என் மலர்
நீங்கள் தேடியது "Problem Conceiving"
- பெண் கருவுறுதலை அறிவதற்கு முன்பு கருச்சிதைவு உண்டாகலாம்.
- கரு வளராத காரணத்தாலும் கருச்சிதைவுகள் உண்டாகக் கூடும்.
கர்ப்ப காலத்தில் கருச்சிதைவு என்பது 20 வாரங்களுக்கு முன்பு அதாவது ஐந்து மாதங்களுக்கு முன்பு நடைபெறும் ஒரு தன்னிச்சை இழப்பு ஆகும். கருச்சிதைவு, 10 சதவீதம் முதல் 20 சதவீதம் கர்ப்பங்களில் உண்டாகிறது. ஆனால் இதன் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். ஏனெனில் சில பெண்களுக்கு கருச்சிதைவு என்பது தாங்கள் கர்பம் என்று தெரியும் முன்னரே நிகழ்ந்துவிடும்.
ஒரு பெண் கருவுறுதலை அறிவதற்கு முன்பு கருச்சிதைவு உண்டாகலாம். கருவை சுமப்பதில் ஏதேனும் தவறு இருக்கலாம். இது அரிதாக இருந்தாலும் இதுவும் ஒரு காரணம். கரு வளராத காரணத்தாலும் கருச்சிதைவுகள் உண்டாகக் கூடும்.
கர்ப்பத்தின் 12 வது வாரங்களுக்கு அதாவது மூன்று மாதங்களுக்கு முன்கூட்டியெ இவை பெருமளவு நிகழும் என்பதால் இந்த காலத்தில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
கருவானது சரியான காலத்தில் வளர்ச்சியடையாததால் பெரும்பாலான கருச்சிதைவுகள் உண்டாகிறது. எனினும் பெரும்பாலும் கருச்சிதைவுகளில் சுமார் 50 சதவீதம் குரோமோசோம்களுடன் தொடர்பு கொண்டது.
குரோமோசோம்களால் உண்டாகும் அசாதாரணங்களால் கருச்சிதைவு உண்டாகக் கூடும். கருமுட்டை வெளுத்து காணப்படுவது, கரு உருவாகாத போது கருமுட்டை உண்டாவது. கர்ப்பகாலத்தில் ரத்த போக்கு உண்டு என்றாலும் அரிதாக சிலருக்கு மட்டுமே இருக்கும். எனினும் இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது.

