என் மலர்
நீங்கள் தேடியது "Priyanka Chopra"
- பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகையாக பிரியங்கா சோப்ரா வலம் வந்தார்.
- ஹாலிவுட்டில் பல படங்களில் பிசியாக அவர் நடித்து வருகிறார்.
பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்த இவர் தொடர்ந்து ஹாலிவுட்டிலும் தடம் பதிக்க ஆரம்பித்தார்.
கடந்த 2018- ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜோன்சை, பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார். இருவரும் வாடகைத் தாய் மூலம் மால்தி மேரி என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். ஹாலிவுட்டில் பல படங்களில் பிசியாக அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரத்த காயங்களுடன் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட வீடியோவை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஹாலிவுட் திரைப்படமான தி பிளப் படத்தின் சண்டைக் காட்சி படமாக்கப்படும் போது இந்த காயங்கள் ஏற்பட்டதாக அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பிரியங்கா சோப்ராவின் அர்ப்பணிப்பை பாராட்டி வருகின்றனர்.
- 2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'தமிழன்' திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
- அமெரிக்காவில் குடியேறி ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த 2000-ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா, தமிழில் 2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'தமிழன்' திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். இவர் 2018-ம் ஆண்டு பாடகரும் நடிகருமான நிக் ஜோனாசை திருமணம் செய்துகொண்டார். அமெரிக்காவில் குடியேறி ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது 'தி பிளப்' என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். இதில் கடல் கொள்ளைக்காரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 19-ம் நூற்றாண்டில் மெர்சல் என்ற பெண் தனது குடும்பத்தை காப்பாற்ற போராடும் கதை அம்சத்தில் அதிரடி சண்டை சாகச படமாக உருவாகிறது. இந்த படத்தில் கார்ல் அர்பன், இஸ்மாயில் குரூஸ் கோர்டோவா, சபியா ஓக்லி-கிரீன் மற்றும் வேதாந்தேன் நைடூ உள்ளிட்ட திறமையான நடிகர்கள் நடிக்கின்றனர். இதில் மெர்சல் கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். இந்த படத்தினை இயக்குனர் பிராங்க் ஈ பிளவர்ஸ் இயக்குகிறார்.
இந்தநிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது நடிக்கும் 'தி பிளப்' படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் அவரது முகத்தில் போலியான ரத்தம் வழிவது போல இருந்தது. இது அவரது கடினமான உழைப்பையும், அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.
படப்பிடிப்பின் போது தனக்கு ஏற்படும் அனுபவத்தை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்ள இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டுள்ளார். மேலும், அவர் ஜான் சீனா நடிக்கும் 'ஹெட்ஸ் ஆப் ஸ்டேட்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இன்ஸ்டாகிராமில் 91.3 மில்லியன் ஃபாலோயர்களுடன் பிரதமர் மோடி மூன்றாம் இடத்தில் இருந்து வந்தார்.
- கிரிக்கெட் வீரர் விராட் கோலி 271 மில்லியன் ஃபாலோயர்களுடன் முதல் இடத்தில் உள்ளார்
பிரபல சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை விட அதிக ஃபாலோயர்களை பெற்று பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். கிரிக்கெட் வீரர் விராட் கோலி 271 மில்லியன் ஃபாலோயர்களுடன் முதல் இடத்திலும், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா 91.8 மில்லியன் ஃபாலோயர்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
இந்தியாவில் இவர்களுக்கு அடுத்தபடியாக இன்ஸ்டாகிராமில் 91.3 மில்லியன் ஃபாலோயர்களுடன் பிரதமர் மோடி மூன்றாம் இடத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை ஷ்ரத்தா கபூரின் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை 91.4 மில்லியன் அதிகரித்துள்ளது. இதனால் பிரதமர் மோடியை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார் ஷ்ரத்தா கபூர்.
கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஷ்ரத்தா கபூர் நடித்த 'ஸ்ட்ரீ 2' படம் வெளியாகி கவனம் ஈர்த்துவரும் நிலையில் ஒரே வாரத்தில் படத்தின் வசூல் ரூ.300 கோடியைத் தாண்டியுள்ளது. இந்த படத்தின்மூலம் தற்போது அதிகம் பேசப்பட்டுவரும் ஷ்ரத்தா கபூரின் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கையும் இதனாலேயே அதிகரித்துள்ளது.
