search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PremalathaVijayakanth"

    • சீமான் எப்போதும் ஒரே நிலைப்பாடோடு இருக்கணும்.
    • விஜய் முன்னெடுத்து செல்லும் நிகழ்வுகள் பொருத்துதான் எல்லாமே இருக்கிறது.

    தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜய்காந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீர் என்று அந்நியனாகவும் மாறுவார். திடீர் என்று அம்பியாகவும் மாறுவார். இதற்கெல்லாம் பதில் சொல்ல தேவையில்லை.

    ஏன் தம்பி என்று சொன்னார் ? பிறகு ஏன் லாரியில் அடிப்பட்டு சாகணும் சொல்கிறார். எல்லாவற்றிற்கும் அவர் தான் பதில் சொல்ல வேண்டும். பதில் நான் சொல்லி தேவையில்லை.

    எப்போதும் ஒரே நிலைப்பாடோடு இருக்கணும். எல்லோருக்கும் பேசுகின்ற சக்தியை கடவுள் வழங்கியிருக்கிறார். அதற்காக நாம், வாய்க்கு வந்ததை எல்லாம் பேசக்கூடாது என்கிற கருத்தை மட்டும் நான் சொல்லிக் கொள்கிறேன்.

    அரசியலுக்கு வருவதற்கு முன்பு தன்னுடைய எதிரி யார் என்று தெரிந்துக் கொண்டு தான் அரசியலுக்கு வருகிறார்கள். அந்த வகையில் விஜய்யும் தன்னுடைய கருத்தை சொல்லி இருக்கிறார். அதனால் பொருத்து இருந்து பார்ப்போம்.

    இன்னும் வருங்காலம் இருக்கிறது. இப்போது தான், விஜய் மாநாடு நடத்தி கொடி ஏற்றி இருக்கிறார். இன்னும் அவர் நடந்து வரவேண்டிய பாதை ஏராளம். எனவே, நிச்சயமாக வருங்காலங்களில் அவருடைய செயல்பாடுகள், அவர் முன்னெடுத்து செல்லும் நிகழ்வுகள் பொருத்துதான் எல்லாமே இருக்கிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • உண்மையானவர்களுக்கும், நேர்மையானவர்களுக்கும் இந்த நாட்டில் இடம் இல்லையா?
    • கனிமவள கொள்ளை அதிகமாக நடந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் இருந்து அத்தனை வளங்களும் சுரண்டப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய லூர்து பிரான்சிஸ் கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்தை கண்டித்தும், கேரளாவிற்கு தென்காசி வழியாக கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்கக்கோரி ஆலங்குளத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காகவும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.

    அவருக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட தே.மு.தி.க. பொறுப்பாளர் தயாளலிங்கம் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர்கள் மாலதி, துரை, பொருளாளர் விஜயன், பகுதி செயலாளர் சின்னத்துரை மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கனிமவள கொள்ளை அதிகமாக நடந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் இருந்து அத்தனை வளங்களும் சுரண்டப்படுகிறது. இதுகுறித்து கேட்டால் எதிர்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் மாறி மாறி குறை சொல்கிறார்கள். இதை தட்டிக்கேட்ட ஒரு நியாயமான அதிகாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது எந்த வகையில் நியாயம்?. உண்மையானவர்களுக்கும், நேர்மையானவர்களுக்கும் இந்த நாட்டில் இடம் இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    வி.ஏ.ஓ. குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ரூ.1 கோடி அறிவித்துள்ளார். இதனால் போன உயிர் வந்துவிடுமா. நியாயமாக உழைக்கும் அதிகாரிகளுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?.

    3 மருத்துவ கல்லுரிகளின் உரிமம் ரத்து செய்து இருக்கிறார்கள். ஸ்டான்லி கல்லூரி உரிமத்தை ரத்து செய்தது தமிழகத்திற்கு ஒரு தலை குனிவு. பள்ளிக்கூட கட்டிடம் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. ஆனால் டாஸ்மாக் கடை ஒரு தெருவுக்கு 10 திறக்கப்பட்டுள்ளது.

    புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்புக்கு வாழ்த்துக்கள். இந்திய வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நாள் இன்று. நல்ல ஒரு விஷயம் நாட்டிற்காக நடந்து கொண்டிருக்கிறது. நிச்சயமாக ஜனாதிபதியை அழைத்து இருக்க வேண்டும். அந்த நல்ல நிகழ்வை வரவேற்போம். தமிழகத்தில் இருந்து செங்கோல் அங்கு அமைவது ஒட்டு மொத்த தமிழருக்கு கிடைத்த பெருமை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அவர் வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துவிட்டு ஆலங்குளத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க புறப்பட்டு சென்றார்.

    ×