சில துளி ரத்த போக்கு வந்தாலே மருத்துவரை அணுகினால் கரு பாதிப்பு இருந்தாலோ கரு சேதமடைவதாக இருந்தாலோ காப்பாற்ற வாய்ப்பு உண்டு.
சில சமயங்களில் கருவை தாங்கும் வலுவுக்கு கர்ப்பப்பை இல்லை என்பதும் காரணமாகும். கருச்சிதைவு பெரும்பாலும் அறிகுறிகள் தெரியாது. அல்ட்ரா சவுண்ட்டு பரிசோதனை செய்தால் மட்டுமே தெரியும்.
கர்ப்பிணி பெண்ணின் உடல் நிலையும் கூட கருச்சிதைவுக்கு வழிவகுக்கும். கர்ப்பபையில் பிரச்சனைகள், கர்ப்பப்பை அசாதாரணங்கள், பலவீனமான கர்ப்பப்பை வாய் திசுக்கள் கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்க கூடும். அதே நேரம் கர்ப்பகாலத்தில் எந்தவிதமான வேலையும் செய்யக்கூடாது எப்போதும் ஓய்வாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
கர்ப்பிணி பெண்கள் தங்கள் மருத்துவர் முழு ஓய்வு எடுக்க அறிவுறுத்தாத பட்சத்தில், அவர்கள் தங்கள் அன்றாட வேலைகளை தாராளமாக பார்க்கலாம். அதிக எடை தூக்குவது, அதிக நேரம் நிற்பது, அதிகம் பயணிப்பது போன்றவற்றை தவிர்க்கவும்.
ஆனால் கர்ப்பகாலத்தில் ஜாகிங், சைக்கிள் பயிற்சி, கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வதால், ஏதேனும் பாதிப்பு உண்டா என்பதை முன்கூட்டியே மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது.
அதேபோன்று அதிக பளு தூக்கும் பணி அல்லது அதிக அளவு பணி செய்பவர்கள் கருச்சிதைவு குறித்து பயம் இருந்தால் மருத்துவரிடம் பேசுவது நல்லது.
- கருத்தரிப்பு நிகழவில்லை எனில் மலட்டுத்தன்மை என்று சொல்லப்படுகிறது.
- இருவருக்கும் மலட்டுத்தன்மை பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மலட்டுத்தன்மை என்பது கணவன் மனைவி இருவரும் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொண்டாலும் தொடர்ந்து ஒரு வருடங்கள் வரை கருத்தரிப்பு நிகழவில்லை எனில் அது கருவுறாமை அல்லது மலட்டுத்தன்மை என்று சொல்லப்படுகிறது.
இந்த கருவுறாமை என்பது பெண்ணின் பிரச்சனை மட்டுமல்ல. ஆண்களும் மலட்டுத்தன்மையை கொண்டிருக்கலாம். ஆண்களுக்கும், பெண்களுக்கும் என இருவருக்குமே கருவுறுதல் அல்லது மலட்டுத்தன்மை பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பெண் மலட்டுத்தன்மைக்கான காரணங்கள்
ஒழுங்கற்ற மாதவிடாய்
மாதவிடாய் இல்லாமல் போவது
ஹார்மோன் பிரச்சனைகள்
ஃப்லோபியன் குழாய் அடைப்பு
செலியாக் நோய்
சிறுநீரக நோய்
எக்டோபிக் கர்ப்ப்பம்
இடுப்பு அழற்சி நோய்
பிட்யூட்டரி சுரப்பி கோளாறுகள்
பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்
சிக்கிள் செல் இரத்த சோகை
எண்டோமெட்ரியோசிஸ் (கருப்பை நார்த்திசுக்கட்டிகள் மற்றும் பாலிப்கள்)
தைராய்டு நோய்
அதிக வயதை கொண்டிருத்தல்
உடல் பருமன் அல்லது மிக குறைவான எடை கொண்டிருப்பது
இனப்பெருக்க அமைப்பை சேதப்படுத்தும் சில பாலியல் பரவும் நோய்த்தொற்றுகள் இருப்பது.
ஆண் மலட்டுத்தன்மைக்கான காரணங்கள்
வெரிகோஸ் வெயின் பிரச்சனை (விரிவாக்கபட்ட நரம்புகள்)
விந்தணுக்கள் வைத்திருக்கும் சாக்
மரபணு கோளாறுகள் (சிஸ்டிக், ஃபைப்ரோசிஸ்)
இறுக்கமான ஆடைகள் அணிவதால் விந்தணுக்கள் அதிக வெப்பத்தை சந்திதல்
விந்தணுக்கள் குறைவாக இருப்பது (டெஸ்டோஸ்ட்ரான் அளவு குறைவது)
முன் கூட்டிய விந்து வெளிபாடு
விந்தணுக்களின் வடிவம், இயக்கம், அது உள் செல்லும் நேரம் போன்ற குறைபாடு
மருத்துவ நிலைமகள் மற்றும் மருந்துகள் எடுத்துகொள்வது.
- பெண்ணுக்கு பலவிதமான வளர்ச்சிதை மாற்ற பிரச்சனைகள் வரலாம்.
- தைராய்டு என்பதை சாதாரண பிரச்சனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
குழந்தையின்மை சிகிச்சையில் தைராய்டு என்பது மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. தைராய்டை மிகப்பெரிய பிரச்சனை என்று நினைத்து கவலைப்படுகிறார்கள்.

