என் மலர்
நீங்கள் தேடியது "prithvi raj"
- நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது.
- இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'வராக ரூபம்' பாடல் காப்புரிமை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. கன்னடத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். இப்படம் கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது.

காந்தாரா
இதனிடையே காந்தாராவில் இடம்பெற்றிருந்த சூப்பர்ஹிட் பாடலான வராக ரூபம் கேரளாவைச் சேர்ந்த பிரபல இசைக் குழுவான தாய்க்குடம் பிரிட்ஜ்ஜின் நவரசம் பாடலை காப்பி அடித்து உருவாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து, கேரளாவின் கோழிக்கோடு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், தாய்க்குடம் பிரிஜ் இசைக்குழுவின் அனுமதி இல்லாமல் வராக ரூபம் பாடலை திரையரங்கம் மற்றும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒளிபரப்ப இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஓடிடி தளத்தில் வராக ரூபம் பாடல் இடம்பெறாமல் காந்தாரா திரைப்படம் வெளியானது. அதன்பின்னர் இந்த பாடலுக்கான தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

காந்தாரா
இது தொடர்பான வழக்கில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் மற்றும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி ஆகியோருக்கு கேரள உயர் நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கியது. அத்துடன் வராகரூபம் பாடல் இடம்பெறாமல் படத்தை திரையிட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது. இந்த நிபந்தனையை எதிர்த்து இருவரும் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கேரள உயர்நீதிமன்றம் விதித்த ஜாமின் நிபந்தனைக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில் காந்தாரா படத்தின் கேரளா விநியோக உரிமையை பெற்றிருந்த பிருத்விராஜ் சுகுமாரன் மீது தொடரப்பட்ட பதிப்புரிமை மீறல் தொடர்பான வழக்குக்கு தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு.
- இயக்குனர் விபின் தாஸ் இயக்கத்தில் பிரித்விராஜ் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
- இந்த படத்திற்கு 'குருவாயூர் அம்பல நடையில்' என்று தலைப்பு வைத்துள்ளனர்.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் பிரித்விராஜ் 'ஜெய ஜெய ஜெய ஹே'படத்தை இயக்கிய விபின் தாஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்திற்கு 'குருவாயூர் அம்பல நடையில்' என்று தலைப்பு வைத்துள்ளனர்.

குருவாயூர் அம்பல நடையில்
இந்த படத்துக்கு கேரளாவில் உள்ள இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது. தெய்வத்தின் பெயரை படத்திற்கு வைத்து கேலி செய்வதற்குத் திட்டமிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுத்தனர். படத்தின் பெயரை காரணமாக வைத்து பிரித்விராஜுக்கு மிரட்டல் விடுப்பதை ஏற்க முடியாது என்று மலையாள பட உலகினர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

குருவாயூர் அம்பல நடையில் படக்குழு
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இதனை நடிகர் பிரித்விராஜ் தனது இணையப் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
#GuruvayoorAmbalaNadayil Starts rolling from today! ?❤️? #VipinDas @PrithvirajProd #E4Entertainment pic.twitter.com/Sim35eSpa6
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) May 12, 2023
- நடிகர் பிரித்விராஜ் ‘விலயாத் புத்தா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். இவர் இயக்குனர் ஜெயன் நம்பியார் இயக்கத்தில் 'விலயாத் புத்தா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, மறையூர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இப்படம் சந்தனக் கடத்தல் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் ஆக்ஷன் காட்சி ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த போது நடிகர் பிரித்விராஜுக்கு காலில் காயம் ஏற்பட்டது.இதையடுத்து அவர் உடனடியாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று (ஜூன் 26) நடிகர் பிரித்விராஜுக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாகவும் சிகிச்சைக்கு பிறகு அவர் சில வாரங்கள் ஓய்வில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது. மேலும், முழுமையாக குணமடைந்த பிறகே படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
- மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாரான மோகன் லால் இன்று அவரது 64 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
- இதுவரை அவர் 360 படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாரான மோகன்லால் இன்று அவரது 64 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதுவரை அவர் 360 படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சில மாதங்களுக்கு முன் லிஜொ ஜோஸ் இயக்கத்தில் மலைக்கோட்டை வாலிபன் படத்தில் நடித்தார். இப்படம் எதிர்பார்த்த அளவு மக்களிடம் வரவேற்பு இல்லை.
இவர் அடுத்ததாக எம்புரான், பரோஸ், கண்ணப்பா,விருஷபா, மோகன் லால் 360 திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
எம்புரான் திரைப்படத்தை நடிகர் பிரித்விராஜ் இயக்குகிறார். இதற்குமுன் மோகன்லால் நடித்த லூசிபர் திரைப்படத்தை பிரித்விராஜ் இயக்கினார். லூசிபர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.
அதைத்தொடர்ந்து மீண்டும் மோகன் லால் நடிப்பில் எம்புரான் படத்தை இயக்கிவருகிறார் பிரித்விராஜ். இது லூசிபரின் இரண்டாம் பாகமாக உருவாகி வருகிறது. தற்பொழுது திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது. மோகன்லாலின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் புது போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நேரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன்.
- கோல்டு படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
'நேரம்' படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான பிரேமம்', தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

கோல்டு
'பிரேமம்' படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கும் படம் 'கோல்டு'. பிரித்விராஜ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.

கோல்டு
இப்படத்தின் கதை, திரைக்கதை, அனிமேஷன், ஸ்டன்ட் என அனைத்தையும் அல்போன்ஸ் புத்திரன் செய்து முடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கோல்டு' திரைப்படம் செப்டம்பர் 8 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
#Gold Coming Soon! @GoldMovieOffl
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) August 27, 2022
#AlphonsePuthren #Nayanthara #ListinStephen #SupriyaMenon @magicframes2011 @prithvirajprod @poffactio pic.twitter.com/gg6GTSk0Qs