search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Premam"

    • 2018 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் மற்றும் ஐஷ்வர்யா நடிப்பில் வெளியான கனா படத்தில் தர்ஷன் நடித்து பிரபலாமானார்.
    • குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாம் பரிசை வென்றார்.

    2018 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் மற்றும் ஐஷ்வர்யா நடிப்பில் வெளியான கனா படத்தில் தர்ஷன் நடித்து பிரபலாமானார். ஒத்தயடி பாதியில் பாட்டின் மூலம் மக்களுக்கு பரிட்சையமாகினார். அதைத் தொடர்ந்து 2019 ஆண்டு வெலிவந்த தும்பா படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

    குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாம் பரிசை வென்றார். அஜித் நடித்த துணிவு படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். தர்ஷனுடன் ஆர்ஷா சந்தினி பைஜு இணைந்து நடிக்கவுள்ளார். இதற்கு முன் மலையாள திரைப்படமான முகுந்த உன்னி அசோசியேட்ஸ் திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

    இவர்களுடன் காளி வெங்கட், வினோதினி வைத்தியனாதன் மற்றும் KPY 2 தீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

    தற்பொழுது தர்ஷனின் அடுத்த படத்திற்கான பூஜை விழா நேற்று சிறப்பாக நடந்து முடிந்தது. இதை அறிமுக இயக்குனரான ராஜ்வேல் இயக்கவுள்ளார். பிரேமம் திரைப்படத்திற்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். பிலே ஸ்மித் ஸ்டூடியோஸ், விவா எண்டர்டெயின்மண்ட் மற்றும் சவுத் ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'பிரேமம்'.
    • மலர் டீசர் கதாபாத்திரம் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

    கடந்த 2015-ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் 'பிரேமம்'. இந்த படத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா ஜெபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.


    இப்படம் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் அல்போன்ஸ் புத்திரனுக்கு இப்படம் மிகப்பெரிய மையில்கல்லாக அமைந்தது. 'பிரேமம்' படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சாய் பல்லவியை இன்று வரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    ராஜேஷ் முருகன் இசையில் 'பிரேமம்' படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது. அதிலும் 'மலரே நின்னை காணாதிருந்தால்' பாடல் இன்றும் காதலர்களின் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளது. அதுமட்டுமல்லாமல், 'பிரேமம்' திரைப்படம் தமிழில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி மலையாள சினிமாவிற்கு ஒரு புதிய மார்க்கெட்டை உருவாக்கியது.


    இந்நிலையில், மலர் டீச்சரை மீண்டும் நினைவுப்படுத்தும் விதமாக இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'பிரேமம்' திரைப்படம் பிப்ரவரி 1-ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இந்த செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மலையாளத்தில் பிரபல இயக்குனராக இருப்பவர் அல்போன்ஸ் புத்திரன்.
    • இவர் தற்போது 'கிஃப்ட்' என்ற திரைப்படத்தை இயக்குகிறார்.

    'நேரம்' படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து 'பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான பிரேமம்', தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

    'பிரேமம்' படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான கோல்டு திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து இவர் தற்போது 'கிஃப்ட்' என்ற திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.


    இந்நிலையில், இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சமூக வலைதளத்தில் இருந்து வெளியேறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் நான் இனி எதையும் பதிவிடப்போவதில்லை. என் அம்மா, அப்பா, சகோதரிகளுக்கு இது பிடிக்கவில்லை. ஏனென்றால் எனது உறவினர்கள் அவர்களை பயமுறுத்துகிறார்கள். நான் அமைதியாக இருப்பது அனைவருக்கும் நிம்மதியை தரும் என நினைக்கிறேன். அதனால் அப்படியே இருக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


    பிரேமம் படம் மூலம் பிரபலமான மடோனா செபஸ்டியன், முத்த காட்சிக்கு நடிக்க மறுத்ததால் 3 படங்களை இழந்தேன் என்று கூறியிருக்கிறார். #MadonaSebastian
    பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான மடோனா செபஸ்டியன் ஜுங்கா படம் மூலம் விஜய்சேதுபதியுடன் 3வது முறை இணைந்து இருக்கிறார். அவரிடம் பேசினோம்.

    ஜுங்காவில் கவுரவ வேடத்தில் நடித்தது விஜய்சேதுபதிக்காகவா?

