என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Priya Anand"

    • சமீபத்தில் வெளியான சுமோ படத்தில் பிரியா ஆனந்த் நடித்திருந்தார்.
    • நீச்சல் குளத்தில் குழிக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பிரியா ஆனந்த் ஈர்த்துள்ளார்.

    மிர்ச்சி சிவா நடிப்பில் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் உருவாகி சென்ற வாரம் வெளிவந்த திரைப்படம் சுமோ. இப்படத்தை இயக்குநர் எஸ்.பி. ஹோசிமின் இயக்கியிருந்தார்.

    ஜப்பான் நாட்டை சேர்ந்த சுமோ வீரர் Yoshinori Tashiro இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் பிரியா ஆனந்த், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 1.9 கோடி வசூல் செய்தது.

    இந்த படத்தில் நடத்திருந்த பிரியா ஆனந்த், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்டிவாக இருக்க கூடியவர். அவர் இன்று வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பிரியா ஆனந்த் ஈர்த்துள்ளார். இந்த வீடியோ அதிக லைக்குகளை பெற்று வருகிறது. 

    • இயக்குநர் ஹோசிமின் இயக்கத்தில் `சுமோ' என்கிற திரைப்படத்தில் நாயகனாக சிவா நடித்துள்ளார்.
    • சுமோ படம் வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியாகிறது.

    இயக்குநர் ஹோசிமின் இயக்கத்தில் `சுமோ' என்கிற திரைப்படத்தில் நாயகனாக சிவா நடித்துள்ளார். இப்படத்தில் பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடித்துள்ளார்.

    இப்படத்தில் யோகிபாபு, வி.டி.வி. கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள இப்படத்தில், மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    2021 ஆம் ஆண்டே வெளியாக வேண்டிய இத்திரைப்படம் கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் தள்ளிப்போனது.

    இந்நிலையில் சுமோ படம் வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் எண்டர்டெயின்மெண்ட் போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது. தற்பொழுது படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.

    படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஒரு ஜப்பானிய சுமோ வீரர் கதாநாயகன் சிவாவிடம் இருக்கிறார். இவரை எப்படி அவர் மிண்டும் ஜப்பானில் நடக்கும் சுமோ பந்தயத்தில் போட்டியிட உதவுகிரார் போன்ற காட்சிகள் டிரெய்லரில் நகைச்சுவையான பின்னணியில் இடம் பெற்றுள்ளது.

    படத்தின் பாடலான ஆழியே பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை மோகன்ராஜன், தீப்தி ரெட்டி வரிகளில் நரேச்ஜ், ஹெவின் ,நித்யஸ்ரீ மற்றும் ரோஸ் வெரோனிகா இணைந்து பாடியுள்ளனர்.

    • இயக்குநர் ஹோசிமின் இயக்கத்தில் `சுமோ' என்கிற திரைப்படத்தில் நாயகனாக சிவா நடித்துள்ளார்.
    • சுமோ படம் வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியாகிறது

    இயக்குநர் ஹோசிமின் இயக்கத்தில் `சுமோ' என்கிற திரைப்படத்தில் நாயகனாக சிவா நடித்துள்ளார். இப்படத்தில் பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடித்துள்ளார்.

    இப்படத்தில் யோகிபாபு, வி.டி.வி. கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள இப்படத்தில், மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    2021 ஆம் ஆண்டே வெளியாக வேண்டிய இத்திரைப்படம் கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் தள்ளிப்போனது.

    இந்நிலையில் சுமோ படம் வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் எண்டர்டெயின்மெண்ட் போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது. தற்பொழுது படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.

    படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஒரு ஜப்பானிய சுமோ வீரர் கதாநாயகன் சிவாவிடம் இருக்கிறார். இவரை எப்படி அவர் மிண்டும் ஜப்பானில் நடக்கும் சுமோ பந்தயத்தில் போட்டியிட உதவுகிரார் போன்ற காட்சிகள் டிரெய்லரில் நகைச்சுவையான பின்னணியில் இடம் பெற்றுள்ளது.