தைராய்டு பிரச்சனையால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
குழந்தையின்மையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை இருக்கும் நிலையில், அதை முழுமையாக கட்டுப்படுத்தினால் அவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். அதனால் பின் விளைவுகள் எதுவும் ஏற்படாது.
அதே நேரத்தில் தைராய்டு என்பதை சாதாரண பிரச்சனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனென்றால் தைராய்டு ஹார்மோன் நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்களின் வளர்சிதை மாற்றத்துக்கான அடிப்படையான பல விஷயங்களை கவனிக்கிறது.
குறிப்பாக, குழந்தை பேறு என்று எடுத்துக் கொண்டால் கருமுட்டைகள், விந்தணுக்கள், கர்ப்பப்பை ஆகிய அனைத்தும் சீராக செயல்பட வேண்டும்.

ஒரு பெண் கர்ப்பம் தரிக்கின்ற போது உருவாகிற நஞ்சு, குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான சில ஊட்டச்சத்துக்கள் ஆகிய அனைத்துமே சீராக இருக்க வேண்டும்.
ஆனால் தைராய்டு பிரச்சனை இருந்தால் கர்ப்பம் மட்டுமல்ல, ஆரோக்கியமாக குழந்தை பேறு பெறுவது வரைக்கும் அந்த பெண்ணுக்கு பலவிதமான வளர்ச்சிதை மாற்ற பிரச்சனைகள் வரலாம்.
எனவே கர்ப்ப காலகட்டத்தில் கண்டிப்பாக தைராய்டு என்பது ஒவ்வொரு செல்களின் வளர்சிதை மாற்றத்துக்கும் அத்தியாவசியமான ஒன்றாகும்.
இந்த தைராய்டு குறைவதால் பல நேரங்களில் குழந்தையின்மை பிரச்சனையும் ஏற்படலாம். மேலும் தைராய்டு பாதிப்பால் குழந்தை பேறு ஏற்படும் போது கருச்சிதைவு, குறை பிரசவம், குறைபாடுள்ள குழந்தை பிறக்கலாம்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளான ரத்த சர்க்கரை அளவு குறைதல், வயிற்றில் குழந்தை இறப்பு, குழந்தையின் வளர்ச்சி குறைபாடுகள், பெண்களுக்கு உடல் எடை கூடுவதால் பிரச்சனை, ரத்த அழுத்தம், உப்பு சத்து ஆகிய அனைத்துமே தைராய்டு பிரச்சனை இருக்கிற பெண்களுக்கு அதிகம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
- கருவுறுதலுக்கு புரோஜெஸ்ட் டிரோன் ஹார்மோன் மிகவும் அவசியம்.
- ஆரோக்கியமான மாதவிடாய்க்கு முக்கியமானது.
புரோஜெஸ்ட்டிரோன் என்பது ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியின் இரண்டாம் பாதியில், கருமுட்டை விடுப்பின் பின்னர் கருப்பையில் உற்பத்தி செய்யப்படும் முதன்மை இனப்பெருக்க ஹார்மோன் ஆகும்.

கருவுறுதலுக்கு இது மிகவும் அவசியம். அதனால் இதை கர்ப்பத்தின் ஹார்மோன் என்றும் அழைக்கிறார்கள். இது, ஆரோக்கியமான மாதவிடாய்க்கு முக்கியமானது.
குறைவான புரோஜெஸ்ட்டிரோன் ஒரு பெண்ணின் இளமை பருவத்தில் அல்லது மாதவிடாய் முடிவதற்கு அதாவது மெனோபாசுக்கு முன்னர் ஏராளமான பாதிப்புகளை உண்டாக்கும்.

