search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pro Pakistan slogan"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநிலங்களவை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல்.
    • குரல் எழுப்பியவர்களை கைது செய்ய வேண்டும் என பா.ஜனதா வலியுறுத்தல்.

    கர்நாடகா மாநிலத்தில் நான்கு மாநிலங்களவை இடம் காலியாக உள்ளது. நான்கு இடத்திற்கு காங்கிரஸ் தரப்பில் மூன்று பேரும், பா.ஜனதா- மதசார்பற்ற ஐக்கிய தளம் சார்பில் இருவரும் போட்டியிட்டதால் தேர்தல் நடத்தப்பட்டது.

    காங்கிரஸ் தரப்பில் நிறுத்தப்பட்ட மூன்று வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். அவர்களில் ஒருவர் சயீத் நசீர் ஹுசைன். இவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் சட்டமன்ற வளாகத்தில் அவர்களுடைய ஆதரவாளர்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷம் எழுப்பியதாக பா.ஜனதாவினர் குற்றஞ்சாட்டினர்.

    மேலும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். மேலும், கோஷம் எழுப்பியதற்கான ஆடியோ ஆதாரத்தையும் வழங்கினர்.

    இந்த நிலையில் இன்று காலை கர்நாடகா சட்டமன்ற கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பியவர்களை கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஆர். அசோகா உள்ளிட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ.-க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    உடனடியாக முதல்வர் சித்தராமையா எழுந்து "நான் உங்களிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளேன். அரசு நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக உள்ளது. ரிப்போர்ட் வந்த பிறகு நாங்கள் யாரையும் விடமாட்டோம். தடய அறிவியல் ஆய்வகத்திற்கு ஆடியோ அனுப்பப்பட்டுள்ளது. அதன் ரிப்போர்ட் கிடைத்தபின், நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

    • பாஜகவிற்கு தான் பாகிஸ்தான் எதிரி நாடு எங்களுக்கு அண்டை நாடுதான்
    • ஜின்னாவின் சமாதிக்குச் சென்று அவரைப் போல் மதச்சார்பற்ற தலைவர் வேறு யாரும் இல்லை என்று கூறிய எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னம் விருதை பாஜக கொடுத்துள்ளதே

    பாஜகவிற்கு தான் பாகிஸ்தான் எதிரி நாடு எங்களுக்கு அண்டை நாடுதான் என கர்நாடக காங்கிரஸ் சட்டமேலவை உறுப்பினர் பி.கே.ஹரிபிரசாத் கூறியுள்ளார்.

    கர்நாடகா மாநிலத்தில் நான்கு மாநிலங்களவை இடம் காலியாக உள்ளது. நான்கு இடத்திற்கு காங்கிரஸ் தரப்பில் மூன்று பேரும், பா.ஜனதா- மதச்சார்பற்ற ஐக்கிய தளம் சார்பில் இருவரும் போட்டியிட்டதால் தேர்தல் நடத்தப்பட்டது.

    காங்கிரஸ் தரப்பில் நிறுத்தப்பட்ட மூன்று வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். அவர்களில் ஒருவர் சயீத் நசீர் ஹுசைன். இவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் சட்டமன்ற வளாகத்தில் அவர்களுடைய ஆதரவாளர்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷம் எழுப்பியதாக பா.ஜனதாவினர் குற்றஞ்சாட்டினர். மேலும், இது தொடர்பாக புகார் அளிக்க வேண்டும் என வற்புறுத்தினர். மேலும், கோஷம் எழுப்பியதற்கான ஆடியோ ஆதாரத்தையும் வழங்கினர்.

    இது தொடர்பான விவாதத்தில் பேசிய பி.கே.ஹரிபிரசாத், "பாஜகவை பொறுத்தவரை பாகிஸ்தான் எதிர் நாடாக இருக்கலாம், ஆனால் எங்களை பொறுத்தவரை பாகிஸ்தான் அண்டை நாடுதான். லாகூரில் உள்ள ஜின்னாவின் சமாதிக்குச் சென்று அவரைப் போல் மதச்சார்பற்ற தலைவர் வேறு யாரும் இல்லை என்று கூறிய எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னம் விருதை பாஜக கொடுத்துள்ளதே. அப்போது பாகிஸ்தான் எதிரி நாடாக இல்லையா? என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

    இந்தியாவுக்கு எதிராக நான்கு முறை போர் நடத்திய பாகிஸ்தானை "எதிரி தேசம்" என்று காங்கிரஸ் கட்சி கூறவில்லை. ஆகையால் "தேச விரோதமாக காங்கிரஸ் கட்சி நடந்து கொண்டுள்ளது என்று பாஜக விமர்சித்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறுகையில் "நாங்கள் குரலை ஆடியோவை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம். அறிக்கை வரும்போது, சிலர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கமிட்டது உண்மையாக இருந்தால், அந்த நபர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். அவர்களை காப்பாற்றும் என்ற கேள்விக்கே இடமில்லை" என்றார்.

    • மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சயீத் நசீர் ஹுசைன் வெற்றி.
    • அவரது ஆதரவாளர்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்டதாக பா.ஜனதா குற்றச்சாட்டு.

    கர்நாடகா மாநிலத்தில் நான்கு மாநிலங்களவை இடம் காலியாக உள்ளது. நான்கு இடத்திற்கு காங்கிரஸ் தரப்பில் மூன்று பேரும், பா.ஜனதா- மதசார்பற்ற ஐக்கிய தளம் சார்பில் இருவரும் போட்டியிட்டதால் தேர்தல் நடத்தப்பட்டது.

    காங்கிரஸ் தரப்பில் நிறுத்தப்பட்ட மூன்று வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். அவர்களில் ஒருவர் சயீத் நசீர் ஹுசைன். இவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் சட்டமன்ற வளாகத்தில் அவர்களுடைய ஆதரவாளர்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷம் எழுப்பியதாக பா.ஜனதாவினர் குற்றஞ்சாட்டினர். மேலும், இது தொடர்பாக புகார் அளிக்க வேண்டும் என வற்புறுத்தினர். மேலும், கோஷம் எழுப்பியதற்கான ஆடியோ ஆதாரத்தையும் வழங்கினர்.

    சயீத் நசீர் ஹுசைன்

    இதனால் கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டது. சட்டமன்ற வளாகத்திற்குள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய ஜனதாவினர் வலியுறுத்தினர்.

    இதனைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் சித்தராமையாக கூறுகையில் "நாங்கள் குரலை ஆடியோவை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம். அறிக்கை வரும்போது, சிலர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கமிட்டது உண்மையாக இருந்தால், அந்த நபர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். அவர்களை காப்பாற்றும் என்ற கேள்விக்கே இடமில்லை" என்றார்.

    ×