    • இயக்குநர் ஹோசிமின் இயக்கத்தில் `சுமோ’ என்கிற திரைப்படத்தில் நாயகனாக சிவா நடித்துள்ளார்.
    • சுமோ படம் வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியாகிறது

    இயக்குநர் ஹோசிமின் இயக்கத்தில் `சுமோ' என்கிற திரைப்படத்தில் நாயகனாக சிவா நடித்துள்ளார். இப்படத்தில் பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடித்துள்ளார்.

    இப்படத்தில் யோகிபாபு, வி.டி.வி. கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள இப்படத்தில், மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    2021 ஆம் ஆண்டே வெளியாக வேண்டிய இத்திரைப்படம் கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் தள்ளிப்போனது.

    இந்நிலையில் சுமோ படம் வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் எண்டர்டெயின்மெண்ட் போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது. தற்பொழுது படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று மாலை வடபழனியில் உள்ள பேலஸோ மாலில் நடைப்பெறுகிறது. மேலும் படத்தின் டிரெய்லரை படக்குழு இன்று மாலை 7 மணிக்கு வெளியிட இருக்கிறது.

    • இயக்குநர் ஹோசிமின் இயக்கத்தில் சுமோ என்கிற திரைப்படத்தில் நாயகனாக சிவா நடித்துள்ளார்.
    • சுமோ படம் வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியாகிறது.

    இயக்குநர் ஹோசிமின் இயக்கத்தில் சுமோ என்கிற திரைப்படத்தில் நாயகனாக சிவா நடித்துள்ளார். இப்படத்தில் பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடித்துள்ளார்.

    இப்படத்தில் யோகிபாபு, வி.டி.வி. கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள இப்படத்தில், மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    2021 ஆம் ஆண்டே வெளியாக வேண்டிய இத்திரைப்படம் கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் தள்ளிப்போனது.

    சுமோ படம் வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் எண்டர்டெயின்மெண்ட் போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது. தற்பொழுது படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. இந்நிலையில் படத்தின் தீம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

    • இயக்குநர் ஹோசிமின் இயக்கத்தில் சுமோ என்கிற திரைப்படத்தில் நாயகனாக சிவா நடித்துள்ளார்.
    • இப்படத்தில் பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடித்துள்ளார்.

    இயக்குநர் ஹோசிமின் இயக்கத்தில் சுமோ என்கிற திரைப்படத்தில் நாயகனாக சிவா நடித்துள்ளார். இப்படத்தில் பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடித்துள்ளார்.

    இப்படத்தில் யோகிபாபு, வி.டி.வி. கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள இப்படத்தில், மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    2021 ஆம் ஆண்டே வெளியாக வேண்டிய இத்திரைப்படம் கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் தள்ளிப்போனது.

    இந்நிலையில், 'சுமோ' திரைப்படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்தது ஆனால் சில சூழ்நிலை காரணமாக படத்தை வெளியிட முடியவில்லை. தற்பொழுது படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு நாளை மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். அதில் இந்த தடவை மிஸ்ஸே ஆகாது என தெரிவித்துள்ளனர்.

    • மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
    • இத்திரைப்படம் கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் தள்ளிப்போனது.

    இயக்குநர் ஹோசிமின் இயக்கத்தில் சுமோ என்கிற திரைப்படத்தில் நாயகனாக சிவா நடித்துள்ளார். இப்படத்தில் பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடித்துள்ளனர்.

    இப்படத்தில் யோகிபாபு, வி.டி.வி. கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள இப்படத்தில், மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    2021 ஆம் ஆண்டே வெளியாக வேண்டிய இத்திரைப்படம் கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் தள்ளிப்போனது.