அறிகுறிகள்
சராசரி மாதவிடாய் சுழற்சி 28-30 நாட்கள் ஆகும். 25 நாட்களுக்கும் குறைவான மாதவிடாய் சுழற்சிகள், ஒரேமாதத்தில் இருமுறை வருகிற மாதவிடாய், சிறிது சிறிதாக வரும் ஸ்பாட்டிங் போன்றவை குறைந்த புரோஜெஸ்ட்டிரோன் அளவைக் குறிக்கலாம். இதனால் கருப்பையில் எண்டோமெட்ரியத்தின் வளர்ச்சியை சரிவர பராமரிக்க முடியாது. எனவே ஸ்பாட்டிங் ஏற்படலாம்.

புரோஜெஸ்ட்டிரோன் குறைவால் முதல் மூன்று மாத கர்ப்பங்களில் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. குறைந்த புரோஜெஸ்ட்டிரோன் அளவு ஈஸ்ட்ரோஜன் ஆதிக்கத்திற்கு பங்களிக்கலாம். அல்லது ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் இடையே ஏற்றத்தாழ்வு ஏற்படலாம். இதனால் கடுமையான ரத்தப்போக்கு, வலி மிகுந்த மாதவிடாய், மனநிலை மாற்றங்கள், தூக்கமின்மை ஏற்படுகிறது.
உணவுப் பழக்கவழக்கங்கள்
புரோஜெஸ்ட்டிரோன் அளவை அதிகரிக்க உணவில் வைட்டமின் சி அதிகமுள்ள சிட்ரஸ் பழங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை தரும்.
ஹார்மோன் ஆரோக்கியத்திற்கு நல்ல கொழுப்புகள் முக்கியம். ஏனெனில் அவை இனப்பெருக்க ஹார்மோன்களுக்கான கட்டுமானத்திற்கு அத்தியாவசியமானது.

அலிசி விதை (பிளாக் சீட்), ஆளி விதை, சியா விதை, பூசணி விதை, தேங்காய், பாதாம், பிரிம்ரோஸ் எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவை நல்லது.
புரோஜெஸ்ட்டிரோன் அளவை அதிகரிக்க வைட்டமின் பி6 மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளும் உதவியாக இருக்கும்.
மத்தி மீன், சால்மன், சூரை மீன், ஆட்டுக்கல்லீரல், கொண்டைக்கடலை, வேர்க்கடலை, பட்டாணி, பருப்பு வகைகள், அவகேடோ, பெர்ரி பழங்கள், முட்டை ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மனஅழுத்தம் புரோலாக்டின் மற்றும் கார்டிசோல் இரண்டையும் அதிகரிக்கலாம். இது கரு முட்டை வெளிவரும் போது புரோஜெஸ்ட்டிரோன் அளவை பாதிக்கும். சீரான உடற்பயிற்சி, யோகா, இறை தியானம் நல்ல பலனைத் தரும்.
சித்த மருத்துவம்
1) குமரி லேகியம்: காலை, இரவு 1-2 கிராம் வீதம் உணவுக்கு பின் சாப்பிட வேண்டும்.
2) சதாவரி லேகியம்: காலை, இரவு 1-2 கிராம் வீதம் உணவுக்கு பின் சாப்பிட வேண்டும்.
3) கல்யாண முருங்கை இலை, விஷ்ணுகிரந்தி, அசோகப்பட்டை, கரு நொச்சி, ஆலம் விழுது, கருஞ்சீரகம், சதகுப்பை, மரமஞ்சள் போன்ற மூலிகைகளில் செய்த ஏராளமான மருந்துகள் உள்ளன. இவற்றை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட்டால் நல்ல பலனைப் பெறலாம்.
- 40 வயதிலும் பல பெண்கள் கருவுற்றிருக்கிறார்கள்.
- குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி உள்ளது.
முதல் குழந்தைக்கு பிறகு உடனடியாக அடுத்த குழந்தையா அல்லது சில வருடங்கள் காத்திருக்க வேண்டுமா? நீண்ட வருடங்கள் ஆகிவிட்டால் குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி தம்பதிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தலாம். அதோடு உடல்நலம், பொருளாதார சூழ்நிலை போன்ற பல காரணங்கள் இதில் அடங்கும்.
ஆனால் 40 வயதிலும் பல பெண்கள் கருவுற்றிருக்கிறார்கள். சில பெண்களுக்கு குடும்ப அரவணைப்பு முழுமையாக கிடைக்கும் போது இரண்டு குழந்தைகளை வெற்றிகரமாக வளர்க்க முடியும்.
முதல் குழந்தைக்கு பிறகு மீண்டும் இரண்டாவது கர்ப்பம் தரிக்க விரும்பினால் பின்வரும் காரணங்களை கவனித்து முடிவு செய்யலாம்.

