என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » president amit shah
நீங்கள் தேடியது "president amit shah"
எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுக்கு பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா டெல்லியில் இன்று விருந்தளித்தார்.
புதுடெல்லி:
நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக தலைமையில் ஓர் அணியும், காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டன.
மற்ற கட்சிகளை பொறுத்தமட்டில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்ற சில கட்சிகள் கூட்டணி அமைத்தும், பல கட்சிகள் தனித்தனியாகவும் களம் கண்டன.
மத்தியில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 272 இடங்களில் வெற்றி பெற வேண்டும். வருகிற 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்போதுதான் ஆட்சி அமைப்பது யார்? என்பது தெரியவரும்.
இதற்கிடையே, தேர்தல் முடிவடைந்ததும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாயின. அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறுதி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா டெல்லியில் இன்று விருந்தளித்தார்.
டெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில் நடைபெற்ற இந்த விருந்தில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி, பீகார் மாநில முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ் குமார், மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் (லோக் ஜனசக்தி), சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தமிழகத்தில் இருந்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, தேமுதிகவின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், ஜி.கே.வாசன், சரத்குமார், ஏ.சி.சண்முகம், கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மற்ற கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் விருந்தில் பங்கேற்றனர்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 74 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார். #AmitShah
லக்னோ:
2019 பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மத்தியிலுள்ள பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைகிறது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.
மத்தியில் ஆட்சி செய்யும் கட்சியை நிர்ணயம் செய்வதில் முக்கிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 80 தொகுதிகள் உள்ளது. 2014 தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி 73 தொகுதிகளில் வெற்றியை தனதாக்கியது.
உ.பி.யில் பெரிய கட்சிகளான சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. இதற்கிடையே, காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி களமிறக்கப்பட்டுள்ளார். எனவே, பா.ஜ.க.விற்கு இந்த முறை கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, உ.பி.யில் பா.ஜ.க.வின் வாக்குச்சாவடி அளவிலான பணியாளர்களிடம் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று கலந்துரையாடினார். அப்போது பேசிய அமித் ஷா, உ.பி.யில் 74 பாராளுமன்ற தொகுதிகளை பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
மாநிலத்தில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதிவாகும் வாக்குகளில் 50 சதவீதம் பா.ஜ.க.வுக்கு வரும் வகையில் தீவிரமாக கட்சி பணியாற்ற வேண்டும்.
மாயாவதி பலவீனமான அரசு வேண்டும் என்கிறார், அது ஊழலுக்குதான் வழிவகை செய்யும். நாங்கள் வலுவான அரசை அமைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். நரேந்திர மோடியால் மட்டுமே வலுவான அரசை கொடுக்க முடியும். எதிர்க்கட்சியினர் இதுபோன்ற தலைவரால் ஆட்சி செய்யப்படுவதை விரும்பவில்லை.
2014 தேர்தலில் உ.பி.யில் இருந்து 73 தொகுதிகள் கிடைத்ததால் மோடியால் மெஜாரிட்டி அரசு அமைக்க முடிந்தது என கூறப்பட்டது. இப்போது மாநிலத்தில் 74 தொகுதிகளில் கட்சியை வெற்றிபெற செய்ய பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 2019 தேர்தலில் பா.ஜ.க வெற்றியை தனதாக்கிவிட்டால். மாயாவதியோ, அகிலேஷ் யாதவோ ஆட்சிக்கு வரமுடியாது. அடுத்த 25 வருடங்களுக்கு பா.ஜ.க. தான் ஆட்சி செய்யும்.
கடுமையான உழைப்பாளியான மோடிக்கு இந்த முறை தேடித்தரும் வெற்றி நம் அர்சியல் எதிர்களின் இதயத்துடிப்பை நிறுத்துமாறு அமைவதை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். #AmitShah
பாஜக சார்பில் மால்டாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பாஜக தலைவர் அமித்ஷா, மேற்கு வங்காளத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில் பாராளுமன்ற தேர்தல் அமையும் என தெரிவித்தார். #BJP #AmitShah #ParliamentElection #TMC
கொல்கத்தா:
மேற்கு வங்காளம் மாநிலம் மால்டாவில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்கியுள்ளேன். இந்த தேர்தல் வங்காளத்துக்கு மட்டும் அல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது.
மேற்கு வங்காளத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில் பாராளுமன்ற தேர்தல் அமையும். இந்தத் தேர்தல், எதேச்சதிகாரமான திரிணாமுல் காங்கிரஸ் அரசு நிலைத்திருக்க வேண்டுமா அல்லது தூக்கி எறியப்பட வேண்டுமா என்பதை தீர்மானிப்பதாக இருக்க வேண்டும்.
பாஜக நடத்தும் யாத்திரையை வேண்டுமானால் மம்தா பானர்ஜியால் தடுத்து நிறுத்த முடியும். ஆனால் மக்களின் மனங்களில் இருந்து எங்களை நீக்க முடியாது.
தற்போது இங்கு வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் பெருகி விட்டன. ரவீந்திரநாத் தாகூரின் கீதங்கள் காற்றில் கலந்த வங்காளத்தில் இன்று வெடிகுண்டு புகை நாற்றம் கலந்துள்ளது.
பாஜகவால் மட்டுமே மேற்கு வங்காளத்தின் பழைய மகிமையை மீண்டும் கொண்டுவர முடியும். நியாயமான ஆட்சியை மோடியால் மட்டுமே வழங்க முடியும்.
சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மூலம் வங்காள மொழி பேசும் இந்து மக்கள் அனைவருக்கும் இந்தியாவில் தஞ்சம் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். #BJP #AmitShah #ParliamentElection #TMC
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X