    இந்நிலையில், 'சுமோ' திரைப்படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அக்டோபர் 18 ஆம் தேதி இத்திரைப்படம் திரைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான பிரியா ஆனந்த் ரமலான் நோன்பு இருப்பதால், அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக பரவிய தகவலுக்கு விளக்கம் அளித்திருக்கிறார்.
    ‘எதிர்நீச்சல், ‘வணக்கம் சென்னை’, ‘வை ராஜா வை’ படங்களில் நடித்த பிரியா ஆனந்த் இடையில் சிலகாலம் நடிக்காமல் இருந்தார்.அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘எல்கேஜி’ படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

    இப்போது புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கிறார். கூடவே ரம்ஜான் நோன்பு இருக்கிறார். இந்து மதத்தை சேர்ந்த பிரியா ஆனந்த் ரமலான் நோன்பு இருப்பது பரபரப்பானது.

    ஒருவேளை மதம் மாறிவிட்டாரா? என்ற ரீதியில் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து பிரியா ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    ‘அடிப்படையில் நான் இந்து. அதற்காக இந்து கடவுளை மட்டுமே கும்பிடுபவள் அல்ல. எனக்கு எம்மதமும் சம்மதம்தான். சர்ச்சுக்குப் போவேன், தர்காவுக்குப் போவேன். அதேபோல எனக்கு பிடித்த எல்லா கோயில்களுக்கும் போவேன். நம்மை மீறிய ஒரு சக்தி இந்த உலகத்தில் இருப்பதாகவே உணர்கிறேன்.

    மற்றபடி குறிப்பிட்ட ஒரு கடவுளின்மீது அதீத பக்தி எல்லாம் கிடையாது. இந்த வருடம் ரம்ஜான் நோன்பு ஆரம்பித்ததிலிருந்து இப்போது வரை அதற்கான சாராம்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்துகொள்ள முயற்சி செய்து வருகிறேன். நோன்பையும் என்னால் எவ்வளவு தூரம் கடைப்பிடிக்க முடியுமோ அவ்வளவு முயற்சிசெய்து கடைப்பிடித்து வருகிறேன். ஒரு மனிதனாய்ப் பிறந்தவன், முடிந்த அளவுக்கு மக்களின் நம்பிக்கைகளையும் மதித்து கடைப்பிடிக்க வேண்டும் என நினைக்கிறேன். அதனால்தான் இந்த முயற்சி’. இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வரும் பிரியா ஆனந்த், சமூக வலைதளத்தில் தன்னை கிண்டல் செய்தவருக்கு தக்க பதிலடி கொடுத்தார். #PriyaAnand
    நடிகை பிரியா ஆனந்த்தை கிண்டல் செய்யும் விதமாக டுவிட்டரில் ஒருவர் பதிவிட்டிருந்தார். அந்த டுவிட்டர் பதிவில் அவர் ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படத்தில் ஸ்ரீதேவி, பிரியா ஆனந்துடன் நடித்தார். தற்போது ஸ்ரீதேவி உயிருடன் இல்லை. ‘எல்.கே.ஜி.’ படத்தில் ஜே.கே.ரித்தீஷ் பிரியா ஆனந்துடன் நடித்தார். ஜே.கே.ரித்தீஷ் இறந்து விட்டார். பிரியா ஆனந்துடன் சேர்ந்து நடிப்பவர்கள் இறந்து போகிறார்கள். சக கலைஞர்களுக்கு கெட்ட ராசியின் அடையாளமாக பிரியா ஆனந்த் இருக்கிறார் என்று அவர் தெரிவித்திருந்தார்.

    அந்த டுவிட்டர் பதிவிற்கு பதில் அளித்து பிரியா ஆனந்த் கூறியிருப்பதாவது:- நான் வழக்கமாக உங்களை போன்றவர்களுக்கு பதில் அளிப்பது இல்லை. ஆனால் நீங்கள் தெரிவித்த விஷயம் மோசமானது என்பதை உங்களுக்கு புரிய வைக்க விரும்புகிறேன். உங்களை நான் பதிலுக்கு தரக்குறைவாக பேச மாட்டேன். உங்கள் டுவிட்டர் கணக்கின் பெயர் அன்பு என்று உள்ளது. அது உங்களுக்கு ஒரு நாள் கிடைக்கும் என்று நம்புகிறேன். அன்பு என்கிற ஒரு விஷயத்தால் மட்டுமே இந்த உலகம் இயங்குகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