உடல் ஆரோக்கியம்:
முதல் கர்ப்பம் சிக்கல் இல்லாமல் ஆரோக்கியமானதா அல்லது சிக்கல் நிறைந்ததா என்பதை யோசிக்க வேண்டும். முதல் குழந்தைக்கு எடைகுறைப்பு, வேறு குறைபாடுகள் இருந்தால் 2-வது குழந்தைக்கு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் திட்டமிடலாம்.
வயது:
கருத்தரிக்க பெண்களின் வயது மிகவும் முக்கியம். 2-வது குழந்தை பெற்றுக்கொள்வதிலும் வயது முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனென்றால் பெண்கள் வளர வளர அவர்களின் மாதவிடாய் சுழற்சி முறையிலும், கருமுட்டை உற்பத்தி அடிப்படையிலும் மாற்றங்கள் ஏற்படும்.
மேலும் கருத்தரிக்க பெண்ணின் வயது எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு ஆண்களின் வயதும் மிகவும் முக்கியம். ஏனென்றால் 35 வயதை கடந்தவுடன் ஆண்களுக்கு விந்தணுக்களின் தரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும்.

திட்டமிடுதல்:
இன்றைய சூழலில் 2-வது குழந்தைக்கு திட்டமிடுவதற்கு நிதியும் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் செலவுகள் இரட்டிப்பாகும். நீங்களும், உங்கள் துணையும் பொருள் ஈட்டினாலும் இரண்டு குழந்தைகளின் கல்வி, மருத்துவம் போன்ற இதர செலவுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
கணவன் -மனைவி இருவரும் இணைந்து பரஸ்பரமாக ஒருவருக்கொருவர் பேசிய பிறகு இரண்டாவது குழந்தைக்கு காத்திருக்கலாம். இல்லை என்றால் கருத்துவேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
குழந்தை பராமரிப்பு:
குழந்தையை பராமரிப்பதில் முதல் குழந்தைக்கு நேரத்தை ஒதுக்குவது மற்றும் குழந்தையை கவனிக்க குடும்ப உறுப்பினர்கள் உள்ளனரா என்பதையும் கவனிக்க வேண்டும். இல்லை என்றால் இரண்டு குழந்தைகளை பராமரிப்பதிலும் சிரமம் ஏற்படும்.
வயது இடைவெளி என்பது முதல் குழந்தைக்கும் 2-வது குழந்தைக்கும் இடையே உள்ள வயது இடைவெளியை கவனிக்க வேண்டும்.

பரிசோதனை:
முதல் குழந்தை சிசேரியனாக இருந்தால் குறைந்தது 2 வருடங்களாவது இரண்டாவது குழந்தைக்கு காத்திருக்க வேண்டும். ஏனெனில் சிசேரியனுக்கு பிறகு மருத்துவரின் அறிவுரையை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வழக்கமான பரிசோதனையை கணவன் - மனைவி இருவரும் செய்ய வேண்டும். ஆரம்பத்திலேயே இரும்புச்சத்து குறைபாடு ஏதேனும் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். ஏனெனில் பிரசவித்த பின்னர் ஏராளமான பெண்கள் ரத்த சோகை சிக்கலை சந்திக்கிறார்கள்.