85.1 மில்லியன் ஃபாலோயர்களுடன் ஆலியா பட், 80.4 மில்லியன் ஃபாலோயர்களுடன் கத்ரினா கைஃப் மற்றும் 79.8 மில்லியன் ஃபாலோயர்களுடன் தீபிகா படுகோன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஹாலிவுட் வெப் தொடரான சிட்டாடல் தொடரில் பிரியங்கா சோப்ரா, ரிச்சர்ட் மேடன் ஆகியோர் நடித்துள்ளனர்.
- இந்த தொடரின் இந்தி பதிப்பில் சமந்தா, வருண் தவான் நடித்து இருக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சமந்தா விவாகரத்து, மயோசிடிஸ் நோய் பாதிப்பு போன்ற பிரச்சினைகளால் சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்து விட்டு இப்போது மீண்டும் பிஸியாக நடிக்க தொடங்கி உள்ளார். ஹாலிவுட் வெப் தொடரான சிட்டாடல் தொடரில் பிரியங்கா சோப்ரா, ரிச்சர்ட் மேடன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த தொடரின் இந்தி பதிப்பில் சமந்தா, வருண் தவான் நடித்து இருக்கிறார்கள். ராஜ் அண்ட் டிகே இயக்கி உள்ளனர்.
சிட்டாடல் தொடர் விரைவில் ஓ.டி.டி.யில் வெளியாக இருக்கும் நிலையில் லண்டனில் இந்த தொடரின் சிறப்பு காட்சி திரையிடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரியங்கா சோப்ரா, சமந்தா ஆகியோர் பங்கேற்று ஒருவரையொருவர் சந்தித்து நலம் விசாரித்துக்கொண்டனர். அப்போது இருவரும் போட்டோவுக்கு போஸ் கொடுத்த புகைப்படம் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- பிரியங்கா சோப்ரா நம்மை பெரியளவில் சிந்திக்கவும் தூண்டுகிறார்.
- ஆளுமைமிக்கவர்களின் நட்பு சிறிது நேரம் கிடைத்தாலும் நல்லது.
பிரியங்கா சோப்ரா நடிப்பில் கடந்த ஆண்டு ஓ.டி.டி.யில் வெளியான 'சிட்டாடல்' வெப் தொடர் உலகளவில் ரசிகர்களை ஈர்த்தது. இதன் முந்தைய பாகமாக 'சிட்டாடல் ஹனி பன்னி' தற்போது வெளியாகி இருக்கிறது.
மயோசிடிஸ் நோயின் தாக்கத்தில் இருந்து மீண்டு வந்துள்ள சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த பட விழாவில் சமந்தா கலந்து கொண்டு தனது சினிமா பயணம் குறித்து மனம் திறந்து பேசினார்.
சமந்தா பேசும்போது, "சிட்டாடல் உலகளவில் ரசிகர்களை கவர்ந்த வெப் தொடர். இதில் நானும் முக்கிய பங்கு வகித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
பிரியங்கா சோப்ரா பெண்களுக்கு ஒரு சிறந்த ரோல் மாடல் ஆவார். அவர் நம்மை பெரியளவில் சிந்திக்கவும் தூண்டுகிறார். அவர் போன்ற அதிகார, ஆளுமைமிக்க பெண்களை சந்திப்பதும், பழகுவதும் அலாதி மகிழ்ச்சிக்குரியது.
திறமைமிக்கவர்களுடன் பழகும்போது, நமது சவாலும் பெரிதாகி கொண்டு போகிறது. எனவே ஆளுமைமிக்கவர்களின் நட்பு சிறிது நேரம் கிடைத்தாலும் நல்லது. வாழ்க்கையில் சவால்கள் எப்போதுமே முக்கியமானது", என்றார்.