    பிரியா ஆனந்த்தின் இந்த பதிவிற்கு பிறகு அந்த பதிவை போட்ட நபர் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார். #PriyaAnand

    பிரியா ஆனந்த் நடிப்பில் எல்கேஜி படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், பிரியா ஆனந்த் அளித்த பேட்டியில், ‌ஷங்கரிடம் உதவி இயக்குனராகவே தான் இந்தியா வந்ததாக கூறினார். #PriyaAnand
    வாமனன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா ஆனந்த் தொடர்ந்து எதிர்நீச்சல், அரிமா நம்பி என வேகமாக முன்னணி நடிகையானார். சில ஆண்டுகள் படங்கள் இல்லாமல் இருந்த அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் எல்கேஜி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

    அடுத்ததாக துருவ் விக்ரம் நடிக்கும் ஆதித்யா வர்மா படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில் ‘நான் வெளிநாட்டில் வளர்ந்தவள். ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்தவள்.

    இங்கே சென்னையில் என்னுடைய தாத்தாவும், பாட்டியும் மட்டும் தான் இருக்கிறார்கள். சினிமாவில் எனக்கு யாரையும் தெரியாது. ஒரு ஹீரோ எனக்கு வாய்ப்பு கொடுத்தார், தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் என்பதெல்லாம் எனக்கு நிகழவில்லை. எனக்கு காட்பாதர் மாதிரி யாரும் இல்லை.

    சொல்லப்போனால் சினிமாவுக்கு நான் வரவேண்டும் என்று ஆசைப்பட்டது நடிகையாக அல்ல. ‌ஷங்கர் சாரிடம் அசிஸ்டெண்ட்டாக வேண்டும் என்றுதான் எனக்கு ஆசை. அவருக்கு டீ, காபி கொடுக்கிற வேலை கிடைத்தால் கூட போதும் என்று, அப்படியொரு தவிப்புடன் இருந்தேன்.

    ‌ஷங்கர் சாரை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ஆனால், இப்போது ஐந்து மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிற நடிகையாகிவிட்டேன்’ என்று கூறியுள்ளார். #PriyaAnand #LKG #Shankar

    ஆர்ஜே பாலாஜி, பிரியா ஆனந்த் நடிப்பில் கே.ஆர்.பிரபு இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘எல்கேஜி’ படத்தின் விமர்சனம். #LKG #LKGMovie #LKGMovieReview
    ஆளுங்கட்சியில் கவுன்சிலராக இருக்கிறார் ஆர்ஜே பாலாஜி. அதே கட்சியில் பேச்சாளராக இருக்கிறார் இவரின் தந்தை நாஞ்சில் சம்பத். பேச்சாளராகவே இருந்து வரும் தந்தையை போல் இல்லாமல், கவுன்சிலரில் இருந்து எம்.எல்.ஏ, எம்.பி என அடுத்தடுத்து முன்னேற வேண்டும் என்று நினைக்கிறார் ஆர்ஜே பாலாஜி.

    இவருடைய மாமா மயில்சாமி துணையுடன் ஏரியா மக்களுக்கு நல்லது செய்து வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி. இந்நிலையில், இவரின் கட்சித் தலைவரான முதலமைச்சர், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். முதலமைச்சருக்கு அடுத்தபடியாக இருப்பவர் ராம்குமார். இவருக்கும் அதே கட்சியில் இருக்கும் ஜே.கே.ரித்திஷுக்கும் மோதல் இருந்து வருகிறது.

    முதலமைச்சர் மருத்துவமனையில் இருப்பதை அறிந்த ஆர்.ஜே.பாலாஜி, முதலமைச்சர் தொகுதியில் இடைத்தேர்தல் வர வாய்ப்பிருப்பதாக நினைத்து சென்னைக்கு வருகிறார். அங்கு சமூக வலைத்தளத்தில் சிறந்து விளங்கும் நாயகி பிரியா ஆனந்தை சந்திக்கிறார். 

