என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Premature delivery"
- ரமேஷ்(25) என்பவர் சத்யா(22) என்பவரை இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய 3 நாளிலேயே காதலித்து திருமணம் செய்துள்ளார்
- இவர்களுக்கு அண்மையில் 8 மாத குறை பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த விஜயநல்லூர் அருகே வசித்து வரும் ரமேஷ்(25) என்பவர் சத்யா(22) என்பவரை இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய 3 நாளிலேயே காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில், இவர்களுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. 8 மாதத்திலேயே குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை, மருத்துவமனையில் இருந்து சில நாட்களுக்கு முன்புதான் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நேற்று தன்னுடைய குழந்தையை காணவில்லை தாய் சத்யா கூறியுள்ளார். அதனை தொடர்ந்து, உறவினர்கள் மற்றும் காவல்துறையினர் தேடியபோது அருகில் உள்ள கிணற்றில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.
இதனையடுத்து சோழவரம் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது, அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, தாய் சத்யாவே குழந்தையை மறைத்து எடுத்துச்சென்று கிணற்றில் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து சத்யாவிடம் சோழவரம் போலீசார் தீவிர விசாரணை செய்ததில், "குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை குறைந்த எடையில் இருக்கிறது.
இதனையடுத்து சத்யாவை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், "வருங்காலத்தில் ஊனமாக மாறிவிடுமோ என்ற பயம் இருந்தது. மேலும், தாய்ப்பாலும் சுரக்கவில்லை. இவை அனைத்தையும் தாண்டி, கணவர் என்னை விட குழந்தையிடம் பாசத்தை காட்ட தொடங்கிவிட்டார். இதனால்தான் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்தேன்" என்று அதிர்ச்சிகர தகவலை அவர் கூறியுள்ளார்
- சிறு நீரகங்களிலும் வீக்கத்துடனும், வலது கையில் உள்ள ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் இல்லாத நிலையும் இருந்து வந்தது.
- குழந்தையின் உடல்நிலை தற்போது முற்றிலும் தேறியுள்ளது.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பொன்ராணி என்ற இளம் பெண்ணுக்கு சமீபத்தில் குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. இருப்பினும், அக்குழந்தை பிறக்கும் போதே அதன் இரு சிறு நீரகங்களிலும் வீக்கத்துடனும், வலது கையில் உள்ள ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் இல்லாத நிலையும் இருந்து வந்தது.
மேலும், சுவாச கோளாறுடன் மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமமான நிலையில் செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் இருந்த அந்த குழந்தை நெல்லை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டது.
உடனடியாக மருத்துவ கல்லூரி டீன் ரேவதி பாலன் அறிவுறுத்தலின் பேரில் அந்த குழந்தைக்கு சம்பந்தப்பட்ட துறை டாக்டர்கள் மேற்பார்வையில் ஸ்கேன் எடுக்கப்பட்ட நிலையில் அந்த சி.டி ஸ்கேனில் குழந்தையின் வலது கையின் ரத்தக்குழாய் 1.8 மில்லி மீட்டர் அளவிற்கு தடைப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இந்நிலையில் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்கள், பச்சிளம் குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர், ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர், நரம்பியல் மருத்துவர் ஆகியோர் கொண்ட சிறப்பு மருத்துவக்குழு அக்குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர். 5 மணி நேர தொடர் அறுவை சிகிச்சைக்கு பிறகு வலது கையில் ரத்த ஓட்டம் சீராக்கப்பட்டது.
அடுத்தடுத்த சிகிச்சைக்கு பின்னர் வென்டிலேட்டர் செயற்கை சுவாசத்தில் இருந்த குழந்தை ஆக்சிஜன் உதவியில்லாமல் இயற்கை சுவாச நிலையை அடைந்து உள்ளது. மேலும், அக்குழந்தையின் உடல்நிலை தற்போது முற்றிலும் தேறியுள்ளது.
தென் தமிழகத்தில் சிறந்த சிகிச்சை அளிப்பதில் முக்கிய இடம் வகிப்பது நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. இதுபோன்ற பல அரிய அறுவை சிகிச்சைகள் செய்து தென் மாவட்ட மக்களின் நலம் பேணுவதில் கவனம் செலுத்தும் இந்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மற்றொரு சாதனையாக இந்த அறுவை சிகிச்சை அமைந்துள்ளது என மருத்துவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.
இதே போல கோவில்பட்டியை சேர்ந்த மோகன செல்வி என்ற 9 வயது சிறுமி கடந்த 10-ந்தேதி அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் ஏறி விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது ஆட்டோவின் முன் பகுதியில் இருந்த இரும்பிலான வேல் அவரது தொடையில் குத்தியது. இதனால் படுகாயம் அடைந்த சிறுமியை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.
- திருமங்கலம் அருகே குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை திடீரென இறந்தது.
- ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள அனுப்பப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது30). இவரது மனைவி ராணி(26). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. 2-வது குழந்தை பிறந்து இறந்துவிட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதத்தில் 3-வதாக குறைபிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை உடல் நலக்குறைவுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக குழந்தையை செக்கானூரணி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்தபோது இறந்துவிட்டது தெரியவந்தது.
இதுகுறித்து குழந்தையின் தாய் ராணி ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்