சமந்தா தற்போது 'தும்பத்' என்ற இன்னொரு வெப் தொடரில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பெரும் பகுதி படப்பிடிப்பு அமேசான் காடுகளில் நடத்தப்படும் என்றும் ராஜமவுலி ஏற்கனவே அறிவித்துள்ளார்.
- வில்லன் கதாப்பாத்திரத்திற்கு மலையாள நடிகர் பிரித்விராஜ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு. தமிழில் விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி, கில்லி ஆகியவை மகேஷ் பாபு தெலுங்கில் நடித்த படங்களின் ரீமேக் ஆகும்.
பூரி ஜெகன்னாத், திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ், உள்ளிட்ட தெலுங்கின் முன்னணி இயக்குனர்கள் பலருடன் பணியாற்றிய மகேஷ் பாபு தனது 29 ஆவது படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். இந்த படத்தை இயக்க உள்ளவர், தெலுங்கு சினிமாவை உலகளவில் திரும்பிப்பார்க்க வைத்த ராஜமௌலி.
இவர்கள் இருவரின் காம்போ பல காலமாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. முன்னதாக சாம்ராட் என்ற படத்தை மகேஷ் பாபுவை வைத்து ராஜமௌலி இயக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் மகேஷ் பாபுவின் 29 ஆவது படத்தை ராஜமௌலி இயக்குகிறார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

கடைசியாக திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான குண்டூர் காரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. ராஜமௌலியைப் பொறுத்தவரை பாகுபலி 2 பாகங்களுக்கு பிறகு RRR மூலம் மற்றொரு ஹிட் கொடுத்தார். இந்நிலையில் ராஜமௌலி இயக்கத்தில் SSMB29 திரைப்படம் அதிக பட்ஜட்டில் ஹாலிவுட் தரத்தில் உருவாக உள்ளது.
அனைத்து மொழிகளில் இருந்தும் முன்னணி நடிகர் நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. உலகத்தை சுற்றும் ஒரு சாகச பயணத்தை பின்னணியாக கொண்டு தயாராகும் படம் இது என்றும் பெரும் பகுதி படப்பிடிப்பு அமேசான் காடுகளில் நடத்தப்படும் என்றும் ராஜமவுலி ஏற்கனவே அறிவித்துள்ளார்.
படத்தின் நாயகியாக பிரியங்கா சோப்ராவும் வில்லன் கதாப்பாத்திரத்திற்கு மலையாள நடிகர் பிரித்விராஜ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

திரைப்படத்தின் இசையை எம்.எம் கீரவாணி மேற்கொள்கிறார். ஒளிப்பதிவை பிஎஸ் வினோத் மேற்கொள்ளவுள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் இந்த ஜனவரியில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்பதை குறிக்கும் விதமாக ராஜமௌலி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிங்கத்தை கூண்டுக்குள் வைத்தது போலவும், ராஜமௌலி பாஸ்போர்ட்டை கையில் வைத்திருப்பது போலவும் கிராபிக்சில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடும் மகேஷ் பாபுவை படப்பிடிப்புக்காக தனது கட்டுப்பாட்டில் எடுத்து போல் நகைசுவையாக ராஜமௌலி இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு நடிகர் மகேஷ் பாபு, "ஒரு வாட்டி கமிட் பண்ணிட்டனா, என் பேச்ச நானே கேட்க மாட்டேன்" என ரிப்ளை செய்துள்ளார். இந்த வசனம் அவர் நடித்த போக்கிரி படத்தில் இடம்பெற்றது.
இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. ராஜமௌலியின் இன்ஸ்டாகிராமில் பதவிடப்பட்ட இந்த ரீலிஸ் வீடியோ சில மணி நேரங்களில் 1.4 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா.
- இவர் உக்ரைன் மக்களை சந்தித்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக நடிகை பிரியங்கா சோப்ராவையும் ஃபோர்ப்ஸ் இதழ் தேர்ந்தெடுத்திருந்தது.
கடந்த 2018-ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜோனாசை, பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார். நடிப்பது மட்டுமில்லாமல் யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராகவும் செயல்பட்டு வருகிறார்.