    இவர் மூலம், சமூக வலைத்தளத்தில் பிரபலமாக என்னவெல்லாம் வழி இருக்கிறதோ, அதையெல்லாம் செய்து பிரபலமாகிறார் ஆர்ஜே பாலாஜி. இந்நிலையில், முதலமைச்சர் இறக்க, ராம்குமார் ஆர்ஜே பாலாஜியை அழைத்து பேசி இடைத்தேர்தலில் நிற்க வைக்கிறார்.

    இதற்கு ஜே.கே.ரித்திஷ் எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து விலகி, அதே தொகுதியில் தனித்துப் போட்டியிடுகிறார். இறுதியில், ஆர்ஜே பாலாஜி, ஜே.கே.ரித்திஷை எதிர்த்து தேர்தலில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்த ஆர்ஜே பாலாஜி, இப்படத்தில் நாயகனாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குறிப்பாக காமெடியில் அதகளப்படுத்தி இருக்கிறார். கதாநாயகனாக முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார். நடிப்பில் மட்டுமில்லாமல், கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்தி கைத்தட்டல் பெற்றிருக்கிறார்.

    நாயகி பிரியா ஆனந்த், ஆர்ஜே பாலாஜிக்கு ஆலோசனையாளராகவும், அறிவுரையாளராகவும் நடித்திருக்கிறார். திரையில் அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காமெடி வில்லனாக வரும் ஜே.கே.ரித்திஷ், பாலாஜிக்கு அப்பாவாக வரும் நாஞ்சில் சம்பத், மாமாவாக வரும் மயில்சாமி ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ராம்குமார் நடிப்பில், சிவாஜியும், பிரபுவும் வந்து செல்கிறார்கள்.

    ஆர்ஜே பாலாஜி மனதில் நினைத்ததை திறம்பட இயக்கி இருக்கிறார் இயக்குனர் கே.ஆர்.பிரபு. படம் பார்க்கும் போது சமீபத்தில் நடந்த அரசியல் விஷயங்கள் ஞாபகத்துக்கு வருகிறது. ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு படத்தை கொடுத்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

    லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள்...’ என்ற ரீமிக்ஸ் பாடல் தாளம் போட வைக்கிறது. விது ஐய்யனாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘எல்கேஜி’ ஜெயிச்சாச்சி. 
    துருவ் விக்ரம் நடிப்பில் மீண்டும் உருவாக இருக்கும் அர்ஜுன் ரெட்டி ரீமேக் படத்திற்கு தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. #DhruvVikram #Varma #ArjunReddy
    ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற தெலுங்கு படம், ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் படமானது. அதில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்க, பாலா டைரக்டு செய்தார். படம் முடிவடைந்த நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் ‘வர்மா’ படத்தை கைவிடுவதாக அறிவித்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ‘வர்மா’ படம் எதிர்பார்த்த அளவுக்கு விறுவிறுப்பாக இல்லை என்றும், ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் இருந்த உயிரோட்டம், ‘வர்மா’ படத்தில் இல்லை என்றும் கூறியதுடன், ‘வர்மா’ படத்தை வேறு ஒரு டைரக்டரின் இயக்கத்தில் திரும்ப எடுக்கப் போவதாக தயாரிப்பாளர் கூறியிருந்தார். கதாநாயகன் துருவ்வை தவிர, மற்ற நடிகர்-நடிகைகள் அனைவரையும் மாற்றப்போவதாகவும் அவர் கூறினார்.

    தற்போது இப்படத்திற்கு ‘ஆதித்ய வர்மா’ என்று தலைப்பு வைத்து படக்குழுவினர் பற்றிய விவரங்களையும் வெளியிட்டுள்ளனர். இதில் நாயகிகளாக பனிதா சந்து, பிரியா ஆனந்த் நடிக்கிறார்கள். கிரிசாயா இப்படத்தை இயக்குகிறார். ரவி கே சந்திரன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இ4 நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. 
    ×