகுமார் கெட்ட கெட்ட வார்த்தைகளால் என்னை சரமாரியாக திட்டினார். தாங்க முடியாமல் நான் தியாகராஜனிடம் வனிதா ஏன் என்னை இப்படி திட்டுகிறார்?என்று கூறினேன்.
அவர் சிரித்துக் கொண்டே பதில் அளிக்கையில், நான் காட்சிக்காக கொஞ்சம் அவரை திட்டு என்றேன். அவர் வாய்க்கு வந்தபடி கெட்ட வார்த்தைகளால் எப்படியெல்லாம் பேச வேண்டுமோ அப்படி எல்லாம் பேசி முடித்து விட்டார் என்று கூறினார்.
இவ்வாறு சமுத்திரக்கனி கூறியதும் தியாகராஜன் உள்பட அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
இதையடுத்து மேடையில் அமர்ந்திருந்த வனிதா விஜயகுமாரிடம் சமுத்திரக்கனியை திட்டும்போது யாரை மனதில் வைத்துக் கொண்டு திட்டினீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் அளித்த பதிலில், என் அப்பாவை மனதில் நினைத்துக் கொண்டேன். உடனடியாக என் மனதில் தோன்றியவற்றையெல்லாம் திட்டி தீர்த்து விட்டேன். என் தந்தையும் அந்த அளவுக்கு நடிப்போடு ஒன்றிப் போய் விடுவார். அவர்தான் என் முன்மாதிரி என்று கூறினார்.
இந்த சம்பவத்தால் அந்தகன் பட விழா அரங்கமே சிரிப்பலையால் அதிர்ந்தது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அந்தகன்.
- படத்தில் கண் தெரியாத கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்திருக்கிறார்.
தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அந்தகன். படத்தில் கண் தெரியாத கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்திருக்கிறார்.
சிம்ரன், பிரியா ஆனந்த் ,மனோபாலா சமுத்திரகனி, ஊர்வசி யோகி பாபு ,வனிதா விஜயகுமார் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் இன்று வெளியாகியது. பார்த்த மக்கள் அனைவரும் நல்ல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் பிரசாந்திற்கு நல்ல கம்பேக் திரைப்படமாக அமைந்துள்ளது. சிம்ரன் மற்றும் ஊர்வசியின் நடிப்பு அபாரம்.
அந்தாதூன் என்ற இந்தி திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தை சிறப்பாக அந்த உண்மை கதையின் சாயலை இழக்காமல் ரீமேக் செய்ததிற்கு படக்குழுவிற்கு பாராட்டுகள். படக்குழு இன்று காலை ரோகினி தியேட்டரில் ரசிகர்களுடன் படத்தை பார்த்தனர்.
அதன் பிறகு பிரசாந்த், சிம்ரன் மற்றும் படக்குழுவினர் கமலா திரையரங்கில் இயக்குனர் மற்றும் எழுத்தாளர் சங்கத்திற்காக திரையிடப்பட்ட சிறப்பு காட்சியில் கலந்துக் கொண்டனர். அதில் பேசிய பிரசாந்த் படத்தை காண வந்த அனைவருக்கும் நன்றி எனவும், படக்குழு மற்றும் நடிகை நடிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். தன் அப்பாவும் படத்தின் இயக்குனரான தியாகராஜாவுக்கு நன்றி தெரிவித்தார்..
எழுத்தாளர் மற்றும் இயக்குனர் சங்கத்தில் இருக்கும் நபர்களை அவரது குடும்பம் என்று சுட்டிக்காட்டினார். வரும் நாட்களில் திரைப்படம் வெகு மக்கள் வந்து பார்க்கும் திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கோட் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கோட் திரைப்படம் 3 மணிநேரம் ஓடும்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள `கோட்' (Greatest of all time) திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் மோகன், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 5-ந்தேதி வெளியாகிறது.

இந்நிலையில், படம் ஓடும் நேரம் குறித்து நடிகர் பிரசாந்த், `கோட் படம் 179 நிமிடங்கள் ஓடும் முழு நீளப்படம். கிட்டத்தட்ட மூன்று மணிநேர படம். இந்த திரைப்படத்தில் வெங்கட்பிரபுவின் திரைக்கதை மிகவும் அருமையாக உள்ளது. படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் முக்கியத்துவம் நிறைந்த கதாபாத்திரம் உள்ளது. இது முழு நீளப்படமாக இருந்தாலும் படத்தின் திரைக்கதை ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படாத வகையில் இருக்கும்' என்று கூறியுள்ளார்.
மேலும் கோட் திரைப்படம் கர்நாடகா மற்றும் கேரளாவில் செப்டம்பர் 5-ந்தேதி காலை 7 மணிக்கு வெளியாகிறது. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
https://iflicks.in/
- இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
- சுந்தர் சி பிறந்த நாளில் எடுக்கப்பட்டு இருக்கலாம்.
இயக்குநர் சுந்தர் சி, நடிகர் பிரசாந்த் மற்றும் வடிவேலு கூட்டணியில் வெளியான படம் "வின்னர்." கடந்த 2003-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் அதன் காமெடி காட்சிகளால் ரசிகர்கள் மத்தியில் இன்றும் பிரபலமாக உள்ளது. இந்தப் படத்தில் வரும் வடிவேலுவின் கைப்புள்ள கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய பேச்சுக்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் எழுவது வழக்கம் தான். இதுபற்றி இயக்குநர் சுந்தர் சி, நடிகர் பிரசாந்த் ஏற்கனவே தகவல் தெரிவித்துள்ளனர். எனினும், வின்னர் 2 குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில், இயக்குநர் சுந்தர் சி, நடிகர் பிரசாந்த் மற்றும் வடிவேலு சமீபத்தில் நேரில் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் சமீபத்தில் முடிந்த இயக்குநர் சுந்தர் சி பிறந்த நாளில் எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு வின்னர் பட கூட்டணி ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ள நிலையில், வின்னர் 2 பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் பலர் வின்னர் 2 திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பதிவிட்டு வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.