பிரியங்கா சோப்ரா
சமீபத்தில் உக்ரைன், ரஷ்யா இடையே ஏற்பட்ட போரினால் உக்ரைன் மக்கள் பலர் அகதிகளாக இடம் பெயர்ந்தனர். இவர்களுக்கு உலக தலைவர்கள் உதவ வேண்டும் என்று குரல் கொடுத்த பிரியங்கா சோப்ரா, அதற்கான நன்கொடையும் திரட்டி வந்தார்.
இந்நிலையில் பிரியங்கா சோப்ரா, போலந்து நாட்டில் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ள உக்ரைன் நாட்டு மக்களை நேரில் சென்று சந்தித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதளபக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
The Blue Dot Centers play a very necessary role, & in many ways are a rare safe haven for women & especially the children. They offer so much…access to important, relevant information, mental health support, mother and baby areas to allow them much needed privacy…@unicef pic.twitter.com/jFb33iV96C
— PRIYANKA (@priyankachopra) August 2, 2022
- பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா.
- இவருக்கு அண்மையில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பிறந்தது.
பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக நடிகை பிரியங்கா சோப்ராவையும் ஃபோர்ப்ஸ் இதழ் தேர்ந்தெடுத்திருந்தது.
கடந்த 2018 ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜோனாசை, பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இருவரும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தனர். அந்த பெண் குழந்தையின் பெயர் மல்டி மேரி. இந்த குழந்தை பிறந்ததை இந்த தம்பதியினர் அவர்களது சமூக வலைதள பக்கத்தின் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினர்.

பிரியங்கா சோப்ரா பகிர்ந்த புகைப்படம்
அதில், 'வாடகை தாய் மூலமாக எங்கள் குழந்தையை பெற்றதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம், இந்த ஸ்பெஷலான நேரத்தில் நாங்கள் எங்கள் குடும்பத்தில் முழு கவனத்தையும் செலுத்த இருக்கிறோம், அனைவருக்கும் நன்றி" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா தனது இரண்டாவது குழந்தையையும் வாடகைத்தாய் மூலம் பெற்றெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி தீயாக பரவி வருகிறது. மேலும், இவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



🤯 <-- Me when I saw my new wax figure at Madame Tussauds in NYC @nycwax (Coming to other locations soon!!) @TussaudsSydney@MTsSingapore@TussaudsBK@TussaudsHK@nycwax@MadameTussaudspic.twitter.com/XzRw9LjHJW
— PRIYANKA (@priyankachopra) February 7, 2019
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி (வயது 34). இவர் தனது காதலி மேகனை (37) கடந்த ஆண்டு மே மாதம் 19-ந் தேதி மணந்தார்.
தற்போது இளவரசி மேகன் கர்ப்பமாக உள்ளார்.
இவருக்கு வரும் மே மாதம் பிரசவம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கிறிஸ்தவ மத முறைப்படி குழந்தைக்கு பெயர் சூட்டும் ஞானஸ்நான நிகழ்ச்சியின்போது, குழந்தையின் ஞானத்தாய், தந்தை யாக யார் இருக்கப்போகிறார்கள் என்ற கேள்வி சூடுபிடித்து வருகிறது.
முதலில் ஹாரியின் மூத்த சகோதரர் இளவரசர் வில்லியம், கேத் மிடில்டன் தம்பதியர்தான், இளவரசி மேகன் பெற்றெடுக்கப்போகிற குழந்தையின் ஞானப்பெற்றோர் என கூறப்பட்டது. பின்னர் மேகனின் தோழி ஜெசிகா முல்ரோனியும், அவரது கணவரும் என பேசப்பட்டது.
ஆனால் இப்போது மேகன், தனது பிரியத்துக்கு உரிய தோழியான இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவை ஞானத்தாயாகவும், நிக் ஜோனாஸ்சை ஞானத்தந்தையாகவும் அமர்த்திக்கொள்ள பரிசீலிப்பதாக அவரது செய்தி தொடர்பாளர் ஆண்ட்ரூ போல்கே தகவல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இளவரசர் ஹாரி, மேகன் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டது நினைவுகூரத்தக்கது.#PriyakaChopra #PrincessMeghan