    விஜய்சேதுபதி என்மீது அபார நம்பிக்கை வைத்திருக்கிறார். அதுதான் முதல் காரணம். கதையை கேட்டேன். என் கதாபாத்திரம் மிகவும் பிடித்தது. எனவே சம்மதித்தேன். 5 நிமிடங்கள் வந்தாலும் பரவாயில்லை. ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும். அதுதான் முக்கியம்.

    தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று 4 மொழிகளில் நடிக்கும் அனுபவம்?

    நான் புதிதாக எதையாவது கற்றுக்கொண்டே இருக்க விரும்புவேன். எனவே மொழி பிரச்சினை இல்லை. எந்த மொழியாக இருந்தாலும் முன்கூட்டியே வசனங்களை வாங்கி வைத்து அதை மனப்பாடம் செய்துகொள்வேன். தமிழும் கற்றுக்கொண்டு வருகிறேன்.



    விஜய்சேதுபதி உங்களது அர்ப்பணிப்பை புகழ்கிறாரே?

    எனக்கு அப்படி எதுவும் தெரியவில்லை. அவரது பாராட்டு எனக்கு ஊக்கம் அளிக்கிறது. இன்னும் நன்றாக பண்ண வேண்டும் என்ற பொறுப்பு வருகிறது. ஒவ்வொரு படம் பார்க்கும்போதும் அதில் இருந்து ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்கிறேன்.

    எப்படி படம் தேர்வு செய்கிறீர்கள்? 

    முதலில் கதை என்ன சொல்ல வருகிறது என்று பார்ப்பேன். அடுத்து எனது கதாபாத்திரத்தின் தன்மை. முக்கியமாக இயக்குனரின் திறமை. இவைகளுக்கு பிறகு தான் சம்பளம் உள்ளிட்ட மற்ற வி‌ஷயங்கள்.

    காதல் அனுபவம்?

    என்னுடைய தனிப்பட்ட வி‌ஷயங்களை பேச விரும்பவில்லை. ஆனால் அப்படி ஒன்று இருந்தால் வெளிப்படையாக அறிவிக்க தயங்க மாட்டேன்.

    நீங்கள் அணியும் உடைகள் வித்தியாசமாக இருக்கிறதே?

    நான் இதை கவனித்தது இல்லை. ஆடைகள் நமது குணத்தை பிரதிபலிக்கும். எனவே பார்த்து பார்த்துதான் தேர்வு செய்வேன்.

    அதிகம் படங்களில் பார்க்க முடியவில்லையே?

    ஆமாம். லிப்லாக் முத்தத்திற்கு மறுத்ததால் கடந்த 3 மாதங்களில் 3 படங்களை இழந்துள்ளேன். அதற்கு எல்லாம் இப்போது நான் தயாராக இல்லை. கட்டிப்பிடிக்கும் காட்சியில் முதல்முறை நடித்தபோது அம்மாவுக்கு போன் பண்ணி அழுதிருக்கிறேன். அதுபோல நடிப்பது சிரமம். நான் கூச்ச சுபாவம் கொண்டவள். பிறரிடம் பேசவே பயப்படுவேன். எனக்கு ஒரு சின்ன தங்கை இருக்கிறாள். அவளுடன் நேரம் செலவிடவே அதிகம் விரும்புவேன்.



    நடிப்பு தவிர எதில் ஆர்வம்?

    நான் அடிப்படையில் ஒரு பாடகி. சொந்தமாக ஒரு இசைக்குழு நடத்தி வருகிறேன். ஆனால் படங்களுக்கு இசை அமைக்கும் அளவுக்கு நம்பிக்கை இல்லை.

    மலையாள நடிகர் சங்கத்தில் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளதே?

    நான் எந்த சங்கத்திலும் உறுப்பினராக இல்லை. இந்த வி‌ஷயத்தில் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை.

    நடிகை என்றால் பொது இடங்களில் தொல்லைகள் வருமே?

    ஆமாம். நடிகைகளும் சாதாரண மனிதர்கள் தான். இதை அனைவரும் உணர வேண்டும். நான் பெண்ணியவாதி அல்ல. ஆனால் ஆணும் பெண்ணும் சமமாக மதிக்கப்படவேண்டும். தனி மனித உரிமை மிக முக்கியம்.
    ×